வால்ஸ்டிரீட் உயர் பணியைத் துறந்து மலிவு விலை சானிட்டரி நாப்கின் நிறுவனம் தொடங்கிய சாஹில்!

By YS TEAM TAMIL|15th Sep 2020
பரீ எனும் குறைந்த விலை சானிட்டரி நாப்கின் ப்ராண்ட் துவக்கிய சாஹில் தாரியா, இப்போது, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்கிறார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சாஹில் தாரியா, தனது பணி வாழ்க்கையை வால் ஸ்டிரீட் நிறுவனமான யு.பி.எஸ். குழுமத்தில் துவக்கினார். அதன் பிறகு ராய்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான கண்ட்ரி ஹெட்டாக பணியாற்றினார். 31 வயதில் அவர் தொழில் முனைவு பாதையை தேர்வு செய்தார்.

இடைப்பட்ட காலத்தில், சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனெஜ்மண்டில் பாடம் நடத்தியவர், வேறு நிதர்சனத்தை உணந்து பெண்களுக்கான சுகாதாரத்தை கவனிக்கத் துவங்கினார்.

துவக்கம்!

இந்த பாதை மாற்றத்தை விளக்குபவர், அடுக்கடுக்காக, உங்களுக்குத்தெரியுமா? என பலக் கேள்விகளை கேட்கிறார்.

“உலகின் கருப்பை புற்றுநோய் தலைநகரம் எது எனத்தெரியுமா?, இந்தியாவில் ஆண்டுதோறும் 75,000 பெண்கள் கருப்பை புற்றுநோயால் இறக்கின்றனர் எனத்தெரியுமா?, ஆண்டுதோறும் 1,50,000 பெண்கள் இந்த புற்றுநோய்க்கு இலக்காவது கண்டறிப்படுவது தெரியுமா’?, என அடுக்கினார்.”

2012ல் அவர் Soothe Healthcare Pvt. Ltd என்ற நிறுவனத்தைத் துவக்கினார். 2015ல் அதன் கீழ், ’பரீ’ (Paree) சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கத் துவங்கினார்.   


இந்த வர்த்தகத்தின் முதல் சவால் மனத்தடையை எதிர்கொள்வதாக இருந்தது. துவக்கத்தில் யாரும் சாஹிலின் எண்ணத்தை ஏற்கவில்லை. அதிக சம்பள வேலையை விட்டுவிட்டு அவர் சானட்டரி நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டார். இந்திய பெண்களில், 12 சதவீதம் பேரே நாப்கின்கள் பயன்படுத்துவதால், இந்த சந்தைக்கு எதிர்காலம் இல்லை என்றனர்.


அவர் முயற்சி செய்து, குடும்பம் மற்றும் நண்பர்களை, தான் தனது எண்ணத்தில் தீவிரமாக இருப்பதை நம்ப வைத்தார். சொந்த சேமிப்பு மற்றும் கடன் என ரூ.8 கோடியை துவக்க முதலீடாக போட்டு நிறுவனம் தொடங்கினார். அதன் பிறகு நிறுவனம், பல்வேறு சுற்று நிதியை திரட்டியுள்ளது. சிங்கப்பூரைச்சேர்ந்த பிரைவெட் ஈக்விட்டி நிறுவனம் சிம்பனி ஆசியா ஹோல்டிங்ஸ் மற்றும் மும்பையின் சிகஸ்த் சென்ஸ் வெசர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.


இரண்டாவது சவால் உற்பத்தை மையத்தை அமைப்பதாக இருந்தது. இதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இன்று நிறுவனம் நொய்டாவில் முழுவதும் தானியங்கி மயமான இரண்டு ஆலைகளை தற்போது பெற்றுள்ளது.


மூன்றாவது சவால், விநியோகத்திற்கான வலைப்பின்னலை அமைப்பதாக இருந்தது. சானிட்டரி நாப்கின்களை விற்க, இந்தியா முழுவதும் உள்ள கடைகளை எல்லாம் சென்றடைய வேண்டியிருந்தது. ஆன்லைன் விற்பனை இதில் சொற்பமே.

இன்று நிறுவனம் 130 சூப்பர் மார்கெட் மற்றும் மளிகைக் கடைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சாஹில் எண்ணிக்கையை கூற மறுத்தாலும், இந்தியா முழுவதும் லட்சம் கடைகளை சென்றடைகிறது. பத்து லட்சம் பெண்கள் பரீ நாப்கின்களை வாங்குவதாக அவர் கூறுகிறார்.

