மத்திய பட்ஜெட் 2025: மின்னணு மற்றும் ஐடி துறைக்கான ஒதுக்கீடு ரூ.8460 கோடி உயர்வு!
அதிகரிக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு, இந்திய ஏஐ திட்டம், செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி, உற்பத்தி சார்ந்த ஊக்க திட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களுக்கு செலவிடப்படும்.
மத்திய பட்ஜெட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான ஒதுக்கீட்டை ரூ.8,460 கோடி அளவு அரசு அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இத்துறைக்கான ஒதுக்கீடு, ரூ.17,566.31 கோடியாக இருந்தது. இது தற்போது, ரூ.26,026.25 கோடியாக உள்ளதாக, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணம் தெரிவிக்கிறது.
ஒரு பில்லியன் டாலர் அளவில் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு, இந்திய ஏஐ திட்டம், செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி, உற்பத்தி சார்ந்த ஊக்க திட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களுக்கு செலவிடப்படும்.

இந்தியா ஏஐ திட்டத்திற்கான ஒதுக்கீடு, ரூ.2,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.173 கோடியாக இருந்தது. இந்த நிதியின் கணிசமான பகுதி ஜிபியூ கம்ப்யூட் திட்டத்திற்கு செலவிடப்படும்.
ஆய்வாளர்கள், ஸ்டார்ட் அப்கள், கல்வியாளர்களுக்கு குறைந்த முதல் அதிக அளவிலான ஜிபியு சர்வீஸ் சேவையை வழங்கும் நிறுவனங்களை மத்திய மின்னணு மற்றும் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அண்மையில் அறிவித்தார். ஜியோ பிளாட்பார்ம்ஸ், இ2இ நெட்வொர்க்ஸ், லோடஸ் எண்டர்பிரைஸ், நெக்ஸ்ட்ஜென் டேட்டாசெண்டர், ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 10,000 ஜிபியூக்களை கொள்முதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவை ஏஐ சேவைகளை வழங்க தயாராக உள்ளன.
மத்திய துறை திட்டங்களின் கீழ், செமிகண்டக்டர் அசம்பிளி மற்றும் சோதனை, செமிகண்டக்டர் அசம்ப்ளி, டெஸ்டிங், மேகிங்,பேக்கிங், காம்பவுடன் செமிகண்டக்டர்ஸ் உள்ளிட்டவற்றுக்கான ஒதுக்கீடு ரூ.2,500 கோடியில் இருந்து ரூ.3,900 கோடியாக அதிகரிக்க உள்ளது.
செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், நான்கு ATMP மற்றும் OSAT திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மைக்ரான் டெக்னாலஜிஸ் (ரூ.22,526 கோடி முதலீடு), டாடா எலெக்ட்ரானிக்ஸ் லிட் (ரூ. 27,120 கோடி), சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் (ரூ.7,584 கோடி), மற்றும் Kaynes கேனஸ் டெக்னாலஜிஸ் (ரூ.3307 கோடி).
- செமிகண்டக்டர் பேப் அமைக்க ஒதுக்கீடு, ரூ.1,200 கோடியில் இருந்து, ரூ.2,499 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஒதுக்கீடு டாடா எலெக்ட்ரானிக்ஸ் பேப் திட்டத்திற்கு செல்லும். தைவான் செமிகண்டக்டர் நிறுவனம் PSMC உடன் கூட்டு நிறுவனம் இது. இதன் முதலீடு ரூ.91,526 கோடி.
- மொகாலியில் உள்ள செமிகண்டக்டர் சோதனைக்கூடத்தை மேம்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கான பிஎல்.ஐ ஊக்கத்தொகை ரூ.5,747 கோடியில் இருந்து, ரூ.8,885 கோடியாக அதிகரித்துள்ளது.
- DPDP சட்டம் 2023, செயல்முறைக்காக, தரவுகள் பாதுகாப்பு வாரியம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.2 கோடியாக இருந்தது.
தேசிய இன்பர்மேடிக்ஸ் மையம், இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிற்கான மையம், உள்ளிட்ட துறை அமைப்புகளுக்கான ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது.
Edited by Induja Raghunathan