ஐரோப்பாவில் தடம் பதிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் - எமில் ஃப்ரே குழுவுடன் கைகோர்க்கிறது!

TVS மோட்டார் நிறுவனம் சூரிச் சார்ந்த எமில் ஃப்ரே குழுமத்துடன் கூட்டணி அமைத்து ஐரோப்பிய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் தடம் பதிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் - எமில் ஃப்ரே குழுவுடன் கைகோர்க்கிறது!

Friday November 17, 2023,

1 min Read

எமில் ஃப்ரே ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாகும்,

TVS மோட்டார் நிறுவனம் சூரிச் சார்ந்த எமில் ஃப்ரே குழுமத்துடன் கூட்டணி அமைத்து ஐரோப்பிய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது.

100 ஆண்டுகள் பழமையான நிறுவனமும், வாகன விநியோகத்தில் முன்னணி பெயருமான எமில் ஃப்ரே நிறுவனத்துடன், இறக்குமதி மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் கையெழுத்திட்டுள்ளது.

TVS

எமில் ஃப்ரேயின் விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் ஐரோப்பாவில் ஆழமான சந்தை நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் TVS மோட்டார் நிறுவனத்திற்கான உலகளாவிய விரிவாக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்தக் கூட்டாண்மை குறிக்கிறது.

இதுகுறித்து VS மோட்டார் கம்பெனி எம்.டி. சுதர்சன் வேணு கூறுகையில்,

"Emil Frey உடனான இந்த மூலோபாய கூட்டணி எங்கள் உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு முக்கியமான படியாகும். ஐரோப்பா எங்களுக்கு முக்கிய சந்தையாக இருக்கும். மேலும், இந்த கூட்டாண்மை மூலம், எங்கள் அதிநவீன தயாரிப்புகளை ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார்.

Emil Frey ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாகும், இது பிராந்தியம் முழுவதும் பல முன்னணி வாகன பிராண்டுகளுக்கு சேவை செய்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் TVS தயாரிப்புகளின் விநியோகம், விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவை நெட்வொர்க்குகளை Emil Frey குழும நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளும்.

ஐரோப்பாவில் கிடைக்கும் TVS தயாரிப்புகளில் Jupiter 125, NTORQ, Raider, iQube S, Ronin, Apache RR 310 மற்றும் Apache RTR 310 ஆகியவை அடங்கும். TVS மோட்டார் தயாரிப்புகள் ஏற்கனவே ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் லத்தீன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 பகுதிகளில் ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.