அடுத்த சவால் நம்பகமான தயாரிப்பை உருவாக்குவது. பரீ பெரும்பாலான மூலப்பொருளை அமெரிக்கா அல்லது கனடாவில் இருந்து தருவிக்கிறது. முக்கிய உறிஞ்சிப்பொருளான பல்ப், ஜப்பான் அல்லது கொரியா அல்லது கனடாவில் இருந்து வருகிறது. மற்றவை உள்ளூரில் இருந்து பெறப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிறுவனம் உயர்தரச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.


திறன் வாய்ந்த குழுவை உருவாக்குவதும் சவாலாக இருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கிய என சாஹில் நம்புகிறார்.


தொழிலாளர் சந்தையில் ஆண்களுக்கு நிகரான பங்கை பெண்கள் கொண்டிருந்தால், ஆண்டு ஜிடிபி 2025ல் 25 சதவீதம் அதிகரிக்கும் என மெக்கின்சி அறிக்கை தெரிவிக்கிறது.

“பெண்கள் அறச்சார்பு கொண்டவர்கள் மற்றும் பல வேலைகளை செய்யக்கூடியவர்கள். பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள்.”

இந்தியாவில் 2025ல் சானிட்டரி நாப்கின் சந்தை ரூ.21,000 கோடி மதிப்பு கொண்டதாக 5 மடங்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இந்திய மற்றும் உலக முதலீட்டாளர்கள் இதை ஆதரிக்கின்றனர்.


பெண்கள் மீதான சாஹிலின் நம்பிக்கை நிறுவன பணியாளர்கள் அளவிலும் வெளிப்படுகிறது. “ஊழியர்களில் 40 சதவீதம் பெண்கள், நிர்வாகப் பணியில் 80 சதவீதம் பெண்கள். எனது சொந்த குழுவில் 64 சதவீதம் பெண்கள். இயக்குனர் குழுவில் 3 இயக்குனர்களில் ஒருவர் பெண்கள். பங்குதாரர்களில் இருவர் பெண்கள் என்கிறார் சாஹில்.

“எங்கள் ப்ராண்ட் அம்பாசிடராக அரசியல் சாராத, பாலிவுட் அல்லாத முன்மாதிரி பெண்களை தேடினோம். இதில் சாய்னா நேவால் கச்சிதமாக பொருந்தினார்,” என்கிறார் அவர் மேலும்.
சாய்னா

முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் சானிட்டரி நாப்கின்கள், வாங்கக் கூடிய தன்மை, அணுகல், மற்றும் விழிப்புணர்வு ஆகிய மூன்று அம்சங்கள் சார்ந்திருக்கிறது. பரீ முதல் இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. அதன் ஒரு நாப்கின் ரூ.3.50 தான். ஒரு பாக்கெட்டின் விலை ரூ.25. அதன் விநியோகமும் நன்றாக இருக்கிறது. ஆனால் இன்னும் விழிப்புணர்வு தேவை.


சாஹில் சில நம்ப முடியாத எண்ணிக்கைகளை பகிர்கிறார்.

“மெட்ரோ நகரங்களில் சானட்டரி நாப்கின்கள் பயன்பாடு 40 முதல் 50 சதவீதமாக இருக்கிறது. தில்லி அல்லது கொல்கத்தா போன்ற நகரங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் கட்ட நகரங்களில் விழிப்புணர்வு இன்னும் மோசமாக உள்ளது,” என்கிறார்.

டிஜிட்டல் வழிகளில் விழிப்புணர்வை மேற்கொள்வதாகக் கூறுகிறார் சாஹில்.

“பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கண்காட்சிகளுக்குச் சென்று, நாப்கின்களை ஏன் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும், பயன்படுத்திய பிறகு என்ன செய்ய வேண்டும் என விளக்குவதாகக் கூறுகிறார்.

இந்த பிராண்ட் பெண்கள் சுகாதார நலனை அலட்சியம் செய்யக்கூடாது என வலியுறுத்தும் ஷீ பர்ஸ்ட் விளம்பர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.


அத்தியாவசியப் பிரிவின் கீழ் வருவதால் கொரோனா சூழலிலும் வர்த்தகம் நன்றாக இருக்கிறது. அடுத்ததாக பேபி டயாப்பர் பிரிவிலும் நுழைய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற