‘அன்லாக் 3’ - மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட தளர்வுகள் என்ன?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மூன்றாம் கட்ட தளர்வுகளையும் அதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

30th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தளர்வுகளையும் அதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவைகள், திரையரங்குகள், பார் போன்றவை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. அதேபோல் அரசியல் மற்றும் மத ரீதியான கூட்டங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.


மார்ச் மாதம் 25-ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக தற்போது யோகா மையங்களும் உடற்பயிற்சி கூடங்களும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும்.

மாநிலங்களுடனும் யூனியன் பிரதேசங்களுடனும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பிறகே ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களைத் திறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1

எனினும் இரவு நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாம் கட்ட தளர்வுகளுக்கான வழிமுறைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலில் இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்.

மெட்ரோ ரயில் சேவைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர், பார், ஆடிடோரியம், பொதுக்கூட்டம் நடக்கும் அரங்குகள் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை அனுமதி இல்லை.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இவை தவிர மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் தேதிகள் சூழலைத் தொடர்ந்து ஆய்வு செய்வதன் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  • சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அனுமதிக்கப்படுகிறது.


  • சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து வந்தே பாரத் திட்டத்தின்கீழ் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • மாநிலத்துக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் செல்லவும் சரக்குகளை கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் இல்லை. இதற்கு தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை பெறவேண்டிய அவசியமில்லை.


  • பயணிகள் ரயில், ஷ்ரமிக் சிறப்பு ரயில், உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருதல், குறிப்பிட்ட நபர்களின் வெளிநாடு பயணம், வெளிநாட்டவர்களை அனுப்புவது போன்றவை நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும்.


கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்கள் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்களின்படி கட்டுப்பாட்டு பகுதிகளை கவனமாக நிர்ணயிக்கவேண்டும்.


கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப் படவேண்டும். இத்தகைய கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரின் வலைதளத்தில் அறிவிக்கப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் தகவலை வெளியிடும். அதேபோல் இந்தத் தகவல்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் பகிர்ந்துகொள்ளப்படும்.


கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் தீர்மானிக்கலாம். சூழ்நிலையை ஆய்வு செய்வதன் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே சில நடவடிக்கைகளுக்கு அனுமதியும் அளிக்கலாம், அதேசமயம் தேவைப்பட்டால் தடையும் விதிக்கலாம்.


கடைகளில் வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்யவேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.


‘ஆரோக்கிய சேது’ செயலி பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும்.

வீட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே அனுமதிக்கப்படும்.


திருமணங்களுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இறுதிசடங்குகளுக்கு 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. பொது இடங்களில் மது, பான், குட்கா, புகையிலை போன்றவற்றை உட்கொள்வதற்கான தடை தொடர்கிறது.


தகவல்: பிடிஐ

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India