Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘ஒரே ஆண்டில் 21,161 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிய தமிழ்நாடு அரசு’ - அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்கப்பட்டுள்ளது.

‘ஒரே ஆண்டில் 21,161 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிய தமிழ்நாடு அரசு’ - அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்!

Wednesday June 01, 2022 , 5 min Read

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தொழில் திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முனைவோரை உருவாக்குவது போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய அளவில் தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்கப்பட்டுள்ளது.

Startup

நேற்று மே 31ம் தேதி அன்று ஐ.ஐ.டி. ஆய்வு பூங்கா வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்நிகழ்வினை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன், நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பாவின் இணை நிறுவனர் சிகே குமாரவேல், டெண்டர்கட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நிஷாந்த்சந்திரன், சாய் கிங்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜபகர் சாதிக், விஜய் அனந்த், தலைமை செயல் அலுவலர், தி ஸ்டார்ட் அப் சென்டர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கஇயக்க தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்டார்ட் அப் ’பிராண்ட் லேப்ஸ்’ என்றால் என்ன?

’ஸ்டார்ட் அப் பிராண்ட் லேப்ஸ்’ (StartupTN Brand Labs) என்பது புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவில் ஆர்வமுடையோர், மாணவர்கள், வெற்றியடைந்த தொழில் ஆளுமைகள், தொழில் முனைவு வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாக செயல்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பல புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான தயாரிப்புகளை உற்பத்தி செய்தாலும், சந்தைப்படுத்துதலிலும் வணிகச்சந்தையில் தனித்துவமான ஒரு இடத்தை அடைவதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காணும் களமாக இது அமையும். சந்தைப்படுத்துதல் (Marketing), மற்றும் தனித்த வணிக அடையாளத்துடன் விளங்குதல் (Branding) குறித்த கற்றல் நிகழ்வுகளும், அனுபவ பகிர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

StartupTN Launchpad என்பது புத்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தும் இடமாக அமைய உள்ளது. மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வில், சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிடும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது நிறுவனத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுவர்.

Startup

மேலும், தொடர்ந்து சந்தைப்படுத்துதல், தனித்த வணிக அடையாளத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள்வழங்கப்படும். www.startuptn.inஎன்ற இணையதளத்தில், StartupTN launchpad என்ற இணைப்பின் கீழ் இதற்கானவிண்ணப்ப படிவம் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

81 கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள் அமைப்பு:

StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ அன்பரசன், தமிழக இளைஞர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளால் தங்களை புத்தொழில்முனைவோர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அந்த புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் வணிக சந்தையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவே இன்று ஸ்டார்ட்அப் பிராண்ட் லேப்ஸ் மற்றம் ஸ்டார்ட்அப் லாஞ் பேட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

”ஸ்டார்ட் அப் பிராண்ட் லேப்ஸ் என்பது நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பாகவும், அந்த நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய கண்டுப்பிடிப்புகள் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு ஸ்டார்ட்அப் லாஞ் பேட் ஒரு தளமாக அமையும். இன்று TANSEED திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரால் மானியம் பெற்ற 19 புத்தொழில் நிறுவனங்களிலிருந்து 3 நிறுவனங்களின் தயாரிப்புகள் முதன் முதலாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், கல்லூரியில் படிக்கும் காலத்திலே மாணவர்கள், இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதே TANSIM என்னும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகும். இதன் மூலம் கல்லூரிகளிலேயே புதிய கண்டுபிடிப்புகளை வளர்தெடுக்க தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக,

“தமிழகம் முழுவதும், 81 கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காப்பகங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி பட்டறை, கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதி ஆண்டு மட்டும் 21 ஆயிரத்து 161 மாணவர்கள் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக,” தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் கீழ்காணும் திட்டங்கள் தொழில்முனைவோருக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளதையும், அதன் பயனையும் பட்டியலிட்டு விளக்கினார்.

