2020-ன் 'யூனிகார்ன்கள்' – கொரோனா மத்தியில் சிகரம் தொட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

By YS TEAM TAMIL|30th Dec 2020
2020ல், கொரோனா பொருளாதாத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூழலிலும், இந்தியாவில் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றன.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

2020ல், பெருந்தொற்றின் துவக்கத்தில், இந்திய ஸ்டார்ட் அப் சூழல், சாதனை எண்ணிக்கையில் யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கும் என யாரேனும் கூறியிருந்தால், அதை நிச்சயம் நம்பியிருக்க மாட்டோம்.


ஆனால், 2020ல் மற்ற எந்த ஸ்டார்ட் அப் சூழலில் இருந்தும் மாறுபட்டு இந்தியா 11 யூனிகார்ன் நிறுவனங்களை கண்டுள்ளது.

ஸ்டார்ட் அப்
InMobi-யின் துணை நிறுவனமான Glance, அண்மையில் யூனிகார்ன் குழுவில் இணைந்துள்ளது. DailyHunt-ன் தாய் நிறுவனமான VerSe இன்னொவேஷனும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2012ல் இன்மொபி இந்தியாவின் முதல் யூனிகார்னாக உருவான பிறகு, இந்தியாவில் 35 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 100 கோடி டாலர் மதிப்பு கொண்ட யூனிகார்ன் பட்டியலில் இணையும் வேகம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் இது நிகழ்வது இன்னும் குறிப்பிடத்தக்கது.


2020 முடிவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு உருவான இந்திய யூனிகார்ன் நிறுவனங்கள் பற்றிய பார்வையை யுவர்ஸ்டோரி அளிக்கிறது.

பைன் லேப்ஸ் Pine Labs

இந்த ஆண்டு துவக்கத்தில் பைன் லேப்ஸ் அது துவங்கிய 22 ஆண்டுகளுக்குப் பிறகு யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. நாட்டின் பழமையான வர்த்தகர் பணம் செலுத்தும் சேவை நிறுவனமான பைன் லேப்ஸ், 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் மாஸ்டர்கார்டு நிறுவனத்திடம் இருந்து, தொகை குறிப்பிடப்படாத நிதி திரட்டியது. இது 100 முதல் 150 மில்லியன் டாலராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

B.Amrish Rau, Chief Executive Officer, Pine Labs

B.Amrish Rau, Chief Executive Officer, Pine Labs

1998ல், லோக்வீ கபூர், ராகுல் கார்க் மற்றும் தருண் உபாத்யாவால் துவக்கப்பட்ட பைன் லேப்ஸ், முதலில் கார்டு சார்ந்த பேமெண்ட் மற்றும் லாயல்டி தீர்வுகளை வழங்கியது. 2012ல் பி.ஓ.எஸ் பேமெண்டில் நுழைந்தது.

ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை கையாள்வதாக நிறுவனம் தெரிவிக்கிறது. 4,50,000 நெட்வொர்க் புள்ளிகளில் 1,40,000 வர்த்தகர்களுக்கு சேவை அளிக்கிறது.

கொரோனா சூழலில், நிறுவனம் வர்த்தகர்கள் இணைவதில் 67 சதவீத உயர்வு கண்டது. மாதம், 12,000 வர்த்தகர்களை இணைத்துக்கொண்டதில் இருந்து மாதம் 20,000 வர்த்தகர்களை இணைக்கும் நிலைக்கு முன்னேறியது.


Pay Later சேவை மற்றும் பரிசு அட்டைகள் சேவையையும் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட்கிரை FirstCry

பத்தாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ஃபர்ஸ்ட்கிரை (FirstCry), 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், சாப்ட் பேங்கிடம் இருந்து பிப்ரவரி மாதம் பெற்ற 400 மில்லியன் டாலர் நிதி மூலம் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. இந்த நிதியின் முதல் பகுதியான 300 மில்லியன் டாலர் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. மீது 100 மில்லியன் டாலர் ஜனவரி மாதம் எதிர்பார்க்கப்படுகிறது.


