கொரோனா வைரஸ் சந்தேகங்களுக்கு அரசு அறிவித்துள்ள வாட்ஸ் அப் எண்!

கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் பரவி வருகிறது. அவற்றை நம்பாமல் இந்த அதிகாரப்பூர்வ எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

21st Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்களுக்கு எத்தனையோ வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும்கூட ஆதரமற்ற போலித் தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இவை மக்களை தவறாக வழிநடத்துகிறது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைவருக்கும் இதுகுறித்த சரியான புரிதல் ஏற்படுவது அவசியமாகிறது.

corona helpline

எனவே நாட்டு மக்களுக்கு சரியான புரிதல் ஏற்படுத்தவும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் குவிந்து கிடக்கும் போலித் தகவல்களில் இருந்து மக்கள் விலகி இருக்கவும் மத்திய அரசு Mygov கொரோனா ஹெல்ப்டெஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதன்படி மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக தங்களுக்குள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் 9013151515 என்கிற வாட்ஸ் அப் எண் மூலம் விளக்கம் பெறலாம்.

நாம் இந்த எண்ணை நமது வாட்ஸ் அப்பில் இணைத்துக்கொண்டால் நமக்கு அதிகாரப்பூர்வமான உண்மையான தகவல்கள் கிடைக்கப்படும்.

whatsapp helpline

இதுதவிர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக +91-11-23978046 என்கிற தேசிய ஹெல்ப்லைன் எண்ணும் 1075 என்கிற கட்டணமில்லா எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ncov2019@gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


அத்துடன் கொரோனா தொடர்பான விவரங்களுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹெல்ப்லைன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதுபோன்ற அதிகாரப்பூர்வமான எண்களைத் தொடர்புகொண்டு சரியான தகவல்களைப் பெறுவதுடன் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு தவறான தகவல்கள் மேலும் பரவாமல் தடுக்கவேண்டும்.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India