2021ல் உலகம் கூகுளில் தேடியது என்ன?

By cyber simman
December 16, 2021, Updated on : Fri Dec 17 2021 06:37:23 GMT+0000
2021ல் உலகம் கூகுளில் தேடியது என்ன?
2021 ம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளையும், தகவல்களையும் கூகுள் தொகுத்தளித்திருக்கிறது. இந்த பட்டியல் சுவையான பல விஷயங்களை உணர்த்துகிறது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

விடைபெற இருக்கும் 2021ம் ஆண்டு எப்படி அமைந்திருந்தது என்பதை தெரிந்து கொள்ள, கூகுள் தேடல் சுவாரஸ்யமான வழி. கூகுளில் மக்கள் என்ன எல்லாம் தேடினர் என்பதை அலசி ஆராய்ந்தாலே இந்த ஆண்டை திரும்பிப் பார்த்தது போல இருக்கும்.


இதற்கு உதவும் வகையில் கூகுள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. தேடல் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு கூகுள் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை மாதந்தோறும் கொஞ்சம் விரிவாகவே தொகுத்தளித்துள்ளது. 2021ம் ஆண்டின் காட்சித்துண்டுகளாக அமையும் இந்தத் தேடல் பதங்களை பார்க்கலாம்:

Google Search

Image Source: Shutterstock

Doomscrolling; இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பதங்களில் முதலில் வருவது Doomscrolling என்கிறது கூகுள். அதென்ன டூம்ஸ்கிரோலிங்? ஸ்கிரோலிங் என்றால் இணையதள பக்கங்களை மேலும் தகவல்களுக்காக ஸ்கிரோல் செய்து கொண்டே இருப்பது என புரிந்து கொள்ளலாம். அதாவது மவுஸ் கர்சர் கொண்டு இணைய பக்கத்தை கீழ் நோக்கி நகர்த்திக்கொண்டே இருப்பது.


இவ்வாறு சமூக ஊடக பக்கத்தில் டைம் லைனில் மேலும் மேலும் செய்திகளை தெரிந்து கொள்வதற்காக ஸ்கிரோல் செய்து கொண்டே இருக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றியிருக்கின்றனர்.

கூகுள்

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்திய சூழலில், பலரும் தெரிந்தோ, தெரியாமலோ மோசமான செய்திகளை எதிர்பார்த்தபடி இப்படி முடிவில்லாமல் ஸ்கிரோல் செய்வதில் ஈடுபட்டிருந்ததை தான், Doomscrolling என்கின்றனர்.


இந்த பதம் பிரபலமாகி பலரும் கூகுளில் இது தொடர்பான தகவல்களை ஜனவரி மாதம் அதிகம் தேடியுள்ளனர்.Doomscrolling- இல் இருந்து விடுபடுவதற்கான ஆர்வம் அல்லது தெளிவும் பெறும் ஆர்வம் என்று இதை புரிந்து கொள்ளலாமா!


ஜனவரி மாதம் அதிகம் தேடப்பட்ட பதங்களில் bernie sanders-ஐ மறந்து விட முடியாது. ஆம், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், நாற்காலி ஒன்றில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ளும் போஸில், கைகளை இறுகக் கட்டியபடி தனிமையில் அமர்ந்திருந்த விதமும், குறிப்பாக அவரது கையுறையும் மீம் திருவிழாவை உண்டாக்கியது நினைவிருக்கலாம். இது தொடர்பாக கையுறையை குறிக்கும் மிட்டன்ஸ் (Mittens) எனும் வார்த்தை அதிகம் தேடப்பட்டதாம்.

Bernie Sanders

இதே போல தன்னார்வ தடுப்பூசியாளரை குறிக்கும் vaccination volunteer எனும் பதமும் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. அதோடு, 'வேலை தேடுவது' எப்படி என்பதற்கு பதிலாக 'தொழில் துவங்குவது எப்படி?' எனும் பதம் அதிகம் தேடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நம்பிக்கையான மாற்றம் என்றும் கொள்ளலாம்.

புவியை காப்போம்

பிப்ரவரி தாம் பார்த்தால், துணையை குறிக்கும் ’soulmate' எனும் பதத்தை அதிகம் தேடியுள்ளனர். அப்படியே, காதல்முறிவை குறிக்கும் பிரேக் அப் எனும் பதத்தையும் விடாமல் தேடியிருக்கின்றனராம். இதென்னடா சோதனை எனப் பார்த்தால், நம்பிக்கை அளிக்கும் விதமாக பூமியின் நிலை மிது கரிசனம் கொண்டு, புவியை காப்பது எப்படி? (how to conserve) எனும் கேள்விக்கான பதிலையும் அதிகம் தேடியுள்ளனர். இந்த தேடல் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

சோக இளவரசி

பிரிட்டன் அரசக் குடும்ப வாரிசு இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்கலும் பிரத்யேகமாக பேட்டி கொடுத்தனர். இந்தப் பேட்டியின் போது, அரசக் குடும்பத்திலும் இன பாகுபாடு இருப்பதாக மேகன் வேதனையோடு பகிர்ந்து கொண்ட தகவலை அடுத்து மேகன் –ஹாரி இண்டர்வியூ என்பது கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது.


