Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

[TechSparks 2020] ’இந்தியாவில் இருந்து உலகிற்காக’ - யுவர்ஸ்டோரி-ன் முன்னணி டெக் மாநாடு துவங்கியது!

யுவர்ஸ்டோரியின் 11வது டெக்ஸ்பார்க்ஸ் 2020, கொள்கை வகுப்பாளர்கள், செல்வாக்காளர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களின் நட்சத்திர வரிசையுடன் அனைத்து மெய்நிகர் உலகளாவிய அனுபவத்தையும் வழங்கும்.

[TechSparks 2020] ’இந்தியாவில் இருந்து உலகிற்காக’ - யுவர்ஸ்டோரி-ன் முன்னணி டெக் மாநாடு துவங்கியது!

Monday October 26, 2020 , 3 min Read

“இந்த பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, கதைகளால் உண்டாகி இருக்கிறது...” என்று புகழ் பெற்ற கவிஞரும், அரசியல் செயற்பாட்டாளருமான Muriel Rukeyser கூறினார். இந்த கருத்துடன் என்னால் உடன்படாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு கதையும் சொல்லப்பட வேண்டியது என நம்புகிறேன்.

இந்த நோக்கத்துடன் – ஒவ்வொரு கதைக்கும் முக்கியத்துவம் அளிக்க- பத்தாண்டுகளுக்கு முன்னர் யுவர்ஸ்டோரி தளத்தை துவக்கி, இந்த உலகில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வரும் ஊக்கம் மிக்க மனிதர்களின் கதைகளை பதிவு செய்து வருகிறேன்.


இத்தனை ஆண்டுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளை கூறியிருக்கிறோம். இதன் பயனாக கதை சொல்லுதலின் ஆற்றலை உணர்ந்திருக்கிறோம். எனவே தான், யுவர்ஸ்டோரியின் முன்னணி நிகழ்வான, டெக்ஸ்பார்க்ஸ் மூலம், தொடர்புகள், உரையாடல்கள், கூட்டு முயற்சியை உருவாக்க கதை சொல்லும் ஆற்றலை பயன்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம், இந்தியாவில் இருந்து உலகிற்கான நிறுவனங்களை உருவாக்க மற்றும் தாக்கத்திற்கான தூண்டுகோலாக இருப்பதை நோக்கி ஒன்றாக முன்னேறி வருகிறோம்.

இன்று, இன்னும் மேம்பட்ட, இன்னும் சிறந்த, முதல் முறையாக, உலக அளவிலானதாக, மெய்நிகர் வடிவில் நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறேன். இந்தியாவில் இருந்து மட்டும் அல்லாது, உலக அளவில் இருந்து முன்னணி பேச்சாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.


மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதி, வர்த்தக விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிஸ்கோ சேர்மன், இ.இ.ஓ ஜான் சேம்பர்ஸ், டாடா அறக்கட்டலை புரவலர் ரத்தன் டாடா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட முன்னணி பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். 

டெக்

தற்பொதைய சிக்கலான சூழலில், டெக்ஸ்பார்க்ஸ் அதன் ஆதார அம்சங்கள் அனைத்திலும் செயல்வடிவம் பெற வைக்க தீவிரமாக முயற்சித்திருக்கிறோம். இதை முழுவதும் மெய்நிகர் நிகழ்வாக மாற்றி, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் மற்றும் அதை கடந்து பலவிதமான குரல்களை ஒலிக்கச்செய்யும் வகையில் இதற்காக கடந்த சில மாதங்களாக கடுமையாக உழைத்திருக்கிறோம்.


பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய, முக்கியமான, தொழில்நுட்ப, புதுமையாக்க, தொழில்முனைவு மாநாடாக விளங்கும் டெக்ஸ்பார்க்ஸ், தொழில்முனைவோர், அரசு தரப்பு, முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், வர்த்தகத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கிறது. கடந்த ஆண்டுகளில், இந்த மாநாடு, 1.5 மில்லியன் தொடர்புகளை உண்டாக்கி, ஒரு பில்லியனுக்கும் மேல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்ட உதவியிருக்கிறது.


