‘டோக்கியோ பாராலிம்பிக் 2021’ - போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் யார்?
இந்தியா சார்பில் 54 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு!
2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் திருவிழா இன்று தொடங்குகிறது. கொரோனா காரணமாக கடந்த வருடம் நடக்க வேண்டிய இந்த தொடர் ஒருவருடம் கழித்து நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடந்த டோக்கியோவில் தான் பாராலிம்பிக்ஸ் தொடரும் நடக்கிறது. இது செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாராலிம்பிக்ஸில் மொத்தம் 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். சில தினங்கள் முன் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கைப் போலவே, பாராலிம்பிக்ஸிலும் கடுமையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாராலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் மொத்தம் 54 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது.
மொத்தம் 9 விளையாட்டுகளில் இவர்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதற்கு முன் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட பலர் இந்தமுறையும் பாராலிம்பிக்ஸின் நம்பிக்கை நட்சத்திரங்களாக டோக்கியோ சென்றுள்ளனர்.
இன்று தொடக்க விழாவுடன் தொடங்கும் பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் விவரங்களை விரிவாக பார்ப்போம்!
ஆகஸ்ட் 25
டேபிள் டென்னிஸ்
தனிநபர் சி 3 (ஆண்கள் பிரிவு) - சோனல்பென் மதுபாய் படேல்
தனிநபர் சி 4 (ஆண்கள் பிரிவு) - பாவினா ஹஸ்முக்பாய் படேல்
ஆகஸ்ட் 27
வில்வித்தை
தனிநபர் ஓபன் (ஆண்கள் பிரிவு) - ஹர்விந்தர் சிங், விவேக் சிக்காரா
ஆண்கள் இரட்டையர் பிரிவு - ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் சுவாமி
தனிநபர் (பெண்கள் பிரிவு) - ஜோதி பலியன்
கலப்பு இரட்டையர் பிரிவு - ஜோதி பலியன் மற்றும் டிபிசி
பளு தூக்குதல் போட்டி
65 கிலோ (ஆண்கள் பிரிவு) - ஜெய்தீப் தேஸ்வால்
50 கிலோ (பெண்கள் பிரிவு) - சகினா கதூன்
நீச்சல் போட்டி
200 மீ தனிநபர் மெட்லி எஸ்எம் 7 (ஆண்கள் பிரிவு) - சுயஷ் ஜாதவ்
ஆகஸ்ட் 28
தடகளம்
ஈட்டி எறிதல் போட்டி (ஆண்கள் பிரிவு) - ரஞ்சித் பாட்டி
ஆகஸ்ட் 29
தடகளம்
வட்டு எறிதல் போட்டி (ஆண்கள் பிரிவு) - வினோத் குமார்
உயரம் தாண்டுதல் போட்டி (ஆண்கள் பிரிவு) - நிஷாத் குமார், ராம் பால்
ஆகஸ்ட் 30
துப்பாக்கிசூடுதல் போட்டி
ஆர் 1 - 10 மீ ஏர் ரைபிள் (ஆண்கள் பிரிவு) - ஸ்வரூப் மகாவீர் உன்ஹல்கர், தீபக் சைனி
ஆர் 2 - 10 மீ ஏர் ரைபிள் (பெண்கள் பிரிவு) - ஆவணி லேகாரா
தடகளம்
வட்டு எறிதல் (ஆண்கள் பிரிவு) - யோகேஷ் கத்துனியா
ஈட்டி எறிதல் (ஆண்கள் பிரிவு) - சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங், தேவேந்திர ஜஜாரியா
ஈட்டி எறிதல் (ஆண்கள் பிரிவு) - சுமித் ஆன்டில், சந்தீப் சவுத்ரி
ஆகஸ்ட் 31
துப்பாக்கிசூடுதல் போட்டி
பி 1 - 10 மீ ஏர் பிஸ்டல் (ஆண்கள் பிரிவு) - மணீஷ் நர்வால், தீபேந்தர் சிங், சிங்கராஜ்
P2 - 10 மீ ஏர் பிஸ்டல் (பெண்கள் பிரிவு) - ரூபினா பிரான்சிஸ்
தடகளம்
உயரம் தாண்டுதல் (ஆண்கள் பிரிவு) - ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பதி
ஷாட் புட் போட்டி (பெண்கள் பிரிவு)- பாக்யஸ்ரீ மாதவ்ராவ் ஜாதவ்
செப்டம்பர் 1
பூப்பந்து
ஒற்றையர் (ஆண்கள் பிரிவு) - பிரமோத் பகத், மனோஜ் சர்கார்
ஒற்றையர் (பெண்கள் பிரிவு) - பாலக் கோஹ்லி
கலப்பு இரட்டையர் பிரிவு - பிரமோத் பகத் & பாலக் கோஹ்லி
தடகளம்
கிளப் த்ரோ போட்டி (ஆண்கள் பிரிவு) - தரம்பீர் நைன், அமித் குமார் சரோஹா
செப்டம்பர் 2
பூப்பந்து
ஒற்றையர் (ஆண்கள் பிரிவு) - சுஹாஸ் லலினகெரே யதிராஜ், தருண் தில்லான், கிருஷ்ணா
ஒற்றையர் (பெண்கள் பிரிவு) - பருல் பர்மார்
இரட்டையர் (பெண்கள் பிரிவு) - பருல் பர்மார் மற்றும் பாலக் கோஹ்லி
பாரா கேனோயிங் (துடுப்பு படகு போட்டி) (பெண்கள் பிரிவு) - பிராச்சி யாதவ்
டேக்வாண்டோ தற்காப்பு கலை (பெண்கள் பிரிவு) - 44 -49 கிலோ பிரிவு - அருணா தன்வார்
துப்பாக்கிச் சுடுதல் கலப்பு பிரிவு - ஆகாஷ் & ராகுல் ஜாகர்
தடகளம்
ஆண்கள் ஷாட் புட் - அரவிந்த் மாலிக்
செப்டம்பர் 3
நீச்சல் போட்டி
50 மீ பட்டர்பிளை பிரிவு - சுயஷ் ஜாதவ், நிரஞ்சன் முகுந்தன்
துப்பாக்கிச்சுடுதல்
ஆண்கள் R7 - 50 மீ பிரிவு - தீபக் சைனி
மகளிர் R 8 - 50 மீ பிரிவு - ஆவணி லேகாரா
தடகளம்
உயரம் தாண்டுதல் (ஆண்கள் பிரிவு) - பிரவீன் குமார்
ஈட்டி எறிதல் (ஆண்கள் பிரிவு) - தேக் சந்த்
ஷாட் புட் (ஆண்கள் பிரிவு) - சோமன் ராணா
கிளப் த்ரோ (பெண்கள் பிரிவு) - ஏக்தா பியான், காஷிஷ் லக்ரா
செப்டம்பர் 4
துப்பாக்கிச்சுடுதல்
R3 - 10 மீ ஏர் ரைபிள் (கலப்பு பிரிவு) - தீபக் சைனி, சித்தார்த்த பாபு & ஆவணி லேகாரா
பி 4 - 50 மீ பிஸ்டல் (கலப்பு பிரிவு) - ஆகாஷ், மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ்
தடகளம்
ஈட்டி எறிதல் (ஆண்கள்)- நவ்தீப் சிங்
செப்டம்பர் 5
துப்பாக்கிச்சுடுதல்
R6 - 50 மீ ரைஃபிள் (கலப்பு பிரிவு) - தீபக் சைனி, ஆவணி லேகாரா மற்றும் சித்தார்த்த பாபு
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஒளிபரப்பு & நேரடி ஸ்ட்ரீமிங் விவரங்கள்!
அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் சேனல் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஒட்டுமொத்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளையும் யூரோஸ்போர்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதேபோல் போட்டிகளில் டிஸ்கவரி+ செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.