Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

சாலைவழி பயணத்தில் டாய்லெட் இல்லாமல் தவித்த லஷ்மி மேனனுக்கு உருவான ஐடியாவே ‘Toiless’

கேரளாவைச் சேர்ந்த சமூக தொழில்முனைவரான லஷ்மி மேனனின் Toiless பிராஜெக்ட் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பொடிக், திருமண மண்டபங்கள் போன்றவற்றுடன் கைகோர்த்து `கட்டண கழிப்பிட’ வசதியை வழங்குகிறது.

சாலைவழி பயணத்தில் டாய்லெட் இல்லாமல் தவித்த லஷ்மி மேனனுக்கு உருவான ஐடியாவே ‘Toiless’

Friday July 01, 2022 , 3 min Read

லஷ்மி மேனன் சமூக தொழில்முனைவர். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் சாலை மார்க்கமாக கொச்சி முதல் காசர்கோடு வரை (265 கி.மீட்டர்) பயணம் செய்யத் தீர்மானித்தார்.

பெருந்தொற்று காரணமாக சிறு வணிகங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொறுப்புணர்வுடன், பொருட்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர் நினைத்தார். இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பயணத்தை திட்டமிட்டார்.

1

லஷ்மி மேனன் - நிறுவனர், Toiless

“மக்கள் ஆன்லைனில் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சிறு வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். சிறு வியாபாரிகளைத் தேடிச் சென்று மக்கள் பொருட்கள் வாங்கவேண்டும்,” என்கிறார் லஷ்மி மேனன்.

லஷ்மி, Ammoommathiri என்கிற, முதியோர்கள் தயாரிக்கும் காட்டன் திரிகள் விற்பனை, Chekutty என்கிற செக்குட்டி பொம்மைகள் தயாரிப்பு, CoVeed என்கிற மளிகைப்பொருட்கள் விநியோகிக்கும் முயற்சி, Shaaya என்கிற பிபிஇ கிட் கழிவுகள் மூலம் படுக்கை தயாரிக்கும் பிராஜெக்ட் என பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

லஷ்மி, அவரது பயணத்தைப் பற்றி பலரிடம் கலந்து பேசியிருக்கிறார். கிளப்ஹவுஸ் செயலியில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பயணத்தின்போது என்ன சாப்பிடலாம், எங்கு தங்கலாம், எங்கெல்லாம் செல்லாம் இப்படி பல விஷயங்களைப் பற்றி மக்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும் சில சவால்கள் இருக்கத்தானே செய்யும். அதுபோல் இவரது பயணத்தில் பெண்கள் வழக்கமாக சந்திக்கும் முக்கியப் பிரச்சனையான கழிப்பறை பிரச்சனையை இவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“சாலைவழி பயணம் சென்றபோது வழியில் டாய்லெட் (Toilet) வசதி இருக்காது என நான் எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் ரெஸ்டாரண்டுகளுக்கோ நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளுக்கோ செல்லமுடியும். ஆனால் பெருந்தொற்று சமயத்தில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போனது,” என்கிறார்.

திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே பயணத்தை முடித்துக்கொண்டு கொச்சி திரும்பினார். இந்த அனுபவமே Toiless முயற்சிக்கு வழிவகுத்திருக்கிறது. பெண்கள் சந்திக்கும் கழிப்பறை வசதி பிரச்சனைக்கு தீர்வுகாண்பதே இந்த பிராஜெக்டின் நோக்கம்.

இந்த பிராஜெக்ட் மிகவும் எளிமையானது. பயணம் மேற்கொள்பவர்களுக்காக பிரத்யேகமாக கழிப்பறைகள் கட்டவேண்டிய அவசியமில்லை. மாறாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பொடிக், திருமண மண்டபங்கள் போன்றவற்றுடன் கைகோர்த்து ’கட்டண கழிப்பிட’ வசதியை வழங்கும் வகையில் இந்த பிராஜெக்ட் திட்டமிடப்பட்டது.