2010ல், சுபம் மகேஸ்வரி மற்றும் அமித்வா சாஹாவால் துவக்கப்பட்ட புனேவைச்சேர்ந்த FirstCry, தாய், சேய் நலப்பொருட்களுக்கான பிரிவில் முன்னணியில் இருக்கிறது. 6,000 பிராண்ட்களில் இரண்டு லட்சம் குழந்தை நலப்பொருட்களைக் கொண்டிருப்பதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது.

supam-maheshwari-firstcry-ceo

FirstCry Co-founder Supam Maheshwari

125 நகரங்களில் 400 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள நிறுவனம், மாதந்தோறும் 11 மில்லியன் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்கிறது.

அண்மையில் நிறுவனம் வருவாயில் 65.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வருவாய் ரூ.887.5 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் நிகர நஷ்டமும், 2020ல் ரூ.932.7 கோடியில் இருந்து ரூ.162.7 கோடியாக குறைந்துள்ளது.

நைகா Nykaa

மும்பையைச் சேர்ந்த வாழ்வியல் தேவை நிறுவனமான நைகா (Nykaa) இந்திய இ-காமர்ஸ் துறையில் அதிகம் பேசப்படாத நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


2012ல் பால்குனி நாயரால் துவங்கப்பட்ட நிறுவனம், வளர்ச்சிக்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. கொரோனா தொற்று துவங்கும் முன், நிறுவனம் 2019 நிதியாண்டில் லாபம் ஈட்டியதாக அறிவித்தது. பொதுமுடக்கத்தின் போது, நிறுவனம் நாட்டின் 14,000 பின்கோடுகளில் பொருட்களை டெலிவரி செய்தது.

2020ம் ஆண்டு மே மாதம், 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஸ்டெட்வியூ கேபிடலிடம் இருந்து ரூ.66.64 கோடி நிதி பெற்று யூனிகார்ன் ஆனது.

நிறுவனம், கையிருப்பு சார்ந்த மாதிரையை பின்பற்றுவதோடு, அழகு சாதன பிரிவில் தனது சொந்த லேபில்களையும் கொண்டுள்ளது. அழகு சாதன ஆலோசனைகளை சேட் மூலம் பெறும் நைகா நெட்வொர்க், சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.

Nykaa founder Falguni Nayar

Nykaa Founder and CEO Falguni Nayar

2018ல் நைக்டிசைன்ஸ்டூடியோ ஆடைகளை அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் நைகாமேன் எனும் ஆண்களுக்கான அழகுச் சாதன பொருட்கள் சேவையை அறிமுகம் செய்தது.

போஸ்ட்மன் Postman

பெங்களூரு மற்றும் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த போஸ்ட்மன் வேகமான யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. 2020 ஜூன் மாதம், 2 பில்லியன் டாலர் மதிப்பில், 150 மில்லியன் சி சுற்று நிதி பெற்று யூனிகார்ன் ஆனது.


2014ல், அபிஜித் கானே, அபினவ் அஸ்தனா மற்றும் அங்கித் சோபியால் துவக்கப்பட்ட போஸ்ட்மன், மென்பொருள் டெவலப்பர்கள் பங்குதாரர்களின் கூட்டு முயற்சியுடன்  டெவல்பமெண்ட் செயல்முறையை வேகமாக்க உதவுகிறது.


நிறுவனம், உலகம் முழுவதும் 11 மில்லியன் டெலவலப்பர்களால் தனது மேடை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. ஃபார்சூன் 50 நிறுவனங்களில் 98 சதவீதம் தனது சேவையை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கிறது.

ஜெரோதா Zerodha

பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஜெரோதா(Zerodha) இந்திய நிதி நுட்பச் சூழலில், மிகுந்த மதிப்பு கொண்டு பங்கு பரிவர்த்தனைகளைத் தீர்வாக கருதப்படுகிறது.

