Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி!

உள்வெளியில், கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்திய விஞ்ஞானி டாக்டர்.ராஜா விஜய்குமார் உருவாக்கிய சாதனம் வர்த்தக நோக்கில நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி!

Friday March 05, 2021 , 3 min Read

இந்திய விஞ்ஞானி டாக்டர்.ராஜா விஜ்ய குமார் உருவாக்கியுள்ள வைரஸ் தீவிரத்தை குறைக்கும் சாதனம், உள்வெளியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், அரங்குகள் போன்றவை பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள இந்த சாதனம் வழி செய்கிறது.


'Shycocan' கார்ப்பரேஷன், 'ஷைகோகான்' எனும் பெயரில் இந்த உருளை வடிவிலான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், கொரோனா வகையைச்சேர்ந்த வைரஸ்கள் பரவுவதில் இருந்து உள்புற பகுதியை பாதுகாப்பாக மாற்றுவதாக ஷைகோகான் கார்ப்பரேஷன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


மேலும், மற்ற ப்ளு காய்ச்சல் வகை வைரஸ்களையும் இது கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்ற வகைகள் மற்றும் எதிர்கால வடிவங்களுக்கு எதிராகவும் இந்த சாதனம் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனம்
“உலக அளவில் தரச் சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூடங்களின் வைரஸ் வல்லுனர்கள் அளிக்கும் தகவலின் படி, ஷைகோகான் சாதனம், கொரோனா மற்றும் ப்ளு வைரஸ் வகை வைரஸ்களை செயலிழக்கச்செய்வதில் 99.994% செயல்திறன் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

மனிதர்கள் மீது எந்த பக்கவிளைவும் இல்லை. வேறு வகை பேக்டீரியா அல்லது பூஞ்சைகளை இந்த சாதனம் பாதிக்காததால், சூழலில் நுண்ணுயிர்களின் சமநிலை காக்கப்படுகிறது, என்று அந்நிறுவன செயல் அதிகாரி அலோக் சர்மா கூறியுள்ளார்.


இந்த சாதனம் ஏற்கனவே, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

”சென்னையை முக்கியச் சந்தையாக கருதுவதாகவும், இந்த ஆண்டு பல ஆயிரம் சாதனங்களை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கூறுபவர், இந்த சாதனத்தை பொருத்துவது, உள் அமைப்புகளில் இருப்பவர்களை கொரோனா வகை வைரஸ்களில் இருந்து காப்பதாகவும்,” கூறினார்.

கொரோனா வைரஸ் மனிதர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தை தடுப்பதன் மூலம் இந்த சாதனம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துகிறது.


மனித செல் சவ்வு / மேற்படலமானது, ஒரு எதிர்மறை சவ்வு சாத்தியத்திறனை கொண்டிருக்கையில், கொரோனா வைரஸ் என்பது, ஒரு நேர்மறை மின்னூட்ட வைரஸ் ஆகும். இதன் எஸ்-புரதம், மனித உடலிலுள்ள செல் உடன் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் செல் சார்ந்த இயக்க முறையைப் பயன்படுத்தி ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் போல தன்னையே பிரதியெடுத்துக் கொள்கிறது. 


இந்த வைரஸின் நேர்மறை மின்னூட்டத்தை செயலிழக்கச் செய்வதன் வழியாக செயல்படும் ஷைகோகேன், ஒரு ஓம்புயிரி செல் (ஹோஸ்ட் செல்) உடன் தன்னை இணைத்துக் கொள்கின்ற கொரோனா வைரஸ் துகள்களை சீர்குலைத்து திறனிழக்கச் செய்கிறது என நிறுவன செய்திக்குறிப்பு விளக்கம் அளிக்கிறது.


ஷைகோகேனின் கண்டுபிடிப்பாளரும் மற்றும் ஆர்கனைசேஷன் டி ஸ்கேலின் – ன் உலக தலைவருமான டாக்டர். ராஜா விஜய் குமார், பல ஆண்டு ஆய்வுகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட நிலையில், அதி தீவிர போட்டான்களை வெளிப்படுத்தும் சூப்பர் உலோக கலைவையால் ஆன சாதனத்தை உருவாக்கியிருக்கிறார். காற்று, மேஜைகள், நாற்காலிகள், சுவர்கள் என எந்த அமைவிடத்திலும் உள்ள துகள்களை எதிர்கொள்ளும்போது இந்த புரோட்டான்கள், எலக்ட்ரான்களை உமிழ்கின்றன.


இந்த எலக்ட்ரான்கள், கொரோனா மற்றும் இன்ஃபுளுயன்ஸா குடும்ப வைரஸ்களின் ஓட்டின் (Shell) மீதுள்ள நேர்மறை புரதத்தோடு ஒட்டிக்கொள்கின்றன; இதன் வழியாக அதன் நேர்மறை மின்னூட்டத்தை செயலிழக்கச் செய்து, பிற நபர்களுக்கு வைரஸ் தொற்றுவதை தடுக்கிறது.


ஷைகோகேன் சாதனம் நிறுவப்பட்டு, செயல்பாட்டில் இருக்கும்போது முன்பே தொற்று பாதிப்புள்ள மேற்பரப்பை தொடும் எவருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்படாது; ஏனெனில், அது ஏற்கனவே தணிக்கப்பட்டிருக்கும். ஷைகோகேன் சாதனம், மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பை இவ்வாறு வழங்குகிறது.

“கொரோனா வைரஸ் வகை பெருந்தொற்றுப் பரவல்கள், துரிதமான இடைவெளி உள்ள காலஅளவுகளில் ஏற்படுகின்றன. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தொற்றுகள் அதிகமாக தொற்றுப்பரவல் திறனுள்ளவையாக, கடந்த 17 ஆண்டுகளில் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்ற மரபு பிறழ்வுகளைக் கொண்டு ஆபத்தானதாக உருவெடுத்திருப்பது, ஷைகோகேன் போன்ற சாதனத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது” என்று டாக்டர். ராஜா விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

2017-ல் பருவகால ஃபுளு காய்ச்சலின் பல சம்பவங்கள் பெங்களுருவில் உள்ள எமது வளாகத்தில் நிகழ்ந்தன. இதுவே, இந்த சாதனத்தை வடிவமைக்கவும், உருவாக்கவும் மற்றும் நிறுவவும் என்னை நிர்பந்தித்தது. இதுவே பிறகு ஷைகோகேன் என பெயர் சூட்டப்பட்டது. 

device

ஒரு ஆண்டுக்குப் பிறகு எமது வளாகத்திலிருந்து இந்த பருவகால ஃபுளு தொற்றானது, ஏறக்குறைய முழுமையாக இல்லாமல் போய்விட்டது. கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது, உலகளாவிய மருத்துவப் பரிசோதனையகங்களுக்கு பரிசோதிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் இணக்கநிலை சோதனைக்காக இச்சாதனம் அனுப்பி வைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


நன்கு வடிவமைக்கப்பட்ட ஷைகோகேன் சாதனம் பயனளிப்பதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதோடு, முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஒரு பெரிய உள்ளரங்க அமைவிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களை நிறுவலாம். 


மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தி ஆலைகள் மற்றும் ரீடெய்ல் விற்பனையகங்கள், ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறை, அரசு அலுவலகங்கள், ரியல் எஸ்டேட் துறை மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற அனைத்து சந்தைப்பிரிவுகளிலும் விரிந்து பரந்த பயன்பாட்டை ஷைகோகேன் கொண்டிருக்கிறது.