ட்ரோன் மூலம் மருந்து வழங்கும் ‘ஸ்கை திட்டம்' - தெலுங்கானா அரசு புதிய முயற்சி!

ஆசியாவிலேயே முதல் முறையாக தொடக்கம்!
1 CLAP
0

தெலங்கானா அரசு இரண்டு நாட்கள் முன் ‘Medicines from the Sky’ எனப்படும் 'ட்ரோன் மருந்து வழங்கும் திட்டத்தை' தொடங்கியது. சில நாட்கள் முன் ட்ரோன் மூலம் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கிய தெலங்கானா அரசு, இப்போது மருந்துகளையும், தடுப்பூசிகளை வழங்கவும் ட்ரோன்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆசியாவிலேயே ட்ரோன் மூலம் மருந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தபடுவது இதுவே முதல்முறை.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் மாநில அமைச்சர் கேடி ராமாராவ் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் இந்த திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா,

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய ட்ரோன் விதிகள், ட்ரோன் தொழிற்துறையையும், நம்பிக்கை, சுய-சான்றிதழ் மற்றும் ஊடுருவாத கண்காணிப்பு ஆகிய கொள்கைகளின் மீதான கண்டுபிடிப்புகளையும் திறந்துள்ளது.

”ட்ரோன் என்பது ஒரு எல்லைப்புற தொழில்நுட்பமாகும், இது மற்றபடி அணுக முடியாத பகுதிகளை அணுக பயன்படுகிறது, இதனால் தொலைதூரப் பகுதிகளுக்கு கூட சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகள் கிடைக்க வழிவகை செய்கின்றன. 2030க்குள் உலகின் ட்ரோன் மையமாக இந்தியா மாற உள்ளது, எங்கள் கண்டுபிடிப்பாளர்களின் திறன் எல்லையற்றது,” என்றார்.

உலகப் பொருளாதார மன்றம், நிதி ஆயோக் மற்றும் ஹெல்த்நெட் குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தெலங்கானா அரசின் இந்த ‘ஸ்கை திட்டம்' மூலமாக மருந்துகள், தெலுங்கானாவில் 16 பசுமை மண்டலங்களில் சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்பட இருக்கின்றன" என்றார்.

தொடர்ந்து பேசிய மாநில அமைச்சர் கேடி ராமராவ்,

“கோவிட் -19 தொற்றுநோய் சுகாதார வழங்கல் சங்கிலிகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இந்தத் திட்டம். மேலும் ட்ரோன்கள் வலுவான மதிப்பு முன்மொழிவை வழங்குகின்றன. இந்தத் திட்டம் மருத்துவம், முழு சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பயனளிக்கும் நுண்ணறிவுகளை உருவாக்கும் நாட்டின் முதல் முயற்சியாகும். இந்த திட்டத்திற்காக உழைப்பவர்களின் உற்சாகமும், ஆதரவும் ஆழ்ந்த பாராட்டுக்குரியது," என்றுள்ளார்.

இந்தத் திட்டத்தில் ட்ரோன் ஆபரேட்டர்கள், ஹெல்த்கேர் மற்றும் ஏர்ஸ்பேஸ் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட எட்டு பங்கேற்பாளர்கள் கூட்டமைப்புகள் உள்ளன, இது ஹெல்த்கேரில் குறைந்த உயர வான்வழி தளவாடங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு குறுகிய மற்றும் நீண்ட தூர ட்ரோன் அடிப்படையிலான விநியோகங்களை நிரூபிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவை சந்தித்து ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும், இந்த ட்ரோன் திட்டத்துக்கு முழு ஆதரவை தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

Latest

Updates from around the world