செம டுவிஸ்ட்: ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம்- எலான் மஸ்க் கொடுத்த ஷாக்!

By Durga
டுவிட்டர் நிறுவனத்தைவாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
0 CLAPS
0

கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான உடன்படிக்கை நிறைவு பெற்று இந்த தளத்தை மஸ்க் வாங்குவது உறுதியானது. இந்த நிலையில், திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள் நிலுவையில் இருக்கும் காரணத்தால் டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5%-க்கும் குறைவான பயனர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற கணக்கை ஊர்ஜிதப்படுத்தும் விவரங்கள் நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டுவிட்டர் இன்க் தாக்கல் செய்த மதிப்பீட்டில், சமூகவலைதள நிறுவனமானது முதல் காலாண்டில் 229 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் 5%-க்கும் குறைவாகவே இருக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவை என மஸ்க் தெரிவித்தார்.

Tesla CEO Elon Musk

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் அதாவது, 3.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கு மஸ்க் ஒப்புக் கொண்டார். முன்னதாக டுவிட்டரின் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கிய மஸ்க், அதை தனக்குச் சொந்தமாக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டார்.

டுவிட்டருக்கு டிமாண்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் குறிப்பிட்டார். தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதத்தில் வாங்க தயார் எனவும் விற்பனை தொகையை பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டரை எலான் மஸ்க்கிற்கு விற்கு அதன் இயக்குனர் குழு ஒப்புக் கொண்டது.

டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதியான தினத்தில் இருந்து அவர் தலைமை செயல்பாட்டு இடத்தில் இருந்து மஸ்க் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையிஸ் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து திடீரென பின்வாங்குவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest

Updates from around the world