Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

வெல்லத்தில் புதிய சுவை, இனிப்பு மிட்டாய்கள்- இரு நண்பர்களின் புதிய முயற்சி!

நம் நாட்டு பாரம்பரிய இனிப்பு வகையான வெல்லம் பயன்படுத்தி அதற்கான உணவுச்சந்தையை உருவாக்குகின்றனர் இவர்கள்.

வெல்லத்தில் புதிய சுவை, இனிப்பு மிட்டாய்கள்- இரு நண்பர்களின் புதிய முயற்சி!

Tuesday February 25, 2020 , 3 min Read

இன்று பல சுவைகளைக் கொண்ட மிட்டாயாக வெல்லத்தை வழங்கி வருகிறது 'ஜாகிக் பிராண்ட்'. ஜப்பானில் இருந்து திரும்பி வந்து தனது தாயகத்தில் வேலை தொடங்கிய பூபேஷ் சைனியுடன் நாடு முழுவதிலுமிருந்து கரும்பு விவசாயிகள் கைகோர்க்க முயற்சிக்கின்றனர்.

1

இன்று 'ஜாகிக் பிராண்ட்' வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மிட்டாய்களை விற்பனை செய்கிறது. வெல்லத்தின் இந்த புதிய அவதாரம் மக்கள் மத்தியில் அதன் சிறப்பு இடத்தை உருவாக்கி வருகிறது. இந்த மாற்றம் ஒரு சில ஆண்டுகளில் நடந்தது ஆகும். ஜாகிக் பிராண்ட் 'ஹவுஸ் ஆஃப் ஃபார்மர்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமானது, அதன் நிறுவனர் பூபேஷ் சைனி.


பூபேஷ் சைனி; சண்டிகரில் வசிக்கிறார். இவர் டெல்லியில் எம்பிஏ முடித்த பின்னர், மார்க்கெட்டிங் ரிசர்ச் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் வேலை பார்த்தபொழுது, ​​பூபேஷ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பெரிய பிராண்டுகளுடன் பணியாற்றினார். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஜப்பானில் பணிபுரிந்து வந்தார் பூபேஷ். அப்போது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தியா திரும்பினார். இந்த புதிய தொடக்கத்தைப் பற்றி பூபேஷ் கூறும்போது,

"நான் இதுவரை கற்றுக்கொண்டவையை நல்ல பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன், இதனால் சமூகத்திற்கும் எதையாவது திருப்பச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்," என்றார்.

வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சில பொருட்களைத் தயாரிக்கும் எண்ணத்தை பூபேஷ் கொண்டு வந்தார், 2016ல் மீண்டும் இந்தியாவுக்கு வந்த பிறகு, இதனைத் தொடங்கினார்.

“நம் நாட்டில் வெல்லம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது, எனவே வெல்லத்தைக் கொண்டு புதிய ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தோம். அதற்கு ஒரு புதிய சுவையை அளித்து அதை சிறிய அளவில் மக்களுக்கு வழங்க விரும்பினோம்."

இதைத் தொடங்குவதற்கு முன்பு, பூபேஷ் பல முறை இந்தியாவுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்தார், அதன் பிறகு நாட்டில் யாரும் அத்தகைய முயற்சியை எடுக்கவில்லை என்பது தெரிந்து கொண்டார். பின்னர் பூபேஷ் 2016 ஆம் ஆண்டில் 'ஹவுஸ் ஆப்  ஃபார்மர்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் கீழ் ‘ஜாகிக் பிராண்ட்’ பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிராண்டின் கீழ், சுவையான மிட்டாய் மற்றும் வெல்லத்திலிருந்து தயாரிக்கப்படும் பல உணவுப் பொருட்களை தயாரிக்கப்படுகிறது.

தொடக்கக் கால சிக்கல்கள் 

தங்கள் ஆரம்ப நாட்களைப் பகிர்ந்த பூபேஷ், “முதல் வருடம் நாங்கள் வெல்லத்தை சிறிய அளவிற்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தோம், இரண்டாம் ஆண்டில் நாங்கள் 90 கிலோ வெல்லத்தை மட்டுமே உற்பத்தி செய்தோம்."


