இந்திய சந்தையை குறிவைக்கும் வாரன் பஃபெட் - பெர்க்ஷயர் ஹாத்வே மூலம் புதிய திட்டம்!
பஃபெட்டிடம் தூர்தர்ஷி அட்வைசர்ஸின் ராஜீவ் அகர்வால், இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹெட்ஜ் ஃபண்ட் ஆகியோர் இந்தியாவில் பெர்க்ஷயர் ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பெர்க்ஷயரின் ஆண்டுக் கூட்டத்தில் கேட்ட போது இவ்வாறு கூறினார் பஃபெட்.
கோடீஸ்வர முதலீட்டாளர் வாரன் பஃபெட், இந்திய சந்தையில் இதுவரை பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் உள்ளன. இந்த பயன்படுத்தாத வாய்ப்புகளை அவரது கூட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
பஃபெட்டிடம் தூர்தர்ஷி அட்வைசர்ஸின் ராஜீவ் அகர்வால், இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹெட்ஜ் ஃபண்ட் ஆகியோர் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் பெர்க்ஷயர் ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பெர்க்ஷயரின் ஆண்டுக் கூட்டத்தில் கேட்டபோது கடந்த வெள்ளிக்கிழமையன்று பஃபெட் இதனைப் பதிலாகத் தெரிவித்தார்.
‘பஃபெட் இது தொடர்பாகக் கூறியதாவது,
“இந்தியா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இந்தியாவில் நமக்கு வாய்ப்புகள் உள்ள அந்த வணிகங்கள் அல்லது பெர்க்ஷயர் பங்கேற்க விரும்பும் சாத்தியமான பரிவர்த்தனைகள், மேற்கொள்ளும் தொடர்புகள் குறித்தும் நமக்கு உள்ள சாதக பாதக அம்சங்கள், நுண்ணறிவுகள், தொலைநோக்குகள் அதாவது, பெர்க்ஷயரின் ஆற்றல் மிக்க நிர்வாகம் தொடர்ந்து நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்பதே கேள்வி.“
இந்தியாவில் இதுவரை சாத்தியமாகாத அல்லது கவனிக்கப்படாத வாய்ப்புகள் இருக்கலாம்... ஆனால், இது முற்றிலும் எதிர்காலத்திற்கானது, என்றார் பஃபெட்.
93 வயதாகும் பஃபெட், கேள்வி-பதில் அமர்வில் பெர்க்ஷயர் ஹாத்வே சமீபத்தில் எடுத்த சில முக்கிய முதலீட்டு முடிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீட்டைக் குறைத்தது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. ஆப்பிள் தொடர்பான நீண்ட கால பார்வைக்கும் இந்த முடிவுக்கும் தொடர்பில்லை என்ற பஃபெட். சமீபத்திய மந்த நிலை ஆப்பிள் விற்பனையில் இருந்தாலும் தங்களின் மிகப்பெரிய பங்கு முதலீட்டு நிறுவனம் ஆப்பிள்தான் என்பதை பஃபெட் தெளிவுபடுத்தினார்.
மேலும், பஃபெட் பங்குதாரர்களுக்குத் தெரிவித்த செய்தியில், தனக்குப் பிறகு துணைத் தலைவர்கள் கிரெக் ஏபல் மற்றும் அஜித் ஜெயின் ஆகியோர் பெர்க்ஷயரை நடத்துவதற்கு சிறந்த நபர்கள் என்றும் அவர்கள் தங்களைத் தாங்களே இதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.