ரூ.98 கோடியில் மும்பையில் வீடு: குடியிருந்த வீட்டை சொந்தமாக்கிய டாடா குழுமத் தலைவர்!

By Durga
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் மும்பையில் ரூ.98 கோடி விலையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
3 CLAPS
0

தெற்கு மும்பை பகுதியில் ஜஸ்லோக் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டடத்திற்கு 33 சவுத் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது 28 மாடிகள் கொண்ட உயரமான கட்டடம் ஆகும். டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இதில் சொகுசு டூப்ளே வீட்டை வாங்கியுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையின் பெடர் சாலையில் உள்ள ஆடம்பரமான டவரில் டாடா குழுமத் தலைவர் ரூ.98 கோடி மதிப்பில் இந்த டூப்ளே வீட்டை வாங்கி இருக்கிறார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார் என அவரின் பதவி காலம் நீட்டித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவி நீட்டிப்பு அறிவித்த அடுத்த சிறிது நேரத்திலேயே என்.சந்திரசேகரன் இந்த வீட்டை வாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்த வெளியான தகவலின்படி,

2021 ஆம் நிதியாண்டில் சந்திரசேகரனின் ஆண்டு ஊதியம் சுமார் ரூ.91 கோடியாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் டாடா நிறுவனம் கைப்பற்றிய ஏர் இந்தியாவின் தலைவராகவும் டாடா குழுமத் தலைவரே நியமிக்கப்படுவார் என மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

மும்பையின் பெடர் சாலையில் உள்ள ஆடம்பரமான டவரில் டாடா குழுமத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.98 கோடிக்கு டூப்ளே வீட்டை வாங்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைத் தகவலின்படி, இது "உயர்நிலை பிரிவு கொள்முதல்" என சந்தை பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற பிறகு என்.சந்திரசேகர் செய்த முதல் அதிகத் தொகை தனிப்பட்ட பரிவர்த்தனை இதுதான் எனக் கூறப்படுகிறது.

ஜஸ்லோக் மருத்துவமனைக்கு அருகில் தெற்கு மும்பையில் அமைந்துள்ள தொழிலதிபரின் புதிய முகவரியானது 33 சவுத் என அழைக்கப்படுகிறது. இது மும்பையின் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. 28 மாடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கக் கூடியது.

மேலும், இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் வெளியான அறிக்கை குறித்து பார்க்கையில், என்.சந்திரசேகரனும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே டூப்ளே இல்லத்தில் குத்தைக்கு தங்கியிருந்தனர். தற்போது இவர்களது புதிய தங்குமிடமானது 11-வது மற்றும் 12-வது தளங்களில் அமைந்திருக்கிறது. இது சுமார் 6000 சதுர அடி பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

N Chandrasekaran, Chairman, Tata Sons

2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு என்.சந்திரசேகரன் 33 சவுத் முகவரியில் குடியேறி இருக்கிறார்.

தற்போது 33 சவுத் முகவரியை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார் டாடா குழுத் தலைவர் என்.சந்திரசேகரன், ஒரு சதுர அடிக்கு ரூ.1.6 லட்சம் என்ற வீதம் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீடானது என்.சந்திரசேகரன், அவரது மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களிடம் சொத்தை விற்றது ஜிவேஷ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் எனக் கூறப்படுகிறது. இந்த உயரமான டவர் ஆனது போஸ்வானி மற்றும் வினோத் மிட்டல் ஆகியோரால் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை ஆகும்.

Latest

Updates from around the world