Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

உங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன?

உங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன?

Thursday January 03, 2019 , 4 min Read

புத்தாண்டு பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, உங்களுக்கான புத்தாண்டு உறுதிமொழியிலும் கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழி என்று வரும் போது அவரவருக்கான இலக்குகள் இருக்கும் என்றாலும், அந்த பட்டியலில் தொழில்நுட்பம் சார்ந்த இலக்குகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

உடல் எடையை குறைப்பது, ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றுவது, புதிய திறனை கற்றுக்கொள்வது, வீண் செலவுகளை குறைப்பது என பலவிதமாக அமையக்கூடிய இலக்குகளோடு, பாஸ்வேர்டு பாதுகாப்பு, ஸ்மார்ட்போனில் இருந்து கொஞ்சம் விடுபடுவது உள்ளிட்ட தொழில்நுட்ப இலக்குகளையும் உறுதிமொழியாகக் கொள்ளலாம்.

நவீன வாழ்க்கையில் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை செலுத்தி வரும் நிலையில், நம்முடைய தொழில்நுட்பப் பழக்கங்களும் ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம்.

அந்த வகையில், 2019 ம் ஆண்டிற்காக நீங்கள் பரிசீலிக்க வேண்டிய முக்கிய தொழில்நுட்ப உறுதிமொழிகள் சில:

பாஸ்வேர்டு பாதுகாப்பு:

பாஸ்வேர்டு தொடர்பான அறிக்கை 2018 ம் ஆண்டின் முக்கிய செய்திகளில் ஒன்று தெரியுமா? ஸ்பிளேஷ்டேட்டா நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கை, மோசமான பாஸ்வேர்டுகள் மாறிவிடவில்லை என தெரிவிக்கிறது. பாஸ்வேர்டு தொடர்பான பழக்கங்களும் மாறிவிடவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இல்லை என்றால், 123456 எனும் எண் வரிசை தான் மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிப்பதை என்னவென்று புரிந்து கொள்வது?

மோசமான பாஸ்வேர்டு

பட்டியல் என்பது, ஆண்டுதோறும் நிகழும் பாஸ்வேர்டு திருட்டு மற்றும் தாக்குதல்கள் சம்பவங்களில் அம்பலமான பாஸ்வேர்டுகளின் பொதுத்தன்மையை அலசி ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. அந்த வகையில், 123456 எனும் எண் வரிசையும், பாஸ்வேர்ட் என்பதையே பாஸ்வேர்டாக கொள்வதும் பரவலாக இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் தான் இவை பட்டியலில் முதலிடம் பெறுகின்றன.

இதன் பொருள், பலரும் இந்த பதங்களை தங்கள் பாஸ்வேர்டாக கொண்டிருக்கின்றனர் என்பதாகும். இதிலிருந்து பெற வேண்டிய பாடம், இந்த பதங்களை பாஸ்வேர்டாக வைத்துக்கொண்டால் உங்கள் இணைய கணக்குகளுக்குள் கை வைக்க ஹேக்கர்கள் மெனக்கெடவே வேண்டாம் என்பது தான். ஆனால் இந்த பாஸ்வேர்டு பாலபாடத்தை கூட புரிந்து கொள்ளமால், எண் வரிசை போன்ற மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்டுகளை எண்ணற்றவர்கள் பின்பற்றுவை என்னவென்று சொல்வது?


அதனால் தான், இந்த ஆண்டுக்கான உங்கள் முதல் தொழில்நுட்ப உறுதிமொழி வலுவான பாஸ்வேர்டை அமைத்துக்கொள்வது என்பதாக இருக்கட்டும். பாஸ்வேர்டு பாலபாடங்களை மனதில் கொள்ளுங்கள். அவை எளிதானவை:

பாஸ்வேர்டு மற்றவர்களால் எளிதில் ஊகிக்க முடியாதவையாக இருக்க வேண்டும். பெயர், பிறந்த நாள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பாஸ்வேர்டுகளை அமைக்க வேண்டாம். அவை எளிதாக ஊகிக்கப்படும். ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்தக்கூடாது.

உங்கள் பாஸ்வேர்டு தனித்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும். இது போன்ற விதிகளை பின்பற்ற எளிதான வழி, பாஸ்வேர்டு அமைக்க பாஸ்பிரேஸ் உத்தியை பின்பற்றுங்கள் என்பதாகும். அதாவது, ஏதேனும் ஒரு சொற்றொடரை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள முதல் எழுத்துக்களை எழுதி, முதலிலும், முடிவிலும், இடையிலும் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளை சேர்த்தால் உங்களுக்கான பிரத்யேகமான பாஸ்வேர்டு தயார். இந்த பாஸ்வேர்டு எளிதில் ஊகிக்க முடியாத படி சிக்கலாக இருப்பதால், நீங்கள் தேர்வு செய்த வாசகத்தின் அடிப்படையில் எளிதாக நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

போனை கீழே வையுங்கள்!

ஸ்மார்போன் இல்லாமல் நானில்லை என்று பாடும் நிலையில் பெரும்பாலானோர் இருக்கிறோம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்களுடன் நாம் ஐக்கியமாகிவிட்டோம். ஆனால் ஸ்மார்ட்போன்கள் என்ன தான் பயனுள்ளதாக இருந்தாலும், அதற்கு ஒரு வரம்பு வைத்துக்கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக, இரவில் ஸ்மார்ட்போனுடன் படுக்கச்செல்பவர்களும், காலையில் கண் விழித்தவுடன் ஸ்மோர்ட்போன் முகத்தில் விழிக்கும் பழக்கம் கொண்டவர்களும் நிச்சயம் போனின் ஆதிக்கத்தில் இருந்து விடபட வழி தேட வேண்டும்.

அதோடு, மதிய உணவு மேஜையில் அல்லது பேரூந்து பயணத்தில் கூட, புதிய நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா என தங்களை அறியாமல் பார்க்கும் பழக்கம் கொண்டவர்களும் போன் பயன்பாட்டில் கொஞ்சம் சுய கட்டுப்பாட்டை கொண்டு வந்தாக வேண்டும்.

எனவே, இந்த ஆண்டு, போனை கொஞ்சம் கீழ் வைப்பதற்கான வழிகளை தேடுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போனை தொடுவதில்லை என்பது போன்ற உறுதிமொழிகள் கைகொடுக்கலாம். அன்பானவர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, போனில் நோட்டிபிகேஷன் பார்ப்பதில்லை என்றும் தீர்மானிக்கலாம்.

நீண்ட நாட்களாக சந்தித்து பேசியிராத நண்பர்களை நேரில் பார்த்து கைகுலுக்கி பேசுவது உரையாடுவதை அடிக்கடி மேற்கொள்ள உறுதி கொள்ளலாம்.

பகிர்வதற்கு முன்!

ஸ்மார்ட்போன் போலவே, சமூக ஊடக பயன்பாட்டிலும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை என்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என நீங்கள் விரும்பி பயன்படுத்தும் சமூக ஊடக சேவை எதுவாக இருந்தாலும் சரி, அதன் பயன்பாட்டில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வாருங்கள். முக்கியமாக சமூக ஊடகங்களில் உங்கள் பிரைவஸி மீது கொஞ்சம் அக்கரை காட்டுங்கள்.

2018 ல் ஃபேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உங்கள் தகவல்களும், தரவுகளும் பலவிதமாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் பாதுகாப்பதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எந்த வகையான தகவல்களை எப்படி பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை. சமூக ஊடகங்கள் வழங்கும் பிரைவஸி வசதிகளை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே, பிரைவஸி பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன் என்பது உங்கள் உறுதிமொழிகளில் ஒன்றாக இருக்கலாம். அதோடு, பார்வேர்டு செய்யப்படும் எந்த தகவல் அல்லது செய்தியையும், பொய்ச்செய்தி அல்ல என்று உறுதி செய்து கொள்ளாமல் என் பங்கிற்கு பார்வேர்டு செய்ய மாட்டேன் என்றும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பொய்ச்செய்திகள் இணையம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தாமல் முளையிலேயே கிள்ளி எறிவதில் நமக்கும் பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம்.

பேக்கப் தேவை

உங்கள் தகவல்களை பேக்கப் (backup) செய்யுங்கள் என்று கம்ப்யூட்டர் உலகில் ஆதிகாலத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கம்ப்யூட்டர் உள்ள முக்கிய கோப்புகளுக்கு பேக்கப் தேவை. முக்கியமான கோப்புகளையும், தகவல்களையும் தனியே ஹார்ட்டிஸ்கில் சேமித்து வைப்பது அவசியம்.

இவ்வளவு ஏன் தகவல்களை பேக்கப் செய்ய 3-2-2 எனும் பார்முலாவையும் பரிந்துரைக்கின்றனர். அதாவது, எந்த முக்கிய கோப்பையும் மூன்று நகல்களாக, குறைந்தது 2 சாதங்களில் வைத்திருந்து, அவற்றில் ஒன்று இணையம் சாராததாக இருக்க வேண்டும் என்கின்றனர். இதிலிருந்தே பேக்கப் எவ்வளவு முக்கியம் என தெரிந்து கொள்ளலாம்.

இப்போது பெரும்பாலான சேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்தும் நிலை இருப்பதால், எல்லா முக்கிய தகவல்களுக்கும் முறையான பேக்கப் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிதி ஆவணங்கள், முக்கிய கோப்புகள் போன்றவை ஒரே இடத்தில் பேக்கப் செய்வது நல்லது. இதற்கு நம்பகமான கிளவுட் சேவைகளையும் பயன்படுத்தலாம். டிஜிட்டல் புகைப்படங்களுக்கும் இது பொருந்தும்.  இந்திய அரசின் டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை அதில் பாதுகாத்து வைக்கலாம்.

ஆன்லைனில் ஆனந்தம்

இணையத்தில் வெறுப்பும், துவேஷமும் அதிகரிக்கத்துவங்கியிருப்பதை செய்திகளில் இருந்து நீங்கள் உணர்ந்திருக்கலாம். இணையம் உரையாடுவதற்கான இடம் எனும் நிலை மாறி வீண் விவாதங்களும், வெட்டி வம்புகளும் அதிகரித்துள்ளன. அதோடு டிரால்கள் எனப்படும் இணைய விஷமிகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளன. இதனால் இணையம் பாதுகாப்பு குறைந்த இடமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றவதற்கான முயற்சியாக, இணையத்தில் நல்ல விதமான கருத்துக்களை கூறுவது என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

விமர்சன நோக்கிலான பின்னூட்டம் தெரிவிக்க வேண்டிய நிலை இருந்தால் கூட, கொஞ்சம் நயமாக சொல்லுங்கள். முக்கியமாக, மோசமான பின்னூடங்கள் வாயிலாக இணைய தாக்குதலுக்குள் உள்ளாகும் நபர்களுக்கு, நம்பிக்கை வார்த்தை தெரிவித்து ஆதரவு தெரிவுயுங்கள்.

2019 க்கு ஆல் தி பெஸ்ட்!