கோவை MSME-களை மேம்படுத்தும் திட்டங்கள் வகுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த வர்த்தக அமைப்பு!

டெக்ஸ்டைல் ​​பூங்காவை பெற கோரிக்கை!
1 CLAP
0

இந்திய வணிகர் சங்கங்களின் கோயம்புத்தூர் பிரிவு திங்கள்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு தொழிலை மேம்படுத்த கோவையில் தேவைப்படும் உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் சுலபமாக வியாபாரம் செய்வதற்கான வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) புத்துயிர் பெறுவதற்காக என்.சுந்தரதேவன் குழுவின் முன்மொழிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்குமண்டல பிராந்தியம் பெரிய ஜவுளி மையங்களாக இருப்பதால், மத்திய அரசு அனுமதித்த ஏழு மெகா டெக்ஸ்டைல் ​​பூங்காக்களில் ஒன்றை மாநில அரசு பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

கோரிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த பிறகு பேசிய பாலசுப்பிரமணியன் என்பவர்,

“பம்ப்செட்டுகள், வெட் கிரைன்டர்கள், நகைகள் மற்றும் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய ஒரு தொழில்துறை தோட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், வால்மார்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவை தமிழ்நாட்டில் MSME-களுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க, நீண்டகால ஒத்துழைப்பை ஏற்படுத்த, தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தின. இந்தநிலையில் தான் தற்போது கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

“தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எம்எஸ்எம்-க்கள் உள்ளன, அவை உலகெங்கிலும் தங்கள் தயாரிப்பு தரம் மற்றும் கைவினைத்திறனுக்காக புகழ்பெற்றவை. எங்கள் Msme-க்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு. 2030-க்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நமது தொலைநோக்குப் பார்வையை அடைய உதவுவதற்கு அவர்களின் வளர்ச்சி முக்கியமானது," என்றுள்ளார்.

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர் மற்றும் உற்பத்தி கொள்கை 2020, தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகன கொள்கை 2019, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாட்டு கட்டிடங்கள் 2019 மற்றும் பல திட்டங்கள் மூலம், கோயம்புத்தூர் நகரம் இந்தியாவின் குறிப்பிடத்தக்க உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாறும் சாத்தியம் உள்ளது. இதனால் நகரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என்று நிறுவன அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர், 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது இது ஜவுளித் தொழிலுக்கு அளிக்கும் மகத்தான ஆதரவு காரணமாக, தமிழ்நாட்டின் வணிக சமூகத்தில் கோவை முக்கியத்துவம் பெறுகிறது. 

தகவல்: பிடிஐ | தொகுப்பு: மலையரசு