பெரியார் ஆற்றில் 600 மீட்டரை 30 நிமிடங்களில் கடந்த 11 வயது பார்வையற்ற சிறுவன்!

இதன் மூலம் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவத்தை பரப்புகிறார் மனோஜ்

11th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஆர். மனோஜின் வயது 11. இவர் ஆற்றை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர் என்பது வியக்கத்தக்க செய்தி. அதிலும் இவர் சமூக நலன் கருதி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது வியப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.


மக்கள் நீரில் மூழ்கிவிடும் சம்பவங்கள் நாட்டில் அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால் நீச்சல் தெரிந்துகொள்வதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனோஜ் இந்த முயற்சியில் ஈடுபட்டார். நீச்சல் தெரிந்துகொண்டால் பலரது உயிர் பாதுகாக்கப்படும் என்கிற தகவலை இவர் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறார்.


மனோஜ் கேரளாவின் பெரியார் ஆற்றில் 600 மீட்டர் வரை 30 நிமிடங்களில் நீந்தியுள்ளார். அத்வைதா ஆசிரமத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு நீந்தத் தொடங்கி 8.40 மணிக்கு அலுவா மணப்புரம் சென்றடைந்தார்.

1

அத்வைதா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தா சுவாமிகள் இந்த நீச்சல் பயணத்தைத் தொடங்கி வைத்தார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் மனோஜ் கூறும்போது,

“என்னுடைய சீனியர்களில் ஒருவரான நவ்நீத், பெரியார் ஆற்றை கடந்த பார்வை திறன் குறைபாடுள்ள முதல் நபர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டார். நான் நீச்சல் கற்றுக்கொள்ள அவர் எனக்கு உந்துதலாக இருந்தார்,” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பலர் நீரில் மூழ்கும் சம்பவங்கள் குறித்து கேள்விப்படுகிறோம். நமக்கு நீச்சல் தெரிந்திருந்தால் தண்ணீரில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கமுடியும். மக்களுக்கு நீச்சலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது முயற்சியின் நோக்கம்.

"பயிற்சி வகுப்புகளின் ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டேன். எனினும் பயிற்சியாளர் சாஜி தினமும் நீண்ட தூரம் நீந்தவைத்து பயிற்சியளித்தார். இதனால் என்னுடைய முயற்சியை அதிக சிரமமின்றி நிறைவு செய்யமுடிந்தது,” என்றார்.

மனோஜின் பயிற்சியாளரான சாஜி வலசெரில் மனோஜிற்கு 30 நாட்கள் பயிற்சியளித்ததாக தி லாஜிக்கல் இந்தியன் தெரிவிக்கிறது. சாஜி இதுவரை 3,000 பேருக்கு நீச்சல் பயிற்சியளித்துள்ளார். மனோஜின் சீனியரான நவ்நீத்திற்கும் சாஜியே பயிற்சியளித்துள்ளார்.

“மனோஜிற்கு பயிற்சியளிப்பது எளிதாக இருந்தது. அவர் அதிக பரபரப்பின்றி நிதானமாகவே நீந்தினார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் அவர்களை ஊக்குவித்து பயிற்சியளிக்கவேண்டும். நீச்சல் பயிற்சியை பள்ளியின் பாடதிட்டத்தில் இணைக்கவேண்டும்,” என்றார்.

கட்டுரை: THINK CHANGE INDIA

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India