தொழில் முனைவில் ஈடுபட விரும்பும் மாணவரா? யுவர்ஸ்டோரி ‘TechSparks' 2020ல் கலந்து கொள்ள பதிவு செய்யுங்கள்!

By YS TEAM TAMIL|6th Oct 2020
இந்த ஆண்டு மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ள பிரம்மாண்ட டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் ஸ்டார்ட் அப் விருதுகள், பிராடக்ட் அறிமுகங்கள், கொள்கை விவாதங்கள், மாஸ்டர்கிளாசஸ் போன்றவை இடம்பெற உள்ளன.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நீங்கள் தொழில்முனைவர் ஆக விரும்பும் மாணவரா? ஸ்டார்ட் அப் முயற்சியை எப்படித் தொடங்குவது என மிகச்சிறந்த நிபுணர்களிடம் கற்றறிய விரும்புபவரா?


அப்படியானால் உங்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டல் இதோ உங்களுக்குக் கிடைக்க உள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய, உந்துதலளிக்கக்கூடிய, அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்டார்ட் அப் மாநாடான 'TechSparks' முன்பைக் காட்டிலும் பெரிதாக, சிறப்பாக இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.


கிட்டத்தட்ட 100 மில்லியன் பேர் பங்கேற்க உள்ள டெக்ஸ்பார்க்ஸ் 11-வது பதிப்பு முற்றிலும் மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது.


பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் யுவர்ஸ்டோரியின் இந்த முக்கிய நிகழ்வு லட்சக்கணக்கானோர் பயனுள்ள வகையில் இணைப்புகள் ஏற்படுத்திக்கொள்வதிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அத்துடன் ஸ்டார்ட் அப்கள் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டவும் உதவியுள்ளது.


இந்த ஆண்டு நடைபெற உள்ள 11-வது சிறப்பு பதிப்பில் தொழில்முனைவோர், கொள்கை உருவாக்குபவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், வணிகத் தலைவர்கள் போன்றோர் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைய உள்ளனர். இதில் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலின் சமீபத்திய போக்குகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.


மாற்றத்தை ஏற்படுத்துவோர் மற்றும் துறைசார் முன்னோடிகளிடமிருந்து நுண்ணறிவு பெறமுடியும். இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளைச் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவர்களுடன் ஒருங்கிணையவும் வாய்ப்பு கிடைக்கும்.

தொழில்முனைவர் ஆக விரும்பும் மாணவர்களுக்கு டெக்ஸ்பார்க்ஸ் 2020 ஈடு இணையற்ற ஒரு தளமாக விளங்கும். ஸ்டார்ட் அப்களில் பணியில் சேரவும் சிறப்பான யோசனைகளையும் செயல்பாடுகளையும் கற்றறியவும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த நிகழ்வின் வாயிலான கிடைக்கும் தொடர்புகள் மிகப்பெரிய அளவிலான மாற்றத்திற்கு ஆரம்பப்புள்ளியாக அமையும்.

டெக்ஸ்பார்க்ஸ் 2020 உலகளாவிய அனுபவத்தை வழங்கும் என்றாலும் உள்நாட்டு செயல்பாடுகளைக் கொண்டாடும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் TechSparks2020 'மேட் இன் இந்தியா’ ஸ்டார்ட் அப்கள், யோசனைகள், புத்தாக்கங்கள், பிராண்டுகள் போன்றவற்றைக் கொண்டாடுவதற்கான தளமாக விளங்கும்.  


ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போன்றே இந்த ஆண்டும் இந்தியாவின் வளர்ந்துவரும் சிறந்த Tech30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை இந்நிகழ்வு அறிமுகப்படுத்தும். டெக்ஸ்பார்க்ஸ் தளத்தில் முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், வணிகத் தலைவர்கள் போன்ற பெரும்புள்ளிகளுடன் நேரலை சந்திப்புகளில் இணைய இறுதி போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.


2020-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் ஸ்டார்ட் அப் விருதுகள், பிராடக்ட் அறிமுகங்கள், கொள்கை விவாதங்கள், மாஸ்டர்கிளாசஸ் போன்றவற்றில் பங்கேற்க யுவர்ஸ்டோரி உங்களை அழைக்கிறது.

அதிகளவிலான மாணவர்கள் பயன் பெற உதவும் வகையில் 90 சதவீதத்திற்கும் மேலாக யுவர்ஸ்டோரி கட்டணங்களை குறைத்துள்ளது. இன்றே புக் செய்து பலனடையுங்கள்!

TechSparks2020-ல் பங்கேற்க பதிவு செய்யுங்கள்

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world