Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

‘உங்கள் வீடியோஸ் மக்கள் பார்க்கும் வகையில் பதிவேற்றுவதே முக்கியம்' - யூட்யூபர் மதன் கவுரி

டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்ச்சியில், யூடியூப் பிரபலங்கள் மதன் கவுரி மற்றும் மும்பையின் நிகில் சர்மா, யூடியூபராவது மற்றும் வீடியோ உலகில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

‘உங்கள் வீடியோஸ் மக்கள் பார்க்கும் வகையில் பதிவேற்றுவதே முக்கியம்' - யூட்யூபர் மதன் கவுரி

Thursday November 26, 2020 , 2 min Read

கொரோனா சூழலில், வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில், பலரும் மணிக்கணக்கில் வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக, யூடியூபர்களின் உலகலாவிய பார்வை அதிகரித்து, யூடியூபர்களின் பிரலமும் அதிகரித்தது.


சமூக இடைவெளி மற்றும் தனித்திருத்தால் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளுவதை பாதித்த நிலையில், பயனாளிகள் புதிய போக்குகளை தெரிந்து கொள்ள யூடியூப் உதவியதோடு, அபிமான யூடியூபர்களுடனான நெருக்கத்தையும் அதிகமாக்கியது.

இந்த வீடியோக்கள், பொழுதுபோக்கு, செய்தி, தகவல் அளிப்பது ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை குறைத்திருக்கின்றன.
யூடியூப்

அண்மையில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்ச்சி கலந்துரையாடலில், யூட்டுயூபர்கள் மதன் கவுரி மற்றும் நிகில் சர்மா தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

"நீங்கள் யூட்டியூபராக விரும்பினால், வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முன் எதற்காகவும் காத்திருக்க வேண்டியதிலை. உங்கள் வீடியோ மகத்தானதாக இருக்கிறதா அவற்றின் தரம் குறைவாக இருக்கிறதா என்பதெல்லாம் பிரச்சனை அல்ல. உங்கள் வீடியோக்களை மற்றவர்கள் பார்க்கும் வகையில் அவற்றை பதிவேற்றுவது தான் முக்கியம். தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு சரி செய்யலாம்,” என்று யூட்டியூப்பில் 4 மில்லியன் சந்ததாரர்கள் மற்றும் 500 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ள மதன் கவுரி கூறுகிறார்.

ஸ்மார்ட்போனில் பதிவு செய்து வீடியோக்களை பதிவேற்றத் துவங்கிய மதன் கவுரி, சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முழுநேர யூட்டியூபராக இருக்கிறார்.

"யூட்டியூபர்களின் வீடியோக்களை பார்த்து உங்களுக்கான கருப்பொருளை தேர்வு செய்ய வேண்டும். கேமிங் சேனலோ, தொழில்நுட்ப சேனலோ, உங்கள் சேனல் சமகால போக்குகள் அடிப்படையில் எப்படி நீடித்திருக்க முடியும் என பார்க்க வேண்டும்,” என்கிறார் 3.5 மில்லியன் சந்தாரர்கள் கொண்ட நிகில் சர்மா.

ஆரம்ப நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை, சந்தாதாரர்கள் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது. அதிகம் கவலைப்பட்டால், உங்கள் படைப்புத்திறனை பாதிக்கும் என்கிறார் நிகில்.


மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த மதன், முழுநேர யூட்டியூபரவாதற்கு முன், கடினமான சூழலில் வளர்ந்தது பற்றி பகிர்ந்து கொண்டார். தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.


வினானப் பணியாளராக வேலை பார்த்துள்ள நிகில், நடிப்பத்துறையிலும் முயற்சித்திருக்கிறார். லே முதல் லடாக் வரை பைக் பயணத்தை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்ட போது இவர் பிரபலமானார்.


குறைந்த டேட்டா கட்டணம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் வீடியோ ஸ்டிரீமிங் பிரபலமாகி வருகிறது. மதன் மற்றும் நிகில் போன்ற யூட்டியூபர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர்சிம்மன்