புத்தாக்க பற்று சீட்டு திட்டம்:

கல்லூரிகளிலிருந்து தங்கள் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை தயாரிப்பதற்காக மானியம் Innovation Voucher Programme என்று அழைக்கப்படும் ’புத்தாக்க பற்று சீட்டு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 218 புதிய கண்டுபிடிப்பாளர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க, ரூ. 6 கோடியே 11 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Startup

டான்சிம் மூலம் புதுமை நிறைந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது தான், TANSEED என்று அழைக்கப்படும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கும் திட்டம் ஆகும்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பகுதி தொகையாக ரூ.95 லட்சம் முதல்வரால் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்கட்டிய அவர், மேலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு கூடுதலாக தேவைப்படும் முதலீட்டிற்கு முதலீட்டாளர்கள் சந்திப்பினையும் டான்சிம் ஏற்பாடு செய்து தருகிறது. நடப்பு ஆண்டு 100 புத்தொழில்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மானியமாக மொத்தம் ரூ.10 கோடி வழங்கப்பட உள்ளது. மேலும், முதல்வர் ’வளர்ந்து வரும் தொழில்களுக்கான தொடக்க நிதி’ என்ற புதிய திட்டத்தினை ரூ. 50 கோடி மதிப்பில் அறிவித்துள்ளார்,” எனத் தெரிவித்தார்.

நீட்ஸ் திட்டம்:

நீட்ஸ் (NEEDS) திட்டத்தின் கீழ் இன்ஜினியரிங் தொழிற்சாலை, ஆயத்த ஆடை தயாரித்தல், பிளாஸ்டிக், உணவு பொருட்கள் தயாரித்தல், ஓட்டல் தொழில், பல் மருத்துவமனை, பிட்னஸ் சென்டர், ஸ்கேன் சென்டர் போன்ற தொழில்களை தொடக்க அரசு உதவுகிறது. இந்த வகையான தொழில் முனைவோர்களுக்கு ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் உதவியும், ரூ.75 லட்சம் வரை அரசு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 1000 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் 929 தொழில் முனைவோருக்கு ரூ.148 கோடியே 57 லட்சம் மானியத்துடன் ரூ.594 கோடியே 28 லட்சம் வங்கிக் கடனுதவிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும் சேவை - வியாபார நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 5000 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4151 தொழில்முனைவோருக்கு ரூ.40 கோடியே 91 லட்சம் மானியத்துடன் ரூ.164 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சமும் சேவை நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அரசு மானியமாக, அதிகபட்சம் ரூ.8 இலட்சத்து 75 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 3,500 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3488 தொழில்முனைவோருக்கு ரூ.85 கோடியே 89 லட்சம் மானியத்துடன் ரூ. 343 கோடியே 56 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

Startup

ஒற்றைச் சாளர தகவின் இரண்டாம் பதிப்பு (Single Window Portal - 2.0):

தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெரும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர தகவினையின் இரண்டாம் பதிப்பினை 20.7.2021 அன்று துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு அமைப்புகள் வழங்கும் 190 சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8032 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 6,909 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கடன் உத்திரவாத திட்டம் (TNCGS):

தொழில்முனைவோர்கள் புதிய தொழில் துவங்க சொத்து பிணையில்லா வங்கிக் கடன் பெற நமது முதல்வர் அவர்கள் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டத்தை அறிவித்து உள்ளார்கள். MSME நிறுவனங்கள் பெறும் வங்கிக் கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்திரவாதத்தினை தமிழக அரசே வழங்கும். மேலும் இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்திரவாதம் வழங்கவுள்ள ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என அமைச்சர் பேசினார்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம்:

தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 127 தொழிற்பேட்டைகளில் 9 ஆயிரத்து 938 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 467 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு சிட்கோ தொழில்மனைகள் அதிக விலை காரணமாக 122 தொழிற்பேட்டைகளில் 371 ஏக்கர் பரப்பளவில் 1341 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. தொழில் மனைகளின் விலை 5% முதல் 75% வரை குறைக்கப்பட்டதால் 3 மாதத்தில் 553 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

புத்தொழில் முனைவோர் தங்களுடைய கண்டுப்பிடிப்புகளையும் தயாரிப்புகளையும் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை பயன்படுத்தி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எனவே தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வரும் அதற்கான அனைத்து உதவிகளையும் உங்களுடைய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார் அமைச்சர்..