ஜூன் மாதம் நிறுவனம், முகமதிப்பில் 5X மடங்கில் இ.எஸ்.ஓ.பி திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்தது. இதன் படி அதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலராக இருந்தது.


நிறுவனர்களான சகோதரர்கள், நிகில் காமத், நிதின் காமத், நிறுவனம் புரோக்கரேஜ் நிறுவனம் என்பதைவிட தொழில்நுட்ப நிறுவனமாகக் கருதப்படுவதாகக் கூறுகின்றனர்.

2019 நிதியாண்டில் நிறுவனம் ரூ.850 கோடி வருவாய் மற்றும் ரூ.350 கோடி நிகர லாபம் ஈட்டியது.

Zerodha Securities, Zerodha Broking, Zerodha Commodities, Zerodha Capita ஆகிய நான்கு பதிவு செய்த பிரிவுகளைக் கொண்டுள்ளது. பரிவர்த்தனை மேடையான கைட், கணக்குகளுக்கான கன்சோல், மியூச்சுவல் பண்ட்களுக்கான காயின் உள்ளிட்ட சேவைகளை கொண்டுள்ளது.

Zerodha founders

Image Courtesy: TradeBrains

நிறுவனம் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய ரெயின்மீட்டர் எனும் இன்குபேட்டர் நிதியை உருவாக்கியுள்ளது.

அன்அகாடமி Unacademy

துவங்கிய ஆறு ஆண்டுகளில் அன் அகாடமி, கல்வியை வெகுஜனமயமாக்கி இருப்பதாக அதன் நிறுவனர்கள் கவுரவ் முஞ்சால், ரோமனி சைனி மற்றும் ஹேமேஷ் சிங் கூறுகின்றனர். பூகோள வரம்புகள் இல்லாமல் கல்வி வழங்குகிறது.

2010ல் யூடியூப் சேனலாக துவங்கிய நிறுவனம், 2015ல் ஆன்லைன் மேடையாக மாறியது. செப்டம்பர் மாதம், 1.45 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனம் சாப்ட்பேங்கிடம் இருந்து 150 மில்லியன் டாலர் நிதி பெற்றது.

இதன் மேடையில், 18,000 ஆசிரியர்கள் மற்றும் 3,50,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. 47,000 கல்வியாளர்கள் 14 இந்திய மொழிகளில் 5,000 நகரங்களில் உள்ள 40 மில்லியன் பேருக்கு கல்வி அளிக்கின்றனர்.

ரேசர்பே Razorpay

சிறிய தொழில் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்கும் நோக்கத்துடன் 2014ல் ஹர்ஷில் மாதூர் மற்றும் சஷாங் குமார் ரேசர்பேர் நிறுவனத்தைத் துவக்கினர். அதன் பிறகு நிறுவனங்கள் விரும்பி நாடும் சேவையாக வளர்ந்திருக்கிறது.


அக்டோபரில் கிடைத்த 100 மில்லியன் டாலர் நிதியை அடுத்து யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது.

இந்த காலத்தில் நிறுவனம் 25 பில்லியன் டாலர் அளவில் பரிவர்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

இதன் வருவாய் 2019ல் ரூ.193 கோடியில் இருந்து ரூ.509 கோடியாக உயர்ந்துள்ளது.

கார்ஸ் 24 CARS24

பொதுமுடக்கத்தின் போது போக்குவரத்து முடங்கிய நிலையில், மக்கள் கார்களை அதிகம் பயன்படுத்தினர். இது ஆன்லைன் போக்குவரத்து மேடையான கார்ஸ் 24 நிறுவனத்திற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.


ஆண்டுக்கு 2,00,0000 யூனிட்களுக்கு மேல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நிறுவனம், அதன் இணையதள சேவையில் With annual transactions exceeding 2,00,000 units, a 4X மடங்கு உயர்வு கண்டது. ரஷ்ய கோடீஸ்வரர் முன்னின்ற சுற்றில் 200 மில்லியன் டாலர் நிதி பெற்று யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது.

