TedX சென்னை: பேச்சாளர்கள் பட்டியல் அறிவிப்பு...!
இந்த ஆண்டு டெட்xல் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கப்போகிறது தெரியுமா...?
இந்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி, நமது சிந்தனையைத் தூண்டும் வகையிலான ஊக்கம் நிறைந்த உரைகள் அடங்கிய ‘TEDxChennai’-யின் ஆறாவது வருடாந்திர நிகழ்வு நடைபெற உள்ளது. சென்னை TEDxல் நடைப்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், நிகழ்ச்சியின் நட்சத்திரங்களான பேச்சாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது TEDxChennai குழு.
ஐடியாக்களின் சங்கமம் TEDxChennai
TEDxChennai 2009-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒருவர் தன்னையும் தான் வாழும் உலகையும் பற்றிய ஆழ்ந்த புரிதலைப் பெற மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வு இது. பார்வையாளர்கள் தாங்கள் செயல்படும் பகுதியல்லாத புதிய பகுதிகளின் செயல்பாடுகள் குறித்த நுண்ணறிவைப் பெற டெட் உதவுகிறது.
மக்களிடையே உரையாற்றி தங்கள் திறனை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு உந்துதலளிக்கக்கூடிய புதுமையான சிந்தனையாளர்களை TEDxChennai வரவேற்கிறது. இவர்கள் கலையில் சிறந்தவர்களாக இருக்கலாம், புதுமையான நிறுவனங்களைத் துவங்கியவர்களாக இருக்கலாம்; புதுமையான சாதனங்களை கண்டுபிடித்தவர்களாக இருக்கலாம்; புது வகையில் ஊடகங்களை உருவாக்கியவர்களாக இருக்கலாம்; மொத்தத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதுமையான சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
“சென்னை TEDx மூலம் வரும் புதிய ஐடியாக்களை ஒரே நாளுடன் நின்றுவிடாமல், அதை ஒரு இயக்கமாக மாற்ற விரும்புகிறோம்,” என்று TEDx லைசென்சீ கிருத்திகா ஜெயின் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்வுகள் மூலம் வளர்ந்துவரும் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், புதுமையான சிந்தனையாளர்கள், முன்னோடிகளை உலகம் முழுவதிலும் இருந்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது TEDx.
TEDxChennai2019 மையக்கருத்து
’ஒருவேளை இப்படி நடந்தால்…’ (IF...) என்கிற நமது கேள்வியும் அது சார்ந்த நமது மனநிலையே TEDxChennai-யின் இந்த ஆண்டின் மையக்கருத்தாகும். இந்தக் கேள்வியே பலவற்றை ஆராயத் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. நமது சிந்தனையைத் தூண்டி அதற்கு ஒரு வடிவத்தையும் கொடுக்கிறது. நாம் அதிக சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்த உலகில் வாழ்கிறோம். நாம் தேர்வு செய்யும் பாதையைப் பொறுத்து வளர்ச்சியடைகிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் தங்களது சிந்தனைகளை பகிர்ந்துகொள்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து அத்தகைய சிந்தனைகளை செயல்படுத்துகிறோம். இதன் வாயிலாகவே வளர்ச்சி என்பது அனைவருக்கும் சாத்தியமாகிறது.
இதுபோன்ற அம்சங்களின் அடிப்படைகளில் பேசவுள்ள பேச்சாளர்களே இந்த ஆண்டு சென்னை TEDxல் வரவுள்ளனர்.
பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன் பேசிய TEDx சென்னை ஒருங்கிணைப்பாளர் ரத்தீஷ் கிருஷ்ணன், சென்னையின் பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கைமுறையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தார், மேலும்,
“நம்ம சென்னை டெட்x எல்லாருக்குமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்களை கொண்டாட, அவர்களுக்கு சிறந்த மனிதர்களை அறிமுகப்படுத்தவே பல நல்ல விஷயங்களையும், சிறப்பான பேச்சாளர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார்.
பேச்சாளர்களின் பட்டியல்:
இந்த ஆண்டின் நிகழ்வில் கல்வியாளர் மற்றும் ப்ராஜெக்ட் DEFY நிறுவனர் அபிஜித் சின்ஹா, NAT-GEO ஆராய்ச்சியாளர் மற்றும் சூழலியல் நிபுணர் அனுஷா சங்கர், புகைப்படக்கலை நிபுணர் அர்ஷ்தீப் சிங், பாலாஜி மஹேஷ்வர் –ராஸ்கோல்நிகோவ், தயாநிதி மாறன் – மோக்ஷன், கிரீஷ் மாத்ருபூதம் –ப்ராடக்ட் சூப்பர்ஸ்டார், கீதாஞ்சலி ஜேபி, ஜன் குமேய், ஃப்யூச்சர் ஷிப்ட்ஸ் நிறுவனர் கென்னித் மிக்கல்சன், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ், தி இர்ரெலவண்ட் ஜெண்டர் பிராஜெக்ட் இணை நிறுவனர் மேக்னா சௌத்ரி, அவுட்லைன் இண்டியா நிறுவனர் பிரேர்னா முகர்யா, கட்டிடக்கலை நிபுணர் ராகவ் செந்தூர், மாஸ்டர் செஃப் மற்றும் சிறை அதிகாரி சாஷி செல்லையா, Sofiyum, திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ருதி ஹரிஹரசுப்ரமணியன், ஆசிரியர் மற்றும் மனிதநேய ஆர்வலர் சுஜித் ரவீந்திரன், The Prajnya Trust நிறுவனர் ஸ்வர்னா ராஜகோபாலன், Macrebur இணை நிறுவனர் டோபி மெக்கார்ட்னே, CYR Wheel Performer யங் ஷீ ஹாவ் போன்றோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக டெட்x சென்னையில் பங்கேற்பாளர்களுக்கு உதவிட நுழைவாயில் முதல் உள் அரங்கு வரை திருநங்கைகள் நியமிக்கப் பட்டுள்ளனர். Periferry என்ற நிறுவனம் மூலம் இவர்கள் வாலண்டியர்களாக TEDx சென்னையில் இணைந்துள்ளனர். அதேப்போல் கைராசி என்கிற லாப நோக்கமற்ற நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் மேடை அலங்காரப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று டெட் சென்னை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
TED அமைப்பு பற்றி
23 மார்ச் மாதம் 2009ல் தொடங்கப்பட்ட TED ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாகும். டெட்-ன் வருடாந்திர கூட்டம் கனடாவில் உள்ள வான்குவரில் நடைபெறும். TEDWomen மற்றும் TEDGlobal, ஆகிய நிகழ்வுகளும் உலகம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்படும் ஆயிரக்கணக்கான TEDx நிகழ்வுகளில் சிறப்பு உரைகள் இடம்பெறுகின்றன.
TEDx சென்னை நிகழ்வு பற்றிய விவரங்கள்:
நாள்: 10ம் தேதி மார்ச் 2019 | இடம்: சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கம்
மேலும் விவரங்களுக்கு: TEDx Chennai