'இணையம் சார்ந்த வணிகங்களுக்கு பெரிய எதிர்காலம்’ - MakeMyTrip தீபக் கால்ரா

By YS TEAM TAMIL|12th Oct 2020
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்முனைவு மாநாடான டைகான் (TiECON ) மாநாடு முதல் முறையாக தமிழ் அமர்வுடன், இணையம் மூலமான மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொரோனா பாதிப்புக்கு பிறகு மாறியிருக்கும் சூழலுக்கு ஏற்ப, தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்முனைவு நிகழ்வான டைகான் (TiECON) மாநாடு, இந்த முறை இணையம் வாயிலாக மெய்நிகர் மாநாடாக நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர் பங்கேற்று, புதிய இயல்பு நிலையில் தொழில்முனைவு சூழல் குறித்து விவாதித்தனர்.


தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் TiECON மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்வு, கொரோனா முடக்கத்திற்கு மத்தியில் இணையம் வாயிலாக மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இம்மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஐந்து நாட்கள் மாலை நேரத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. முதல் முறையாக, தமிழிலும் ஒரு அமர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இந்த நிகழ்வில், தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப டைகான் சென்னை மாநாடு, புதிய தொடுவானங்களை கண்டறிதல் எனும் தலைப்பில் நடைபெற்றது.


இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, TiE Chennai சென்னை உறுப்பினர்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் வகையில் மெய்நிகர் சந்தையை (TiE Sandhai) ஏற்பாடு செய்திருந்தது.

tiecon2020

’மேக்மைடிரிப்’ இணைய நிறுவனத்தின் நிறுவனர் தீப் கால்ரா முதல் நாள் நிகழ்வில் பேசும் போது, கோவிட் தாக்கத்திற்கு மத்தியில் இணையம் சார்ந்த பொருளாதாரத்திற்கு பெரிய வாய்ப்பு உண்டாகி இருக்கிறது என குறிப்பிட்டார்.

”இதுவரை 11 கோடி நபர்கள் இணையத்தில் பொருள்களை வாங்குபவர்களாக இருந்தார்கள். ஆனால், தற்போது 20 கோடி நபர்களாக அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்முனைவோர்கள் போட்டியாளர்கள் மீது கவனம் செலுத்துவதைவிட வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எஃப்.எம்.சி.ஜி துறையின் முன்னோடி களில் ஒருவரான ஹரிஷ் மரிவாலா பேசும் போது,

‘‘முன்பெல்லாம் நுகர்பொருள் துறையில் ஒரு பொருளை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். விநியோகச் சங்கிலி மற்றும் விளம்பரத்துக்கு அதிகம் செலவாகும். ஆனால், தற்போது இணையம் மூலமே விற்க முடியும்; விளம்பரமும் செய்ய முடியும்,” என்று குறிப்பிட்டார்.

மென்பொருளை ஒரு சேவையாக வழங்குவதில் முன்னோடி நிறுவனமான ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேசும் போது,

“சிறிய நகரங்களில் நிறுவன கிளைகளை அமைப்பது பற்றி குறிப்பிட்டார். தென்காசியில் தங்கள் நிறுவன கிளை நிறுவனத்தை அமைத்திருப்பதன் மூலம், அந்த பகுதி மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என குறிப்பிட்டார்.
sridhar vembu

பட உதவி: pcmag

கல்வி அமைப்பை வலுப்படுத்துகிறோம் எனும் பெயரில் பாடத் திட்டங்களை கடினமாக்குவதில் பயனில்லை என்றும், இது மாணவர்களின் ஆர்வத்தை குறைத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில், மைண்ட்டிரீ இணை நிறுவனர் கிருஷ்ணகுமார் நடராஜன் மற்றும் கவின்கேர் தலைவர் சி.கே,ரங்கநாதன் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. நிறுவன கலாச்சாரம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த உரையாடல் நடைபெற்றது.

“மைண்ட்ட்ரீ பயணம் என்னை தனிப்பட்ட முறையில் செழுமையாக்கியுள்ளது. துவக்கத்தில் இந்த எண்ணம் பற்றி யோசித்த போது, மதிப்பு மிக்க மற்றும் அருமையான நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். இந்த இரண்டு வார்த்தைகளும் எங்கள் மனதில் பதிந்துவிட்டன.

நாங்கள் வர்த்தகம் துவக்கிய போது பலரும், உத்தி அல்லது கலாச்சாரம் ஆகியவற்றில் எதில் கவனம் செலுத்தப் போகிறீர்கள் எனக் கேட்பார்கள். இரண்டுமே அடிப்படையானவை. ஒன்று இன்னொன்றுக்கு விலையாகக் கூடாது. இன்று லாபம் அல்லது வளர்ச்சி ஆகிய அம்சங்கள் குறித்து யோசிக்கிறோம். ஒற்றை பரிமாண உலகில் இருந்து பல பரிமாண உலகிற்கு மாறியிருக்கிறோம். எனவே, நிறுவனத்திற்கு கலாச்சாரம், உத்தி இரண்டும் முக்கியம்,’ என்று கிருஷ்ணகுமார் கூறினார்.

ஒரு நிறுவன கலாச்சாரத்தை உருவாக்குவதில் வெற்றி மற்றும் தோல்வியின் பங்கு குறித்தும் இருவரும் விவாதித்தனர். நிறுவனத்தின் கலாச்சாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்தும் பேசினர்.

“லட்சியம் தான் நிறுவனங்களை இயக்குகிறது. நிறுவனர்கள் பெரிதாக வளரத் தயங்க கூடாது. வளர்ச்சிக்கு முன் செயல்முறையை உருவாக்கிக் கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிஆர்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் மற்றும் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தொழில்முனைவோர்கள் பல துறைகளில் களம் இறங்கலாமா என்னும் கேள்வியில் இருந்து உரையாடல் தொடங்கியது.

”பல துறைகளில் களம் இறங்குவது தவறில்லை. ஒரே இடத்தில் அனைத்து முதலீடும் இருக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்கு முன்பாக உங்களது தாய் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். உதாரணத்துக்கு ஜி.ஆர்.டி ஜுவல்லரி சிறப்பாகச் செயலபட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்க முடியும். அதேபோல பிற தொழில் விரிவாக்கத்துக்கு அதிக கடன் வாங்கக் கூடாது.

குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீதம் வரை சொந்த முதலீடு இருந்தால் மட்டுமே விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லை எனில் புதிய தொழில் எப்படி இருக்கும் எனத் தெரியாது. அதனால் வட்டி கட்டுவதிலே நேரம் வீணாகும்," என்றனர்.

இந்த ஆண்டு TiE Chennai PitchFest சிறப்பு போட்டியில், ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொரோனா சூழலுக்கான தீர்வுகளை முன்வைத்தன. முதலீட்டாளர்கள் முன் இவை தங்கள் தீர்வுகளை சமர்பித்தன. இதில், FIB-SOL Life Technologies நிறுவனம் வெற்றி பெற்றது.

பிட்ச்பெஸ்ட் போட்டியை அடுத்து, நடைபெற்ற உரையாடலில், நெஸ்லே நியூட்ரிஷன் முன்னாள் சி.இ.ஓ நந்து நந்திகிஷோர் மற்றும் TiE Global செயல் இயக்குனர் விஜய் மேனன் பங்கேற்றனர்.


மாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற தமிழ் அமரிவில், மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி.பாலன், பிராண்ட் அவ்தார் நிறுவனர் ஹேமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world