Cars24

2015ல், கஜேந்திரா ஜாங்கிட், மெகுல் அகர்வால் மற்றும் விக்ரம் சோப்ராவால் துவக்கப்பட்ட கார்ஸ் 24 தொழில்நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 130 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அண்மையில், இரு சக்கர வாகன பிரிவிலும் நுழைந்துள்ளது.

ஜெனோட்டி Zenoti

2010ல் மேனேஜ் மை ஸ்பாவாக துவங்கியதில் இருந்து 2020ல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது வரை ஜெனோட்டி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.  நிறுவனர்கள் சுதீர் கொனேரு, தீரஜ் கொனேரு, ஆனந்த் அரவிந்த் மற்றும் சரிதா ஆகியோர், மின்னணு மருத்துவ ஆவணங்கள், காகிதமில்லா சேவை, உறுப்பினர் திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை அளித்துள்ளனர்.


அழகு சாதனம் மற்றும் உடல் நலப் பிரிவில் உலக அளவில் வர்த்தக கிளவுட் சேவை அளிப்பதில் நிறுவனம் முன்னணியில் விளங்குகிறது. இதன் டச்லெஸ் மற்றும் மொபைல் சேவை எளிதான வாடிக்கையாளர் தொடர்பிற்கு உதவுகிறது.


24 மணி நேர வாடிக்கையாளர் சேவை, இலவச பயிற்சி, ஆலோசனை சேவை மற்றும் மைய மென்பொருள் ஆகியவற்றை அளிக்கிறது. நிறுவனம் தற்போது 50 நாடுகளில் செயல்படுகிறது. 2020ல் 100 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. டிசம்பர் மாதம், 160 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.

டெய்லிஹண்ட் Dailyhunt

பத்தாண்டுகளுக்குப் பிறகு, டெய்லிஹண்ட் யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது. ஆப்லாவேவ், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவற்றிடம் இருந்து 100 மில்லியன் டாலர் நிதி பெற்றது.


உள்ளூர் மொழியில் உள்ளடக்கம் அளிக்கும் டெய்லிஹண்ட், 14 மொழிகளில் சேவை அளிக்கிறது. இதன் தாய் நிறுவனமான வெர்சே இன்னோவேஷன் தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் இடைவெளியை போக்கலாம் எனும் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது 300 மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ளது. ஜாஷ் எனும் குறும் வீடியோ செயலி உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.
Dailyhunt

Dailyhunt co-founders: Umang Bedi (left) and Virendra Gupta

கிளான்ஸ் Glance

இன்மொபியின் துணை நிறுவனமான கிளான்ஸ், இரண்டு ஆண்டுகளில் வேகமாக யூனிகார்ன் அந்தஸ்து பெற்றுள்ளது.


ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் உள்ளடக்க நுகர்வுக்கான எதிர்காலமாக விளங்குவதாக நிறுவனர்கள் கூறுகின்றனர். ஆண்ட்ராய்டு போன் லாக்ல்ஸ்கீரினில் தனிப்பட்ட சேவைகள் வழங்க ஏ.ஐ நுட்பத்தை பயன்படுத்துகிறது.

சிறப்பு இணைப்பு- போன்பே Special Addition: PhonePe

2019ல் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற PhonePe, ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக விளங்குகிறது. 2020ல் தனி நிறுவனமானது. 2015ல் சமீர் நிகம் நிறுவனத்தைத் துவக்கினார். அதன் பிறகு, ராகுல் சாரி மற்றும் பர்ஜின் இணைந்தனர். 2016ல் ஃபிளிப்கார்ட் கையகப்படுத்தியது. 2020ல் சுயேட்சை நிறுவனமானது.


ஆங்கில கட்டுரையாளர்: மேகா அகர்வால் |தமிழில்- சைபர்சிம்மன்