இந்த ஆண்டு, டெக்ஸ்பார்க்ஸ் 2020 ஐந்து நாள் நிகழ்வில், நீங்கள் உற்சாகம் கொள்ள மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன.

டெக்ஸ்பார்க்ஸ் 2020 ல் பங்கேற்பதற்கான காரணங்கள் (மெய்நிகராக )

* இந்தியாவில் இருந்து உலகிற்கான தீர்வுகளை உருவாக்குவது தொடர்பான உரையாடல்கள் மற்றும் செயல்படக்கூடிய உள்ளொளிகள்

* புதிய இயல்பு நிலையில், TechSparks 2020 போக்குகள் தொடர்பான தகவல்கள்

வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியாவின் திறன் பயிற்சியாளர்காள் மீது கவனம் குவிக்கும் யுவர்ஸ்டோரியின் Jobs for All campaign

* Tech30 2020: முன்னணி 30 ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களின் யுவர்ஸ்டோரி பட்டியல்

* வர்த்தக நிறுவனங்கள், விசி தொடர்புகள்

* எதிர்கால வர்த்தக வாய்ப்புகள் பற்றிய கணிப்பு

* முன்னணி பிரமுகர்கள், வல்லுனர்கள் வழங்கும் மாஸ்டர்கிளாஸ் மற்றும் சிறப்புரைகள்  

உங்களுக்கு காத்திருப்பவை

* துடிப்பான உரையாடல்கள், முன்னணி பிரமுகர்கள் உரைகள், 200 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 15 நாடுகளைச்சேர்ந்த ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், ஐந்து நாள் இடைவிடாத கற்றல், தொடர்புகள்

முக்கியப் பேச்சாளர்கள்

துவக்க உரை- ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் தொடர்பு, மின்னணிவியல், தகவல் தொழில்நுப்டம் சட்டம் அமைச்சர்

சிறப்பு விருந்தினர் : நிர்மலா சீதாராமன், மத்திர நிதி, வர்த்தக விவகாரங்கள் துறை அமைச்சர்

உலகத் தலைவர்கள் : ஜான் சேம்பர்ஸ், ரத்தன் டாடா, இன்னும் பலர்  

வர்த்தக பிரமுகர்கள்; புனீத் சந்தோக், குருராஜ் தேஷ்பாண்டே, சீசர் சென்குப்தா, தாஜி- கமலேஷ் பட்டேல்  

முதலீட்டாளர்கள் : சைலேந்திரா சிங், அனு ஹரிஹரன், ஹான்ஸ் டுங், வர்ஷா டாகரே, பீட்டர் கெம்ப்ஸ், கார்திக் ரெட்டி, ரித்து வர்மா, ரோகித் சூட், சஞ்சய் நாத், அனூப் ஜெயின், சஞ்சய் மேத்தா.

இந்திய தொழில்முனைவோர்: ஸ்ரீதர் வேம்பு, பவிஷ் அகர்வால், பைஜூ ரவீந்திரன், நிதின் காமத், சுஜீத் குமார், அசிஷ் ஹேம்ரஞ்சனி, கவுரவ் முஞால், குனால் ஷா, கவின் பாரதி மிட்ட்டல், அபினவ் அஸ்தனா.

பெண் சக்தி : சப்னா, சத்தா, ஷீனம் ஓரி, ரிது ஆனந்த், கீதா ம்ஜ்ன்சுநாத், சாக்‌ஷி சோப்ரா, பிசாந்தின் போடுகும், கஜல் அலக்.  

முன்னணி பிரமுகர்கள்: குனால் கபூர், சுனில் ஷெட்டி, தாஹிரா காஷ்யப் வலைப்பின்னல் மற்றும் தொடர்புகளை டெக்ஸ்பார்க்சின் முக்கிய அங்கமாக கருதுவதால், மெய்நிகர், முதலீட்டாளர்கள் தொடர்பு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். டெக்ஸ்பார்க்ஸ் மூலம் உங்களுக்கு ஊக்கம் அளிப்பதை எதிர்நோக்கியுள்ளோம்.


டெக்ஸ்பார்க்ஸ் 2020 இணையதளம்: TechSparks 2020

நிகழ்வுகளை காண பதிவு செய்ய: Join here


கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா (யுவர்ஸ்டோரி நிறுவனர்)