மருமகன், பேரன் உயிரிழப்பு; மகன் மாற்றுத்திறனாளி– மூதாட்டிக்கு புதிய வீடு கட்டித் தந்த காவலர்!

- +0
- +0
தெலங்கானவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தின் லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான பாண்டிபெல்லி ராஜம்மாவுக்கு, இந்த புத்தாண்டு வாழ்வின் மறக்க முடியாத புத்தாண்டாக அமைந்துள்ளது. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தொடக்கமே அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அவரது ஒரு அறை, வீடு ஓரளவு சேதமடைந்ததை அடுத்து, பாலகூர்த்தி சப் இன்ஸ்பெக்டர் குந்த்ரதி சதீஷ் அவருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
தெலங்கனாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின்போது, சதீஷ், ராஜம்மாவை சந்தித்துள்ளார். உணவின்றி தவிப்பவர்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ராஜம்மாவின் வீடு முழுவதும் சீர்குலைந்து அவர் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பதை கண்ட காவலர் சதீஷ், வெள்ள அச்சுறுத்தல் பாதிப்புகள் சரியாகும் வரை, அரசாங்க தங்குமிடத்தில் ராஜம்மாவை தங்க வைத்தார்.

ராஜம்மாவை பொறுத்தவரை, அவர் கடுமையான வறுமையில் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மருமகள் மற்றும் பேரன் ஆகிய இருவரும் பாம்பு கடித்து உயிரிழந்தனர். வாழ்க்கையே சோகமாகக் கொண்ட அவருக்கு இருந்த மகனும் மாற்றுத்திறனாளி. தனது தாயை கவனித்துக்கொள்ள முடியாது என்று அவரும் கைவிட்டுவிட்டார்.
“அந்த வீட்டில் மூன்று பேர் எப்படி தங்கியிருக்க முடியும் என்பதைச் நினைத்தாலே எனக்கு தலை சுற்றுகிறது. அந்த வீட்டில் ஒருவரை கூட தங்க வைக்க முடியாது,” என்று காவலர் சதீஷ் டி. பேட்டியளித்துள்ளார்.
மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தற்காலிக வீடு ராஜம்மாளுடையது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்றிருந்த அந்த வீடு வெள்ளத்தில் சீர்குலைந்தது.
ராஜம்மாளின் கதையை அறிந்துகொண்ட சதீஷ், அவருக்கு வீடு ஒன்றை கட்டிக்கொடுக்க முன் வந்தார். அதன்படி, அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் 3 மாதங்களுக்குள் புதிய வீடு கட்டப்பட உள்ளது. நன்கொடையாளர்கள் உதவியுடன் ரூ.1,60,000 செலவில் ராஜம்மாளுக்கு புது வீடு கட்டித்தரப்பட உள்ளது. இதில் பாதி தொகையை கொடுத்தது எஸ்,.ஐ சதீஷ்தான்.
“ராஜம்மாவின் கதை என்னை மிகவும் கஷ்டபடுத்தியது. துன்பத்திலிருக்கும் அவருக்கு உதவ ஏதாவது செய்ய விரும்பினேன். எனவே அவருக்காக ஒரு நிலையான வீட்டைக் கட்ட நினைத்தேன்”என்று அவர் நினைவு கூறுகிறார் சதீஷ்.
சதீஷ் பல ஆண்டுகளாக மனிதநேயப் பணிகளைச் செய்து வருகிறார், மேலும் ‘ஹெல்பிங் ஹேண்ட்ஸ்’ என்ற குழுவின் ஒரு பகுதியாக அவர் இருந்து பலருக்கும் உதவி வருகிறார். அந்த அமைப்பின் மூலம், ராஜம்மாளின் வீடு கட்டுவதற்கு பணம் சேகரித்து கொடுத்தார். கட்டப்படும் புதிய வீட்டுக்கான அனைத்து பொருட்களையும் வாங்கித் தந்துள்ளார்.
தெலங்கானா காவல்துறையினர் சமூக ஊடகங்களில் தங்கள் சக ஊழியரின் பணியை பெருமையுடன் பகிர்ந்துள்ளனர்.
"கடந்த சில ஆண்டுகளாக நான் எதைப்பற்றியும் வெளியே சொல்லாமல் உதவி செய்துவந்தேன். ஆனால் இது எப்படியோ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது," என்று தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார் சதீஷ்..
வாழ்த்துகளும் பாராட்டுகளும் சதீஷ்!
- உதவிக்கரம்
- போக்குவரத்து காவலர்
- பெண் பாதுகாவலர்கள்
- காவலர்
- Police helps needy
- Helping others
- Helping poor
- Friends of Police
- Telengana
- +0
- +0