Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

டிக்டாக் உலகின் நாயகி; 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட சார்லி டி அமெலியோ!

டிக்டாக் மூலம் வெளிஉலகத்துக்கு அறிமுகமாகி பிரபலமானவர்கள் இங்கே ஏராளம். 16 வயதான சார்லி டி அமெலியோவும் அப்படித்தான்.

டிக்டாக் உலகின் நாயகி; 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட சார்லி டி அமெலியோ!

Friday November 27, 2020 , 2 min Read

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த செயலி மீதான மோகம் குறையவில்லை. தங்கள் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்து வீடியோவாக மாற்றி லைக், கமெண்ட், மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவதால் பலரும் இதை அதிகம் விரும்புகின்றனர்.


அதே சமயம் டிக்டாக்கை பலரும் தவறான செயல்பாடுகளுக்கான தளமாகவும் பயன்படுத்துகின்றனர். டிக்டாக் மூலம் வெளிஉலகத்துக்கு அறிமுகமாகி பிரபலமானவர்கள் இங்கே ஏராளம். 16 வயதான சார்லி டி அமெலியோவும் அப்படித்தான்.


பதினாறே வயதான அமெலியோவுக்கு டிக்டாக்கில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ். டிக்டாக் உலகில் புதிய சாதனை படைத்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். வெறும் ஒன்றரை ஆண்டுகளில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். சினிமா பிரபலங்களைக்காட்டிலும் அமெலியோவுக்கு ஃபாலோவர்ஸ் அதிகம் என்பது தான் இங்கே விநோதம்!

amelio

அமெரிக்காவைச் சேர்ந்த அமெலியோ நடன வீடியோக்களால் புகழடைந்தவர். அவரது டான்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பாதுகாப்பு காரணங்களுக்காக சீன செயலியான டிக்டாக் பல்வேறு பிரச்னைகளையும் பின்னடைவையும் சந்தித்தாலும் இளைஞர்களிடையே டிக்டாக் மோகம் குறையவில்லை.

நம்ப முடியாத வகையில் அமெலியோவின் டிக்டாக் வீடியோக்கள் ரீச் ஆகியுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை விட இரு மடங்கு ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார் அமெலியோ. ராக்-கை விட 3 மடங்கு அதிகமாகவும், செலினா கோமஸை விட 4 மடங்கு அதிக ஃபாலோவர்ஸ்களையும் டிக்டாக்கில் தனக்கென உருவாக்கி மாஸ் காட்டுகிறார்.

2019-ம் ஆண்டு மேமாதம் முதல் டிக்டாக்கில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளார் அமெலியோ. இன்று நம்ப முடியா உச்சத்தை தொட்டிருக்கிறார்.


100 மில்லியன் ஃபாலோவர்ஸ் என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்கிறார்கள் சமூக வலைதள விரும்பிகள். அமெரிக்கா முழுவதும் உள்ள இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் அமெலியோ. ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து மேடைகளில் தோன்றியுள்ளார். 

சார்லி

அவரது வாழ்க்கை பயணம் குறித்த ‘Essentially Charli: The Ultimate Guide to Keeping It Real' என்ற புத்தகத்தையும் விரைவில் வெளியிட உள்ளார். இந்த புத்தகம் விற்பனையில் பெரிய அளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டிக்டாக் மட்டுமல்லாத யூடியூப் போன்ற மற்ற சமூக ஊடகங்களில் கணக்கை தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவர்களது பெற்றோர்களான ஹெய்டி மற்றும் மார்க் ஆகியோர் தங்களது சொந்த சமூகவலைதள கணக்குகளை தொடங்கி பிரபலமாகியுள்ளனர். விரைவில் ரியாலிட்டி வெப் சீரிஸ் ஒன்றில் குடும்பத்தினர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. டிக்டாக் ஒருவரை இவ்வளவு உயர்த்துக்கு கொண்டு செல்லும் என்பதற்கு அமெலியோ ஒரு உதாரணம்!


தொகுப்பு: மலையரசு