TechSparks2019- தொழில் முனைவு சுற்றுச் சூழலை கொண்டாடும் யுவர்ஸ்டோரி-ன் ஆண்டு மாநாடு!

By YS TEAM TAMIL|12th Oct 2019
டெக்ஸ்பார்க்ஸ் 10வது பதிப்பில் இந்தியாவின் வளர்ச்சியை சாத்தியப்படுத்த தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் சார்ந்த தீர்வை உருவாக்குவது குறித்து தொழில்முனைவோர், கொள்கை உருவாக்குபவர்கள், முதலீட்டாளர்கள், புதுமை படைப்பவர்கள் போன்றோர் ஒருங்கிணைந்து கலந்துரையாடுகின்றனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் எதிர்காலம் எப்படி இருக்கும்? எத்தகைய புதிய தொழில்நுட்பங்களும், வளர்ந்து வரும் துறைகளும் ஸ்டார்ட் அப் உலகில் ஆதிக்கம் செலுத்த உள்ளது? வணிகத் தலைவர்கள், கொள்கை உருவாக்குபவர்கள், ஸ்டார்ட் அப் ஆக்சலரேட்டர்கள் / இன்குபேட்டர்கள் எவ்வாறு இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுசூழலுக்கு சக்தியளிக்கப்போகிறார்கள்? மாற்றத்தை ஏற்படுத்தியோர் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களிடமிருந்து வளர்ந்து வரும் தொழில்முனைவோர் எத்தகைய உத்திகளை கற்றறியலாம்? வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்த ஸ்டார்ட் அப்பை முதலீட்டாளர்களால் இந்த இரண்டு நாட்களில் கண்டறியமுடியுமா?


இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் உலகம் முழுவதும் இருந்து ஒன்று திரண்டுள்ள மிகச்சிறந்த தலைவர்கள் டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டின் பத்தாவது பதிப்பில் பதிலளிக்க உள்ளனர். இந்த நிகழ்வு பெங்களூருவின் தாஜ் யஷ்வந்த்பூரில் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதி நடக்கிறது.


பல்வேறு மாஸ்டர்கிளாஸ், தயாரிப்பு அறிமுகங்கள், பயிற்சி பட்டறைகள், நிபுணர்களின் குழு விவாதங்கள், கொள்கைகள் பற்றிய விவாதங்கள், தயாரிப்புகளின் கண்காட்சிகள், முதலீட்டாளர்களின் கலந்துரையாடல், மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.


அத்துடன் இவர்கள் இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த வருடாந்திர நிகழ்வில் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் ஒருங்கிணைய உள்ளனர்.

1

யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஷ்ரத்தா ஷர்மா கூறும்போது,

“இந்த 10வது ஆண்டு யுவர்ஸ்டோரிக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஒவ்வொரு டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டிலும் எங்கள் துடிப்பான பார்வையாளர்களுடன் தொழில்நுட்பம், வணிகம், புதுமை, தொழில்முனைவு ஆகியவை குறித்து சுவாரஸ்யமாக கலந்துரையாடி ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை ஆராய முற்படுகிறோம். புதிய ஸ்டார்ட் அப்களை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழலில் இணைத்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு மற்றுமொரு சக்திவாய்ந்த பேச்சாளர்கள் குழுவை அறிமுகப்படுத்துகிறோம். இவர்கள் தங்களது நுண்ணறிவுகளைக் கொண்டு நீங்கள் திறம்பட செயல்பட உதவுவார்கள்,” என்றார்.

பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா வரவேற்புரையில் குறிப்பிடும்போது,

”நாம் ஒவ்வொரு முறை அழுத்தத்தையும் எதிர்பாராத சூழலையும் சந்திக்க நேரும்போது நம்மை உற்சாகப்படுத்த யுவர்ஸ்டோரி போன்ற தளமும் ஷ்ரத்தா ஷர்மா போன்ற தலைவரும் அவசியம். இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் சிறந்த நிறுவனங்களை உருவாக்கி வரும் இங்குள்ள தொழில்முனைவோர்களுக்கு வாழ்த்துக்கள்,” என்றார்.

இந்த நிகழ்வில் முக்கிய உரையாற்றிய கர்நாடக துணை முதல்வர் டாக்டர் அஸ்வத் நாராயணன் கூறும்போது,

”பெங்களூருவில் இருந்து கூடுதலாக 50 யூனிகார்ன் உருவாகி டெக்ஸ்பார்க்ஸ்2024 நிகழ்வில் பங்கேற்கும் என்று திடமாக நம்புகிறேன். இந்த நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலுக்கு மிகச்சிறந்த வகையில் ஆதரவளித்து, இந்த ஸ்டார்ட் அப் இயக்கத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் யுவர்ஸ்டோரிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

ஃபயர்சைட் அரட்டை இல்லாத தொழில்நுட்ப நிகழ்வா? இந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்விலும் அத்தகைய உரையாடல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக Sequoia Capital - நிர்வாக இயக்குநர், ராஜன் ஆனந்தன்; சாஃப்ட்பேங்க் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் - நிர்வாக பார்ட்னர், முனீஷ் வர்மா; குவால்காம் வென்சர்ஸ் - நிர்வாக இயக்குநர், வர்ஷா தாகரே; ஓலா - இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, பவிஷ் அகர்வால்; ஃப்ளிப்கார்ட் – சிஇஓ, கல்யாண் கிருஷ்ணமூர்த்தி; ஃபேப் இந்தியா – தலைவர், வில்லியம் பிசெல், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் போன்ற வணிகத்தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உடனான உரையாடல் இடம்பெறுகின்றன.


கூடுதல் சிறப்பாக இந்தாண்டு டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ் போன்ற திரைப்பட நடிகர்களுடனான உரையாடல்களும் இடம்பெறுகின்றன. மேலும் நிதி தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், உணவு தொழில்நுட்பம், உள்ளடக்கம், மின் விளையாட்டுகள், வேளாண் தொழில்நுட்பம், சுகாதார பராமரிப்பு போன்ற பிரிவுகளில் செயல்படும் நிபுணர்கள் மற்றும் துறைசார் தலைவர்கள் புதுமையான கண்டுபிடிப்புகள் எவ்வாறு இந்தத் துறைகளின் வருங்காலத்தை மாற்றியமைக்கும் என்பது குறித்து ஆராய உள்ளனர்.


Zerodha – நிறுவனர் மற்றும் சிஇஓ, நிதின் கமாத்; Drivezy – இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, அஷ்வர்யா பிரதாப் சிங்; பாலிசிபஜார் – இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, யாசிஷ் தாஹியா; Delhivery – இணை நிறுவனர், சூரஜ் சஹாரன்; ஸ்மார்ட் சஸ்டைனபிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் – தலைவர், கண்ணன் சக்கரவர்த்தி; மொபைல் ப்ரீமியர் லீக் (MPL) – இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, சாய் ஸ்ரீனிவாஸ், ஷேர்சாட் – இணை நிறுவனர், ஃபாரித் அஹ்சன், க்ரேட் லெர்னிங் – இணை நிறுவனர் மற்றும் இயக்குநர், ஹரி கிருஷ்ணன் நாயர்; Loco Content – இணை நிறுவனர், சுஷில் குமார்; OkCredit – சிஇஓ, ஹர்ஷ் பொகர்னா, IndiaLends – நிறுவனர் மற்றும் சிஇஓ, கௌரவ் சோப்ரா, CoinDCX – சிஇஓ, சுமீத் குப்தா, 1Mg – இணை நிறுவனர், கௌரவ் அகர்வால்; Grow Fit – நிறுவனர் மற்றும் சிஇஓ, ஜோத்ஸ்னா பட்டாபிராமன், நிஞ்சாகார்ட் – இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, திருகுமரன் நாகராஜன், Licious – நிறுவனர், அபய் ஹஞ்சுரா, NeuroLeap – நிறுவனர் மற்றும் சிஇஓ, குமார் பாக்ரோடியா; NetApp – சீனியர் விபி & எம்டி, தீபக் விஸ்வேஷ்வரய்யா; Yulu – இணை நிறுவனர் அமீத் குப்தா போன்றோர் இதில் அடங்குவர்.


Xiaomi India துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் இந்திய சந்தையில் சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்களின் பயணம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து உரையாற்றுகிறார்.


டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்க்கும் அம்சம் Tech30 பட்டியல். திறமையான, இளம் ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிப் பயணத்தையும் வெற்றியையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கு தேர்வுசெய்யப்படுவார்கள்.


நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே குமாரவேல் இந்தியாவின் நுகர்வோர் பிராண்ட் சுற்றுச்சூழல் குறித்து உரையாட உள்ளார். Cred நிறுவனர் மற்றும் சிஇஓ, குனால் ஷா முடிவுரை வழங்குவதுடன் இந்தியாவின் முதல் நம்பிக்கை சார்ந்த சமூகத்தை தனது நிறுவனம் மூலம் உருவாக்குவது குறித்தும் உரையாற்ற உள்ளார்.


கடந்த ஆண்டு டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டில் 140 பேச்சாளர்கள், 80 கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், 3,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக் அமிதாப் காந்த்; கர்நாடக அரசின் ஐடி, பிடி மற்றும் சுற்றுலா துறை முன்னாள் அமைச்சர் பிரியங் கார்கே; ஃப்யூச்சர் க்ரூப் கிஷோர் பியானி; இந்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.ஈ துறை முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங்; பேடிஎம் விஜய் சேகர் ஷர்மா; புக்மைஷோ ஆசிஷ் ஹேம்ரஜனி; ஃப்ளிப்கார்ட் பின்னி பன்சால்; ஓலா நிறுவனத்தின் பவிஷ் அகர்வால் போன்றோர் இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட முன்னணி பேச்சாளர்கள் ஆவர்.

9 ஆண்டுகளில் 40,000க்கும் அதிகமானோர் டெக்ஸ்பார்க்ஸில் பங்கேற்றுள்ளனர். இதில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஸ்டார்ட் அப்கள். மேலும் டெக்30 பட்டியலில் இடம்பெற்ற ஸ்டார்ட் அப்கள் இத்தனை ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான வளர்ச்சி நிதித் தொகையை உயர்த்தியுள்ளது.

யுவர்ஸ்டோரியின் வருடாந்திர நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், கார்ப்பரேட் உலகம், கொள்கை உருவாக்குபவர்கள், முதலீட்டாளர்கள் சமூகம் போன்ற குழுக்களில் இருந்து சிறந்தவர்களை ஒன்றிணைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அறிவாற்றலை பகிர்ந்துகொள்வதிலும் ஒருங்கிணைவதிலும் இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தளமாக டெக்ஸ்பார்க்ஸ் உருவாகியுள்ளது. இந்த தருணத்தில் ஸ்பான்சர்கள் உள்ளிட்ட யுவர்ஸ்டோரிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.


ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world