பழங்களின் ஆயுள்காலத்தை அதிகரிக்க உதவும் Allfresh-இல் முதலீடு செய்துள்ளது WayCool Foods!

By cyber simman
November 16, 2022, Updated on : Wed Nov 16 2022 07:39:17 GMT+0000
பழங்களின் ஆயுள்காலத்தை அதிகரிக்க உதவும் Allfresh-இல் முதலீடு செய்துள்ளது WayCool Foods!
இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் வேளாண் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான WayCool Foods ஆல்பிரெஷ் சப்ளை மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் வேளாண் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Waycool Foods உலக சப்ளை செயினில் நிறுவனங்களின் வலைப்பின்னலை உருவாக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, 'ஆல்பிரெஷ்' (allfresh) சப்ளை மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.


'ஆல்பிரெஷ்' நிறுவனம், ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் வகை பழங்களில், உணவு வீணாவதை தடுக்க மற்றும் பழங்களின் ஆயுள்காலத்தை அதிகரிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்டு சப்ளை செயினை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது.

ஆல்

இந்தியாவில் வளர்ச்சி காரணமாக பழங்களின் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேவையை ஈடு செய்யும் வகையில் பழங்கள் பயிரிடும் பரப்பு அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், WayCool நிறுவனம் ஆபரெஷின் திறனை பயன்படுத்திக்கொள்ளும்.


மேலும், இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள் உற்பத்தியாளர்கள் வலைப்பின்னலையும் தனது லட்சத்திற்கும் மேலான சில்லறை வாடிக்கையாளர்கள் வலைப்பின்னலுடன் இணைந்து பயன்படுத்திக்கொள்ள உள்ளது.


இந்த முதலீடு, ஆல்பிரெஷ் தனது தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் உள்ள WayCool விநியோக பலத்தின் மூலமும் நிறுவனம் பலன் பெறும்.

“எங்கள் வர்த்தகக் குடும்பத்தில் ஆல்பிரெஷ் இணைவதை வரவேற்கிறோம். இந்த முதலீடு இந்தியா முழுவதிலும் இருந்து உயர் தர பழங்களை கொள்முதல் செய்யும் திறனை அதிகரிக்கும். இந்த முதலீடு எங்கள் சப்ளை செயின் கொள்திறனை பூர்த்தி செய்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் பழங்களை அளிக்க முடியும்,” என WayCool Foods CFO சின்ன பிரதாசாரதி கூறியுள்ளார்.

WayCool உடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நிறுவனமும், இந்தியாவில் பிளவுபட்டு கிடக்கும் பழங்கள் துறையை ஒருங்கிணைக்க விரும்புகிறோம். பழங்கள் உற்பத்திக்குப் பிறகு வீணாவதை தடுப்பதே எங்கள் நோக்கம். இந்திய ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் கொள்முதல் மற்றும் மார்க்கெட்டிங்கில் எங்கள் நிபுணத்துவத்தை அளிக்க விரும்புகிறோம்,” என்று ஆல்பிரெஷ் நிறுவனர் நரேஷ் ஜாவா கூறினார்.


Edited by Induja Raghunathan