ரூ.510 மாடித்தோட்டம் அமைக்கும் கிட்: தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் முன்னெடுப்பு!

By YS TEAM TAMIL|18th Feb 2021
மக்கள் ஆர்வமாக மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வரும் நிலையில் இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையானவற்றை ஒரு தொகுப்பாக மானிய விலையில் வழங்குகிறது தமிழக அரசின் தோட்டக்கலை துறை.
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

இன்று ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். சத்தான உணவை உட்கொள்ளவேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது.


கலப்படம் நிறைந்த உணவுப் பொருட்களும் ரசாயனங்கள் நிறைந்த காய்கறிகளும் பழங்களுமே நம் கண்முன் கொட்டிக்கிடக்கின்றன. இதனிடையில் இயற்கை முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.


இதற்கான தீர்வுதான் என்ன? நம் வீட்டில் நாமே தோட்டம் அமைத்து நமக்கான காய்கறிகளை வளர்த்து பாதுகாப்பாகவும் மனநிறைவுடனும் உட்கொள்ளலாம். ஆனால் இது அனைவராலும் சாத்தியமா?


வீட்டிற்கு வெளியே கிணறு, கழிப்பறை, தோட்டம் என்று வாழ்ந்து வந்த காலம் மாறி இன்று அடுக்குமாடி கட்டிடங்களில் அனைத்தையும் வீட்டுக்குள்ளேயே அமைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.


இதனால் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு போதிய இடவசதி இருப்பதில்லை. இத்தகைய சூழலிலும் மாடித்தோட்டம் அமைக்கும் நடைமுறை மக்களிடையே பிரபலமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பலர் மாடியில் தோட்டம் அமைத்து தேவையான காய்கறிகளை வளர்க்கிறார்கள்.


நாம் வளர்க்கும் செடிகளில் காய்கறிகள் வளர்வதைப் பார்க்கும்போதே மனதிற்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு. இவ்வாறு அமைப்பதால் மொட்டைமாடி பசுமையாக காட்சியளிப்பதுடன்  சத்தான காய்கறிகளை நாமே விளைவித்து உணவில் சேர்த்துக்கொள்ள முடிகிறது.

இந்த முன்னெடுப்பை மக்களிடையே மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு விதை, குரோபேக், உரம் என தோட்டம் அமைக்கத் தேவையான முக்கியப் பொருட்களை ஒரு தொகுப்பாக மானிய விலையில் வழங்கி வருகிறது.
1

மாடித்தோட்ட தொகுப்பு:

கீழ்கண்ட பொருட்கள் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை  வழங்கும் மாடித்தோட்ட கிட்-இல் இடம்பெற்றிருக்கும்:


 • 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் கொண்ட 6 குரோபேக்
 • 6 பாக்கெட் காய்கறி விதைகள்
 • 200 கிராம் அசோஸைபைரில்லம்
 • 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா
 • 200 பயோ கண்ட்ரோல் ஏஜெனெட்
 • 100 மில்லி வேப்பெண்ணெய் மருந்து
 • 1 செயல்விளக்கக் கையேடு
இந்தத் தொகுப்பில் கலப்பின ரகங்களின் விதைகள் வழங்கப்படுகின்றன. இதன் விலை 850 ரூபாய். 340 ரூபாய் அரசு மானியமாக வழங்குவதால் இதை வாங்குபவர்கள் 510 ரூபாய் செலுத்தினால் போதும்.

மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான முக்கியப் பொருட்கள் அடங்கிய கிட் மட்டுமல்லாது சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் அரசு மானிய விலையில் வழங்குகிறது.


வீட்டில் அமைக்கும் காய்கறி தோட்டத்திற்கு சொட்டு நீர் மூலம் நீர் பாய்ச்சுவதற்கான செலவு 1,000 ரூபாயில் மானியம் 380 ரூபாய் போக மீதமுள்ள 720 ரூபாய் செலுத்தினால் போதுமானது.


எனவே மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.