சச்சின் டெண்டுல்கருடன் கல்வி நிறுவனம் Unacademy ஒப்பந்தம்!
ஆன்லைன் கல்வி நிறுவனமான அன்அகாடமி தனது விளையாட்டுத்துறை சார்ந்த உள்ளடக்கத்திற்காக கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த யூனிகார்ன் நிறுவனத்தின் விளம்பர தூதராக அவர் செயல்படுவார்.
கல்வித்துறை யூனிகார்ன் நிறுவனமான 'அன்அகாடமி' கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சச்சின், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக விளங்குவதோடு, இந்த மேடைக்கான விளையாட்டுத்துறை உள்ளடக்கத்தையும் உருவாக்க இருக்கிறார். சச்சின் நடத்த உள்ள தொடர் நேரடி பயிற்சிகள் இதன் பயனாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும்.
சச்சினுடன் உள்ளடக்கம் சார்ந்த ஆழமான உறவை உருவாக்கிக் கொள்ள இருப்பதாகவும், இது தொடர்பாக வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"கல்வியை ஜனநாயகமயமாக்க வேண்டும், பாரம்பரிய கல்வி முறையை தாண்டி செல்லக்கூடிய ஒட்டுமொத்த கற்றல் தீர்வுகளை அளிக்க வேண்டும் என்பது தான் UnAcademy-இல் எங்களது நோக்கம். சச்சினின் வாழ்க்கை மற்றும் பயணம், எல்லையில்லா தடைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கான அடையாளமாக அமைகிறது,” என்று அதன் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கவுரர்வ் முஞ்சால் கூறியுள்ளார்.
இந்த கூட்டுறவு மூலம், சச்சின் தனது வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரச் செய்யும் வகையில் இணையில்லாத கற்றல் அனுபவத்தை உருவாக்கித்தர இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு கற்றல் பிரிவில் சச்சினுடன் இணைந்து ஆழமான கற்றல் உள்ளடக்கத்தை அனாகடமி உருவாக்கி வருவதாக தெரிகிறது.
"மக்களை ஒன்றிணைக்கும் மேடையாக மட்டும் அல்லாமல், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் தனிநபர்களுக்கு உதவக்கூடிய பாடங்களை அளிக்கக் கூடிய ஊடகமாக விளையாட்டை கருது வந்திருக்கிறேன். இளம் சிறுவர்கள், சிறுமிகளுடன் எனது விளையாட்டு கற்றலை பகிர்ந்து கொண்டு அவர்கள் தங்களது சிறந்த வடிவத்தை அடைய ஊக்குவிக்கு விரும்பியிருக்கிறேன். என்னுடைய இந்த பார்வை, அன்அகாடமியின் கல்வியை ஜனநாயகமயமாக்கும் நோக்கத்துடன் இணையும் போது, தனித்தன்மை வாய்ந்த கற்றல் அனுபவத்தை உருவாக்க நாங்கள் ஒன்றிணைய தீர்மானித்தோம்,” என்று சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியுள்ளார்.
அன்அகாடமியின் மிகப்பெரிய போட்டியாளரான பைஜூஸ், பல ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானை விளம்பர தூதராக கொண்டுள்ளது. இதனிடையே தொழில்முறை கல்வி வழங்கும் கிரேட் லேர்னிங் கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளது.
அன்அகாடமி இதற்கு முன், பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் அனுஷ்கா ஆகியோரது பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர் சிம்மன்