இந்த 4 ஸ்டெப் தெரிஞ்சா போதும்; வாட்ஸ்அப் மூலம் ஈசியா பணம் அனுப்பலாம்!
உலக அளவில் செய்திகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபலமான சோசியல் மீடியா பிளாட்பார்மான வாட்ஸ்அப், தற்போது பணம் அனுப்பும் சேவையிலும் சிறந்து விளங்கி வருகிறது. கூகுள் பே, பேடிஎம் போலவே யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) டிஜிட்டல் முறையில் வாட்ஸ்அப் மூலமாகவும் பணம் செலுத்த
உலக அளவில் செய்திகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபலமான சோசியல் மீடியா பிளாட்பார்மான வாட்ஸ்அப், தற்போது பணம் அனுப்பும் சேவையிலும் சிறந்து விளங்கி வருகிறது. கூகுள் பே, பேடிஎம் போலவே யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) டிஜிட்டல் முறையில் வாட்ஸ்அப் (WhatsApp Pay) மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.
வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்புவது என்பது உங்கள் நண்பர்களுடன் சேட் செய்வதைப் போலவே மிகவும் சுலபமானது. வாட்ஸ்அப் யூஸர்கள் இந்தியாவில் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான QR-குறியீடு செயல்படுத்தப்பட்ட ஸ்டோர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்ப மெனுவில் உள்ள பேமெண்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தினாலே போதும். இதுவரை வாட்ஸ்அப் பேமெண்ட் ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தியது இல்லை என்றால், எளிமையான சில ஸ்டெப்களிலேயே அதனை செய்து முடிப்பது எப்படி என பார்க்கலாம்...
WhatsApp Payments பயன்படுத்துவது எப்படி?
1. வாட்ஸ்அப் பேமெண்ட் உடன் வங்கிக் கணக்கை இணைக்கவும்:
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவையைப் பெற உங்கள் வங்கிக்கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். அதற்கு வங்கியில் நீங்கள் கொடுத்துள்ள தொடர்பு எண்ணும், வாட்ஸ்அப் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.
1. நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சாட்டை திறந்து அதில், மெசேஜ் இடத்தில் இருக்கும் அட்டாச் பட்டனை க்ளிக் செய்தால், பல ஆப்ஷன்ஸ் வரும். இல்லையேல் சாட் பாக்ஸில் உள்ள பேமெண்ட் ஐகானை கிளிக் செய்யவும்.
2. அதில், ‘பேமண்ட்’ என்பதை கிளிக் செய்து, எவ்வளவு பணம் செலுத்தப்போகிறீர்கள் என்று பதிவிடவும்.
3. நீங்கள் அனுப்ப விரும்பும் ரூபாய் தொகையை உள்ளிடவும் > அடுத்து Next தட்டவும் > Start என்பதைத் கிளிக் செய்யவும்.
4. எங்கள் கட்டண விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்க ஏற்றுக்கொண்டு என்ற டைலாக்கிற்கு Accept and Continue என்பதை கிளிக் செய்யவும்.
5. வங்கிகளின் பட்டியலில், இருந்து உங்கள் வங்கியின் பெயரைத் தேர்வு செய்யவும்.
6. Verify via SMS என்பதை தேர்வு செய்து, அதன் பின்னர், அனுமதி (Allow) என்பதைத் தேர்வு செய்யவும்.
7. WhatsApp மூலம் பணம் அனுப்பவும் பெறவும் நீங்கள் சேர்க்க விரும்பும் வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும்.
8. உங்கள் டெபிட் கார்டைச் சரிபார்க்க, Continue என்பதை கிளிக் செய்யவும்.
9. உங்கள் டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்க்க Verify Card (கார்டைச் சரிபார்) என்பதை தேர்வு செய்யுங்கள்.
2. பணம் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப்’பில் உங்கள் வங்கிக் கணக்கைச் சேர்த்தவுடன், எந்தத் தொடர்புக்கும் பணத்தை அனுப்பலாம்.
1. நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் தொடர்பு எண்ணின் சாட்டை கிளிக் செய்யவும்.
2. அதில் மெசெஜ் டைப் செய்யும் பாருக்கு அருகே பேமெண்ட் என்பதைக் குறிக்கும் ‘₹’ இந்த ஐகானைக் கிளிக் செய்யவும்,
நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும் > அடுத்து > பணம் அனுப்பு (Send Payment) என்பதை கிளிக் செய்யவும்.
3. UPI பின் சரிபார்ப்பு:
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு பணம் அனுப்பும் முன்ப UPI Pin எண்ணை (பதிவிட வேண்டும்.
நீங்கள் இன்னும் UPI பின்னை அமைக்கவில்லை எனில், உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களையும் காலாவதி தேதியையும் பதிவு செய்வதன் மூலமாக 4 இலக்க பாஸ்வேர்ட்டை பெறலாம்.
4. வெற்றிகரமாக பணம் அனுப்பியதை அறிவது எப்படி?
உங்கள் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக உள்ளதா என்பதை அறிய, நீங்கள் செய்ய வேண்டியது, சாட்டில் உங்கள் பரிமாற்றத்தின் நிலையைச் சரிபார்ப்பது அல்லது பேமெண்ட் அமைப்புகளில் கடந்த பரிவர்த்தனைகளைப் பார்ப்பது மட்டுமே.