“தொடக்கத்தில் நான் நேரடியாக கடைக்காரர்களிடம் விற்க எடுத்துச் சென்றேன், எனது வீட்டு உறுப்பினர்கள் பொருட்களை பேக்கேஜிங் செய்வதில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் கடைக்காரர்கள் எங்கள் பொருட்களை வாங்க மறுத்ததனால், நாங்கள் விரக்தியடைந்தோம், அதனால் பல கடைக்காரர்கள் அதில் ஆர்வமும் காட்டினர்."

பூபேஷ் தனது நண்பர் நவ்தீப் கெடாவையும் தனது பயணத்தில் சேர்த்துக் கொண்டார். அவர் இப்போது இவரது வணிகக் கூட்டாளியும் கூட. ஆரம்பக் கட்டத்தில், இரண்டு விவசாயிகள் மட்டுமே பூபேஷுடன் தொடர்பில் இருந்தனர். இப்போது பூபேஷ் தன்னுடன் அதிகமான விவசாயிகளை இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.


ஜாகிக் தற்போது ஐந்து வகையான தயாரிப்புகளைத் தயாரித்து வருகிறது. அவை இஞ்சி, நெல்லிக்காய் மற்றும் பெருஞ்சீரகம் ஆகும். இந்நிறுவனம் எதிர்காலத்தில் சர்க்கரை மாற்றை தயாரிப்பதிலும் கவனம் செலுத்த உள்ளது.


தற்போது, ​​பூபேஷ் இந்த வணிகத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல ஒரு கூட்டுறவு நிறுவனத்துடன் பணிபுரிகிறார். எதிர்காலத்தில், ஜாகிக் தொடர்பான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு வழங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்

பூபேஷின் சொல்படி, அவருடன்  தொடர்புடைய விவசாயிகளின் பண்ணையில் தயாரிப்புகளைத் தயாரிக்கும் மற்றும் பேக்கேஜிங் செய்யும் யூனிட் ஒன்றை அவர் அமைத்து வந்தார். தயாரித்து முடித்த பொருட்கள் பூபேஷை சென்றடையும், அதன் பின்னர் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது.


ஆனால் உற்பத்தியில் இந்த வழியில் அதிகரிப்பு எதுவும் இல்லை. இப்போது இந்த விவசாயிகள் தங்கள் மூலப்பொருளை ஜாகிக்கின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மிட்டாய் தயாரிக்கும் கூட்டுறவுக்கு அனுப்புகிறார்கள்.

விவசாயிகளுடன் பணிபுரிவது குறித்து பூபேஷ் கூறுகையில்,

"இன்று ஏராளமான விவசாயிகள் எங்களுடன் சேர விரும்புகிறார்கள், ஏனென்றால் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்."

"எங்கள் நிறுவனமான 'ஹவுஸ் ஆப் ஃபார்மர்ஸ்' விவசாயிகளின் பெயருக்கு ஏற்ப அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறது, விவசாயிகள் எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதுவரை நான் முதலீடு மட்டும் தான் செய்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டு, நிறுவனம் ரூ.5-6 கோடி வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

'ஹவுஸ் ஆப் ஃபார்மர்ஸ்' நிறுவனத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல பூபேஷ் கடுமையாக உழைத்து வருகிறார். எதிர்காலத்தில் பல பரிமாணங்களில் முன்னேறுவதற்கான தனது நோக்கத்தைப் பற்றி பேசுகையில்,

"உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நம்பக்கூடிய ஒரு நல்ல முதலீட்டாளரை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் இது இந்தத் துறையில் முன்னேருவதற்கான சுதந்திரத்தை எங்களுக்குத் தரும்,” என்று நம்புகிறேன்.

ஜாகிக்கின் தயாரிப்புகள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கின்றன, ஆனால் இப்போது பூபேஷ் தனது தயாரிப்புக்கான விநியோகஸ்தர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளார்.