Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ரூ.2,500ல் வாஷிங் மெஷின்: ஏழை மக்களுக்காக ஓர் தமிழரின் சர்வதேச தரத்திலான தயாரிப்பு!

8ம் வகுப்பு மட்டுமே படித்த கோவை மெக்கானிக் முருகேசன், மிகக் குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் தயாரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தொடங்கி தமிழகம் முழுதும் விற்பனை செய்கிறார்.

ரூ.2,500ல் வாஷிங் மெஷின்: ஏழை மக்களுக்காக ஓர் தமிழரின் சர்வதேச தரத்திலான தயாரிப்பு!

Thursday September 05, 2019 , 3 min Read

நாகரீக வளர்ச்சியில் அம்மிக்கல், ஆட்டுரல் போன்றவை மறைந்து அந்த இடத்தை மிக்ஸியும், கிரைண்டரும் பிடித்துக் கொண்டன. சமைப்பதற்கு மைக்ரோவேவ் ஓவன், துவைப்பதற்கு வாஷிங்மெஷின், குளிர்சாதனப் பெட்டி என வீட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன.


ஓர் வீடு என்றாலே இந்தப் பொருள்கள் எல்லாம் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. இதனால் இப்போதெல்லாம் திருமணமாகிச் செல்லும் பெண்களுக்கு இவையனைத்தையும் சீராக செய்யவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.


விலைவாசி உயர்வு விண்ணைத் தொடும்வேளையில், புதுப்புது டெக்னாலஜியோடு, புதியபுதிய பிராண்ட்களில் கூடுதல் வசதிகளுடன் அதிக விலையுடனும் இந்த வீட்டு உபயோகப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்படும்போது, நடுத்தரவர்க்கத்தினர் இதனைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டியிருந்தது.


ஆனால் ஏழை, எளிய நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த ஓர் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் தரமான மிக்ஸி, கிரைண்டர், மோட்டார்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் தற்போதைய புதிய வரவாக மிகக் குறைந்த விலையில், 1 வருட வாரன்டியில் புதிய வாஷிங்மெஷின்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
washing

மலிவு விலை வாஷிங் மெஷின், தயாரிப்பாளர் முருகேசன்.

கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். 8ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவர், தனது வாழ்க்கையை ஓர் மிக்ஸி மெக்கானிக்காகத் தொடங்கினார். நாளடைவில் ’தேவிலட்சுமி இன்டஸ்டிரீஸ்’ என்ற பெயரில் தனியாக ஓர் நிறுவனத்தைத் தொடங்கி, மிகக் குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர், மோட்டார்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.


இதுகுறித்து, அவர் நம்மிடம் கூறியதாவது, எங்கள் நிறுவனத்தில் மோட்டார்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை சொந்தமாக உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தோம். இந்நிலையில் அரசே இவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கத் தொடங்கியதால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நிறுவனத்தை மூடிவிடும் சூழல். அப்போதுதான் என்ன செய்யலாம் என சிந்தித்தேன்.


”ஏழை, எளிய நடுத்தர மக்களால் வாங்க இயலாத அளவுக்கு மிக விலையுயர்ந்த பொருளாக இருக்கும் வாஷிங்மெஷினை மிகக் குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்தால் என்ன எனத் தோன்றியது. உடனே இந்த எண்ணத்தை செயல்படுத்த களத்தில் இறங்கினேன்.

10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வாஷிங்மெஷினை வெறும் 2500 ரூபாய்க்குள் தயாரிக்கவேண்டும் என திட்டமிட்டு, கடுமையாக உழைத்து, தரமான எளிமையான ஓர் வாஷிங்மெஷினை நானே உருவாக்கினேன்.

விலைக் குறைவாக இருப்பதால், இதன் தரம் குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமும் வரக்கூடாது என்பதால் சர்வதேச தரத்துக்கு உருவாக்கியுள்ளோம். பொதுவாக ஓர் வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்க 45 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் எங்கள் தயாரிப்பு வாஷிங்மெஷினில் 15 முதல் 20 நிமிடங்களிலேயே துவைத்து எடுத்துவிடலாம் என்கிறார்.

மொடொர்

மேலும், இது மிகக் குறைவான எடை கொண்டது (சுமார் 11 கிலோ). அதிக இடத்தையும் அடைக்காது. இந்த வாஷிங்மெஷினுக்கு மின்சாரமும், தண்ணீரும் மிகக் குறைந்த அளவே போதுமானது. எங்கும் எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் எளிமையானது. எல்லாவற்றுக்கும் மேலாக இது முழுக்கமுழுக்க எங்கள் தயாரிப்பு என்பதால் 1 வருட உத்தரவாதமும் அளிக்கிறோம்.

இவர்கள் இருவகையான வாஷிங்மெஷின்களைத் தயாரிக்கின்றனர். 6 கிலோ மற்றும் 8 கிலோ என இருவகைகளில் தயாரிக்கப்படும் இந்த வாஷிங்மெஷினை அவரவர் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

6 கிலோ வாஷிங்மெஷின் ரூ. 2500 (மற்றும் ஜிஎஸ்டி). 8 கிலோ வாஷிங்மெஷினனுக்கு கூடுதலாக ரூ. 600 மட்டுமே. மேலும், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டால், வாஷிங்மெஷின் கொரியரில் வீடு தேடி வந்துவிடுகிறது.

இந்த குறைந்த விலை வாஷிங்மெஷினுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மாதம் 300 லிருந்து 400 மெஷின்கள் வரை விற்பனையாகின்றன. நாங்கள் மிகக் குறைந்த லாபத்தில்தான் இவற்றை விற்பனை செய்கிறோம். ஓர் மெஷின் விற்பனை செய்தால் ரூ.150 மட்டுமே லாபமாக கிடைக்கும் என்கிறார்.


ஏன் இவ்வளவு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாஷிங்மெஷின் குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை எனக்கேட்டால், ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டுக்காக நாங்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம். பெரிய அளிவில் விளம்பரம் செய்தால், அதனால் ஏற்படும் செலவையும் பொருளின் விலையோடு சேர்க்கவேண்டி வரும் எனபதால்தான் பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. மேலும், எங்கள் பொருளின் தரமே எங்களின் விளம்பரம் எனக் கூறும் முருகேசன் சிறிய அளவில் நோட்டீஸ் மற்றும் போஸ்டர்கள் என மிகக் குறைந்த அளவிலேயே விளம்பரம் செய்கிறார்.


இவர்களின் இந்த ரூ. 2500 வாஷிங்மெஷினை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய டீலர்களும் உள்ளனர். மேலும், நேரடியாக நிறுவனத்துக்கு வந்தும் பெற்றுக் கொள்ளலாம். கொரியர் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.


மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு 9894967874, 7667344852, 7397391492, 9345938546 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


இன்னும் ஏன் காத்திருக்கீங்க, குறைந்த விலையில் தரமாகக் கிடைக்கும் இந்த வாஷிங்மெஷினை வாங்கி, துணி துவைக்கும் வேலையை ஈசியாக்கிக்குங்க.