டீ விற்று மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டி, சர்வதேச பிராண்ட்டாக மாற்றியுள்ள புனே சாய்வாலா!

By jayashree shree|14th Jan 2019
தலைப்பு விழி அகல செய்யினும், காலை 10 டூ 6 போரிங் வேலையால் ஏற்படும் களைப்பினை களைக்க உதவும் ‘டீ’ பானத்தை விற்பனையை தொழிலாக்கி, மாதம் ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார் சாய் வாலா நவ்நாத்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close
"

செம வொர்க் லோடில் கொட்டாயி எட்டிப் பார்க்கும் போது, அனிச்சையாய் வாயில் வரும் வார்த்தை ‘ஒரு டீ அடிக்கலாமா?’... ஆம், அனேக மக்களின் விடியலிலும், சோர்விலும் வரும் உறக்கத்திலிருந்து உற்சாகத்துக்கு மாற்றும் முதல் பானம், ‘டீ’. பல சமயம் ஏழைகளின் பசியை போக்குபவனாக விளங்கும் தேநீர், காபி ஷாப்களின் வருகையால் அதன் சுவையை இழந்த நிலையில், அதன் சுவையை மீட்டெடுத்து தேநீர் பிரியர்களின் பிரியத்தை பெற்றிருக்கிறார் நவ்நாத் யல்வ்லே, மகாராஷ்டிராவின் புனே நகரில், டீக் கடை நடத்தி மாதம் ரூ 12 லட்சம் வருமானம் ஈட்டும் தொழில்முனைவர்.

பட உதவி : mystartupstory

மகாராஷ்டிராவின் புனே நகரில் வெகு பிரபலம் நவ்நாத்தின் “‘யல்வ்லே டீ ஹவுஸ்”. வெகு விரைவில் அதன் கிளைகள் பாங்காக்கிலும், துபாயிலும் உதயமாக உள்ளன. ஆனால், இவையனைத்தும் ஓவர் நைட்டிலோ, ஒரே பாட்டிலோ முன்னேறும் நம்மூம் ஹீரோக்கள் போன்று நடந்ததல்ல. உண்மையில், 35 ஆண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. நவ்நாத்தின் தந்தை தஷ்ராத் யேவுலே 1823ம் ஆண்டு பிழைப்புக்காக பால் விற்று வந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாய் புனேவுக்கு குடிபெயர்ந்து குட்டி டீ ஸ்டாலை திறந்துள்ளார். 

பட உதவி : mystartupstory
”எங்கள் குடும்பம் பால் வணிகம் செய்து வந்தது. எங்க அப்பா 1983ம் ஆண்டு புனேவில் டீக் கடையை தொடங்கி, இரு கிளைகளாக வளரும் அளவுக்கு உழைத்தார். அப்பா புராந்தர் பகுதியில் இருந்து புனே நகரத்திற்கு வந்து தேயிலை விற்பனையின் மூலம் தான் எங்களை வளர்த்தார். ஆனால் அவருடைய கனவு சொந்த பிராண்ட் அல்லது தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்பதே. அதனால், நாங்கள் இப்போது தான் அவருடைய கனவை உணர்ந்து, எங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.”

என்கிறார் நவ்நாத். தந்தையின் மறைவுக்குப் பிறகு, சகோதர்களுடன் இணைந்து தொழிலைத் தொடர்ந்துள்ளார்.

“2011ம் ஆண்டில் சிறந்ததொரு தேநீர் பிராண்ட்டை உருவாக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. ஏனெனில், புனேவில் ஜோஷி வடேவாலா, ரோஹித் வடேவாலா போன்ற பெரும் காபி பிராண்ட்கள் இருந்தாலும், சாய் லவ்வர்களுக்கு இங்கு டீ ஷாப்பே இல்லை. ஆனால், புனேவில் பெருவாரியான மக்கள் தேநீர் மீது காதல் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு சுவைமிகு தேநீர் எங்கும் கிடைப்பதில்லை. அதை நான் உருவாக்க முடிவெடுத்தேன்.”

நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு இடங்களுக்கு பயணித்து தேயிலையின் தரம் குறித்து ஆராய்ந்த பிறகே, ‘யல்வ்லே டீ ஹவுஸ்’ என்ற ஒரு பெரிய தேநீர் பிராண்ட்டை உருவாக்க முயன்றோம்,” என்று அவரது சக்சஸ் பார்மூலாவை பகிர்ந்து கொண்டார்.

“பால், டீத்தூள், மசாலா, சர்க்கரை என அனைத்தும் நிலையான விகிதத்தை கொண்டுள்ளோம். எல்லா பொருட்களும் எங்கள் வீட்டிற்குள் பேக்கிங் செய்யப்பட்டு எங்கள் கிளைகளுக்கு கொடுக்கப்படுகிறது. டீ போடுவதற்கு முன்பு, பால் இருமுறை கொதிக்க வைக்கப்படுகிறது. எங்களது அனைத்து கிளைகளிலும் இதே பார்மூலா பயன்படுத்தபடுவதால், எங்கு சுவைப்பினும் அதே சுவையே இருக்கும்,” என்கிறார் அவர்.

பட உதவி : sakaltimes

\" src=\"https://images.yourstory.com/cs/18/7be54820-08d9-11e9-bb47-3d9d98ed1e05/PuneChaiwala1547451755114.png\" style=\"float: left; margin-right: 20px; width:50%; height:auto\" align=\"center\">

பட உதவி : sakaltimes

புனேவில் உள்ள யல்வ்லேவின் இரு கிளைகளிலும் நாளொன்றுக்கு 4,000 கப் தேநீர் விற்பனை ஆகின்றன. ஒரு மாதத்துக்கு இரு கிளைகளுக்கும் 1000 கிலோ சக்கரை மற்றும் 300 கிலோ டீத் தூள் தேவைப்படுகிறது என்கிறார் நவ்நாத்.

இத்தகைய வெற்றியை பெற வேண்டுமாயின், ஒருவர் தொழில் முனைவு அறிவாற்றலும், மேலாண்மை பட்டமும் பெற்றிருந்தாலே சாத்தியம் என்று சிலர் அனுமானிக்கக் கூடும். ஆனால், நவ்நாத் பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.

“நாங்க யாருமே பத்தாவது தாண்டி படித்திடவில்லை. பட்டம் பெறாமலே தொழிலதிபர்களாய் சாதித்து நிற்கும் அனைவருமே எங்களுடைய ஹீரோக்கள், ரோல்மாடல்கள்,” என்றார் நவ்நாத்.

அதிகாலை 5மணி முதல் இரவு 9.30மணி வரை செயல்படும் தேநீர் விடுதியில், ஒரு டீ கப்பின் விலை ரூ10 மட்டுமே. நாள்தோறும் நூற்றுக்கணக்கான கப் டீ விற்றாலும், சுகாதாரத்தில் குறையின்றி கவனித்து கொள்கின்றனர்.

’‘வருங்காலத்தில் 100 கிளைகளாக விரிவாக்கம் செய்து, 10,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, ப்ரான்சைஸ் உரிமம் கேட்ட 42 பேரின் விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். எங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை கிராமப்புற உற்பத்தியாளர்களிடமிருந்தே பெற்று வருகிறோம்,” என்கிறார் சாய்வாலா நவ்நாத்.

தகவல் உதவி : sakaltimes  


"