சின்னத்திரை ஷூட்டிங் நாளை முதல் துவங்க தமிழக அரசு அனுமதி!

தமிழக அரசு, சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.

21st May 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஊரடங்கு காரணத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

சீரியல் ஷூட்

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கீழ் காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளார்கள்.


 • சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே (indoor shooting only) அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு (containment zones) இது பொருந்தாது.


 • பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது எனினும் ஊரக பகுதிகளில் தடைபட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளை தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதுமில்லை.


 • பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.


 • படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.


 • படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.


 • அதிகபட்சமாக நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 பேர் எண்ணிக்கைக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.


 • சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையர் இடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடமும் முன் அனுமதி பெற வேண்டும்.


 • மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.


படப்பிடிப்புக்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் உள்ளது.


தகவல்: டிஐபிஆர்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India