அதே போல, சுயஸ் கால்வாயில் உலகின் பெரிய சரக்கு கப்பல் அடைத்துக்கொண்டு கப்பல் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்த நிகழ்வும் பெரிய அளவில் தேடப்பட்டிருக்கிறது. இந்த மாதமும் பெரும்பாலானோர் காலநிலை மாற்றத்தின் தாக்கம் (impact of climate change) குறித்து அதிகம் தேடியுள்ளனர்.

கூகுள்

அருண் ஜேட்லி

ஏப்ரல் மாதத் தேடலில் ஆச்சர்யப்படும் வகையில் இந்தியாவின் அருண் ஜேட்லி ஸ்டேடியம் உலக அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. ஐபிஎல் போட்டியின் போது இது நிகழ்ந்திருக்கிறது. புவியை பாதுகாக்க, சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க நீடித்த நிலையான வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை பலரும் உணர்ந்துள்ளனர் என்பதன் அடையாளமாக ’நீடித்த வளர்ச்சி’ (sustainability) எனும் பதம் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நம்பிக்கை!

மனநலம் காப்போம்

மே மாதத்தை மன நலம் காக்கும் மாதம் என கொள்ளலாம். ஏனெனில், பலரும், மனநலம் காப்பது எப்படி? (how to maintain mental health) எனும் விஷயம் தொடர்பாக அதிகம் தேடியிருக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் பின்னணியில் இந்த தேடலை எளிதாக புரிந்து கொள்ளலாம். இது தவிர பாலஸ்தீனத்திற்கு உதவுவது எப்படி என்றும் அதிகம் தேடியுள்ளனர். மனிதநேயம் வாழ்க!

என் உடல் என் உரிமை

இந்த ஆண்டு நம்பிக்கை அளிக்கும் இன்னொரு விஷயம், ’உடல் கேலி’ என்பதை உலகம் சரியாக எதிர்கொள்ளத்துவங்கியிருப்பதாக கொள்ளலாம். உருவத்தை வைத்து கேலி செய்வதை கைவிட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இப்படி உடல் கேலியில் ஈடுபடுபவர்களுக்கு பாடம் எடுப்பது போல, ஜூனில் கூகுளில் அதிகமாக உடல் கேலிக்கு எதிரான தன்மை (body positivity) பற்றி தேடியிருக்கின்றனர். அப்படியே இங்கிலாந்து கிரிக்கெட் மைதானங்களில் வானிலை தொடர்பான தேடலும் பெரிதாக நிகழ்ந்திருக்கிறது.

கூகுள்

பயணம் எங்கே?

ஆறு மாதம் கடந்த நிலையில் மக்கள் பயணத்திற்கு ஏங்குகின்றனர் அல்லது பயணம் செய்ய தயாராகி விட்டனர் என்பது உறுதியாகத் தெரிகிறது. அதனால் தான் ஜூலை மாத வாக்கில் ’நான் எங்கே செல்லலாம்’ (where can i travel) எனும் கேள்வி அதிகம் தேடப்பட்டுள்ளது.


வெள்ளம் மற்றும் தீ விபத்து பற்றியும் அதிகம் தேடியுள்ளனர். தவிர, இத்தாலி எத்தனை முறை யூரோ கோப்பை வென்றது எனும் கேள்விக்கும் விடை தேடியிருக்கின்றனர்.

தங்க மகன்

கூகுள்

ஆகஸ்டு மாதம் பார்த்தால், நீரஜ் சோப்ரா பற்றி தான் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று, இந்தியாவுக்காக தடகள தனிநபர் தங்கத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்ததை அடுத்து இந்தியர்கள் சளைக்காமல் தங்க பதக்கம் (gold medal) எனத் தேடியதாக கூகுள் சொல்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அந்நாடு மீண்டும் பிரச்சனை பூமியான நிலையில் ஆப்கானுக்கு உதவும் வழியை உலகம் தேடியது. (how to help afghanistan)

எரிமலை

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திடீரென எரிமலை பற்றி பலரும் அதிகம் தேடியிருக்கின்றனர். இந்தியர்கள் நவராத்திரி மாதத்தில் என நிற உடை அணிந்தால் அழகாக இருக்கும் எனத் தேடியிருக்கின்றனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி இணைய சேவைகள் தொழில்நுட்ப முடக்கத்தை அடுத்து down today எனும் பதம் அதிகம் தேடப்பட்டிருக்கிறது.


கூகுள் தேடல் பட்டியல் பற்றி விரிவாக அறிய!

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற