Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

Techsparks 2019: ‘ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டார்கள் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும்’

நீண்ட கால நோக்கில் தங்களுடன் இணைந்திருக்கக் கூடிய முதலீட்டாளர்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற வேண்டும் என்பது, டெக்ஸ்பார்க்ஸ் வல்லுனர் உரையாடல் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Techsparks 2019:  ‘ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டார்கள் எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும்’

Tuesday October 15, 2019 , 4 min Read

”நிறுவனர்கள் மற்றும் முதலீட்டார்கள் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். ஸ்டார்ட் அப்கள் தங்களுடன் நீண்ட காலம் இணந்திருக்கக்கூடிய முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும்,” என யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்ச்சியான டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டின் முதல் நாள் அன்று நடைபெற்ற வல்லுனர்கள் விவாதத்தில் கிடைத்த முக்கிய புரிதல் இது தான்.

வல்லுனர் குழுவில் அங்கம் வகித்த, இன்வெண்டஸ் கேபிடல் பார்டன்ர்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது பார்ட்னர், ருத்விக் தோஷி பேசும் போது, “ஒவ்வொரு தொழில்முனைவோரும் தனது வர்த்தகத்திற்குத் தேவையான வளர்ச்சி பெருக்கத்தை (ஸ்கேலிங்) உணர வேண்டும். இது பரவலாக கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சியாக இருக்கலாம் அல்லது லாபத்தை நோக்கிய வளர்ச்சியாக மட்டும் இருக்கலாம். இந்த இரண்டுக்கும் இடையே தான் உண்மை இருக்கிறது. ஒவ்வொரு வர்த்தகமும் வேறுபட்டது. இறுதியில் பார்த்தால் நிதி சந்தை சுழற்சிக்கு உட்பட்டது. இன்று நிதி கிடைக்கலாம். நாளை நிதி உலர்ந்து விடலாம்,” என்று கூறினார்.

முதலீடு

டெக்ஸ்பார்க்ஸ் மாநாட்டில் முதல் நாள் வல்லுனர்கள் கலந்துரையாடலில் இருந்து ஒரு காட்சி.

வர்த்தக அடிப்படை வலுவாக இருந்தால் ஒரு நிறுவனம் இந்த சுழற்சியால் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். ”வர்த்தக சுழற்சி, காலப் போக்கில் இருந்தால் அந்த போக்கை பற்றிக்கொண்டு வேகமாக வளர்ச்சி காணும். சுழற்சி மெதுவாக இருந்தால், நீங்கள் மெதுவாகி, தாக்குப்பிடிக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.


”வளர்ச்சி பெருக்கத்தில் ஈடுபட்டு, முதலீட்டை ஈர்க்கும் போது, நிறுவனர்கள் சில நேரங்களில் வர்த்தக அடிப்படை பார்வையை இழந்துவிடலாம். பணம் மலிவாக கிடைக்கிறது என அவர்கள் நினைத்து விடலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூலதனம் என்பது முடிவில்லாதது இல்லை. ஏதேனும் ஒரு கட்டத்தில் பணம் வருவது நின்றுவிடும். ஸ்டார்ட் அப்கள் சுய சார்பு பெற்றிருக்க வேண்டும்,” என்றும் அவர் வளர்ச்சி பெருக்கம் தொடர்பாக குறிப்பிட்டார்.

நிஞ்சாகார்ட் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ திருகுமரன் நாகாராஜன் தனது தொழில்முனைவு பயணத்தில் இருந்து பெற்ற பாடத்தை நினைவு கூர்ந்தவர், எப்போது ஆதரவு அமைப்பு மற்றும் பொருள்-சந்தை பொருத்தமான தன்மை இருக்கிறது என்பதை ஒரு நிறுவனம் அறிந்திருப்பது முக்கியம் என்று கூறினார். தனது அனுபவத்தை குறிப்பிட்டவர்,

“துவக்கத்தில் எங்கள் வர்த்தகத்தில் ரொக்கத்தை வசூலிக்கும் பிரச்சனையை உணரவில்லை. சிறிய அளவிலான தொகையை வசூலித்தோம். இது செலவு அதிகமாக இருந்தது. இன்று வசூலிக்காவிட்டால், வாடிகையாளர் ஆர்வம் இழந்து விடுவார்,” என்று குறிப்பிட்டார்.

ஒரு வர்த்தகத்தை பணமாக்கும் தன்மை குறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் திருகுமரன் தெரிவித்தார். “என்னுடைய முந்தைய ஸ்டார்ட் அப்பில், எங்கள் தளத்திற்கு நல்ல போக்குவரத்து இருக்கிறது மற்றும் பள்ளிகள் தங்களைப்பற்றி விவரங்களை எங்கள் தளத்தில் மகிழ்ச்சியாக தருவதாக நினைத்தோம். ஆனால் இதை பணமாக்க முயன்ற போது, அந்த விலை பிரிவில் பெற்றோர்கள் அல்லது பள்ளிகளுக்கு ஆர்வம் இல்லை என தெரிந்து கொண்டோம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


சொந்தமாக நிதி திரட்டும் ஸ்டார்ட் அப்கள் பற்றி பேசிய ருத்விக், ”அவர்களால் தங்கள் நிதியை முழுவதும் செலவு செய்துவிட முடியாது. முதல் நாளில் இருந்து ரொக்க புழக்கத்தை பெற்றிருக்க வேண்டும். வேகமாக வளர்ச்சி அடைய லாபத்தை மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆனால், முதலீட்டாளர்கள் ஆதரவு பெற்ற நிறுவனம் எனில், அது நஷ்டத்தை சமாளித்து செயல்முறை மற்றும் அமைப்பை உருவாக்கலாம்,” என்று தெரிவித்தார்.

“ஃபிளிப்கார்ட், பெரிய மற்றும் பிரும்மாண்ட சந்தையில் செயல்படுவதால் நிதியை செலவிடலாம். ஆனால் மற்ற சந்தைகள் சில பில்லியன் டாலர் தான் மதிப்பு கொண்டவை,” என்றும் அவர் கூறினார்.

உணவு டெலிவரி துறை பற்றி குறிப்பிட்டவர், வாடிக்கையாளர் முதல் முறை ஆர்டர் செய்தால், இந்த சேவை பிடித்து போய் தொடர்ந்து ஆர்டர் செய்வார் என்பது இந்த துறையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என கூறினார்.


"எனவே ஸ்டார்ட் அப்கள் மார்க்கெட்டிங்கில் அதிக பணத்தை செலவிடுகின்றன. ஆனால் பயன்படுத்திய கார் விஷயத்தில், ஒரு சராசரி மனிதர் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கார் வாங்குகிறார். எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் செலவிட்ட தொகையை நீங்கள் எடுத்தாக வேண்டும் மற்றும் மார்க்கெட்டிங் செலவை வேகமாக மீட்டாக வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னதாகவே பணம் தேவைப்படலாம். உதாரணமாக, கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி தேவை. எனவே நிலையான செலவுகள் வர்த்தகத்தின் தன்மைக்கேற்ப அமையும்,” என்றும் அவர் தெரிவித்தார்.


லாப பிரச்சனை

கிரேட் லேர்னிங் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர், ஹரி கிருஷ்ணன் நாயர், நிறுவனர்கள் எப்போது லாபம் பற்றி யோசிக்கத்துவங்க வேண்டும் என்பது பற்றி பேசினார். “இது சந்தை அளவை பொருத்து அமையும். நாங்கள் எஜுடெக்கில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் சந்தை இ-காமர்ஸ் சந்தை போல பெரியது அல்ல. விலை பிரிவு பற்றி எங்களுக்கு கவனம் இருந்தது. மாஸ் டிராக்‌ஷன் பற்றி கவலைப்படவில்லை. தொழில்முறையாளர்களுக்கு பயிற்சி அளித்து வரும் ஏழு ஆண்டுகளில், 9 மில்லியன் கற்றல் மணி நேரத்தை வழங்கியிருக்கிறோம். முதல் 4 அல்லது 5 ஆண்டுகளில் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்தோம்,” என்று தெரிவித்தார்.


“ஆண்டுதோறும், லாபத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வதை விட, புதிய சேவைகளில் முதலீடு செய்வதே எங்கள் நோக்கமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையிலான முரண் பற்றி பேசிய போது, மூன்று வல்லுனர்களும், இரு தரப்பினரும் இணைந்திருக்க வேண்டும் என்றனர். ஒவ்வொரு சுற்றிலும் ஸ்டார்ட் அப் பணம் திரட்டுவதற்கான காரணம் குறித்தும் புரிதல் இருக்க வேண்டும்.

"தொழில்முனைவோர்கள் தான் நிறுவனங்களை நடத்துகின்றனர். பாதி முதலீடு பலன் தரும். பாதி முதலீடு வீணாகலாம். பலன் தரும் முதலீடுகளில், ஒரு சில ஸ்டார்ட் அப்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்து அதிக பலன் தரலாம். விசி வர்த்தகம் இப்படி தான் இருக்கிறது. முதலீடு செய்யும் போது இந்த இணைந்த தன்மை இருக்கும். ஒரு முதலீட்டாளராக, ஒவ்வொரு திட்டமும் வெற்றி பெறாது என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனவே தொழில்முனைவோருடன் நெருக்கமாக செயல்பட்டு, இந்த கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று ருத்விக் குறிப்பிட்டார்.


யூனிகார்ட் ஈர்ப்பு பற்றி பேசிய திருகுமரன்,

“நிறுவனர்கள் தங்கள் வர்த்தகம் தாக்கு பிடித்து நிற்பதில் தான் அதிக கவனம் கொண்டுள்ளனர் என்றார். நிறுவனர்கள் பொதுவாக யூனிகார்ன் அந்தஸ்து பற்றி கவலைப்படுவதில்லை என்று ருதிவிக்கும் கூறினார். ஆனால் யூனிகார்னாக உருவாவது சூழல் மீது தாக்கம் செலுத்தும். இது மற்றவர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும்,” என்றார்.

ஹரியும் இந்த கருத்தை ஆமோதித்தார். “நிறுவனர்கள் வளர்ச்சி பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். இந்த வெற்றிக்கதைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றன. யூனிகார்னை உருவாக்குவதற்காக வர்த்தகம் துவங்கிய எந்த ஒரு நிறுவனரையும் நான் இதுவரை சந்திக்கவில்லை,” என்று அவர் கூறினார்.


ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில் : சைபர்சிம்மன்