குறிப்பிட்ட வசதிகள் இருப்பதை உறுதிசெய்துகொண்டால் போதும் Toiless திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். இப்படி இணைபவர்கள் Travel Ally என அழைக்கப்படுகின்றனர்.

“கழிப்பறை உலர்வாக இருக்கவேண்டும். ஹெல்த் பாஸட் எனப்படும் கழிப்பறை குழாய், டிஷ்யூ பேப்பர், பைகளை மாட்டுவதற்காக ஹூக், மூடியுடன்கூடிய குப்பைத்தொட்டி, மொபைல், சாவி போன்ற பொருட்களை வைக்க ஒரு சின்ன ஸ்டாண்ட் ஆகியவை கழிப்பறையில் இருக்கவேண்டும். முடிந்தால் ஒரு கண்ணாடி மாட்டி வைக்கலாம்,” என லஷ்மி விவரித்தார்.

Travel Ally அவரவர் வசதிப்படி கூடுதல் அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஒருமுறை கழிப்பறையைப் பயன்படுத்த குறைந்தபட்சமாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இதுபோன்ற Travel Allies இணைத்துக்கொள்வது எப்படி? பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த வசதியை தெரியப்படுத்துவது எப்படி? அடுத்து இதுபற்றி யோசித்தார் லஷ்மி.

2
“செயலி உருவாக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கு 10 லட்ச ரூபாய் வரை கேட்டார்கள். கிளப்ஹவுஸ் குழு ஒன்றில் கத்தாரிலிருந்து கேரளாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் பேசினார். பயணிகள் கழிப்பறைகளை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் வெப் ஆப் வடிவமைத்துத் தருவதாக சொன்னார்,” என்கிறார்.

வலைதள பக்கம் பற்றிய தகவல்களையும் இந்த முயற்சி பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்க லஷ்மி இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திக் கொண்டார்.

Toiless கழிப்பறை வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சி என்பதைத் தாண்டி வலுவான மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் முயற்சியாகவும் உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“ஒரு பெண் ஒரு ஃபர்னிச்சர் கடை, பொடிக், ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களுக்கு செல்லும்போது பிரவுஸ் செய்ய வாய்ப்புண்டு. இதன் மூலம்  பிராண்டுகள் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இதுவும் ஒரு வகையான விளம்பரம்தான். இதுதவிர கழிப்பறை வசதியைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் வருமானம் ஈட்டப்படும்,” என விவரித்தார்.

Toiless ஆண், பெண் இருவருக்குமான கழிப்பறை வசதிகளை வழங்கினாலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற Kerala Travel Mart மாநாட்டில் Toiless முயற்சி பெரிதும் ஊக்குவிக்கப்பட்டது.

“பயணங்கள் துறையைப் பொறுத்தவரை சுத்தமான கழிப்பறை வசதி கிடைப்பது கைடுகளுக்கு மிகப்பெரிய சவால். ஒவ்வொரு ட்ரிப் தொடங்கும் முன்பும் சுத்தமான நான்கு கழிப்பறைகள் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் பயணங்கள் திட்டமிடப்படுவதாக என்னிடம் சொன்னார்கள்,” என்கிறார்.

இதுவரை Toiless 20-க்கும் மேற்பட்ட Travel Allies உடன் இணைந்துள்ளது. தற்சமயம் லஷ்மி தனி நபராக இந்த பிராஜெக்டை நிர்வகித்து வருகிறார். சில நேரங்களில் சில இடங்களை நேரில் சென்று அவர் பார்வையிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த முயற்சியைப் பற்றி சமூக வலைதளங்களின் உதவியுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து மேலும் பலரை இணைத்துக்கொள்ள லஷ்மி விரும்புகிறார்.

“ஒவ்வொரு Travel Ally கழிப்பறையிலும் ’கோமதி’ என்கிற அடையாளத்துடன் போஸ்டர்கள் வைத்திருக்கிறோம். கழிப்பறை சுத்தமாக இருக்க எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டாய்லெட்களை பயன்படுத்துபவர்கள் அவற்றை சுத்தப்படுத்துபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்,” என்கிறார் லஷ்மி.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா