நரேன் கார்த்திகேயனின் ‘DriveX’ ஸ்டார்ட்-அப்’இல் டிவிஎஸ் மோட்டார்ஸ் முதலீடு!
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின், பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மேடையான “DriveX” ஸ்டார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின், பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மேடையான ’DriveX’ ஸ்டார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
முறைசார பிரிவில் இருந்து முறை சார்ந்த பிரிவுக்கு மாறி வரும் பயன்படுத்திய வாகனங்கள் பிரிவில் வலுவான வளர்ச்சி வாய்ப்பு இருப்பதை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உணர்ந்துள்ளதாக இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பிரிவு, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஸ்டார்ட் அப்கள் காரணமாக அண்மை ஆண்டுகளில் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
DriveX நிறுவனத்தில் முதலீடு செய்த TVS
இந்த மாற்றத்தை வழிநடத்தும் புதுமையாக்க தீர்வுகளை உருவாக்குவதற்கு உதவியாக DriveX நிறுவன முதலீடு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய கார் டிரைவரான நரேன் கார்த்திகேயன் தொடங்கியுள்ள DriveX நிறுவனம் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பிரிவின் மொத்த மதிப்பு சங்கிலியிலும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த மாதிரியை கொண்டுள்ளது. கொள்முதல், மறுசீரமைப்பு மற்றும் பல பிராண்ட் வாகனங்களை விற்பனை செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
2020 ஏப்ரலில் நிறுவப்பட்ட DriveX இரு சக்கர வாகனங்களின் சந்தா சேவை மேடையாக துவங்கியது. எளிதாக அணுகக் கூடிய போக்குவரத்து சேவைகளை வழங்கி ஐந்து நகரங்களுக்கு விரிவாக்கம் பெற்றது.
“பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பிரிவு வேகமாக மாறி வருகிறது. மதிப்புச் சங்கிலி முழுவதும் தனித்துவமான அனலிடிக்ஸ் சார்ந்த பல பிராண்ட் வாகனங்களை வழங்கும் முதல் டிஜிட்டல் வர்த்தகமாக DriveX விளங்குகிறது. இந்தப் பிரிவில் சந்தா சேவை உள்ளிட்ட புதிய வர்த்தக மாதிரிகளையும் வெற்றிகரமாக அறிமுகம் செய்து வருகிறோம்,” என இந்த முதலீடு தொடர்பான நிகழ்வில் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நரேன் கார்த்திகேயன் கூறினார்.
வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்த உள்ளது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதலீடு மூலம் நிறுவன தொலைநோக்கை விரிவாக்கம் செய்வது மற்றும் நுகர்வோர் எதிர்பார்ப்பை மிஞ்சும் பயன்படுத்திய கார் அனுபவத்தை வழங்கும் நம்பிக்கை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
“பயன்படுத்திய இருசக்கர வாகனப் பிரிவு இன்று அதிகம் முறைசாரா பிரிவில் உள்ளது. DriveX நிறுவனம் குறுகிய காலத்தில் உருவாகி, வளர்ந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நரேன் மற்றும் அவரது குழுவினர், வேகமாக வளரக்கூடிய தனித்துவமான மேடையை உருவாக்கியுள்ளனர். தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான தீர்வுகள் மூலம் இந்தப் பிரிவில் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதை DriveX நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது,” என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு முதலீட்டிற்கான அறிவிப்பின் போது தெரிவித்தார்.