Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

Find, Message, Buy - வாட்ஸ் அப் மூலமே இனி நீங்கள் ப்ரான்டுகளைக் கண்டறிந்து, வாங்கும் வசதி அறிமுகம்!

பயனர்கள் முழுமையான, சிறப்பான வணிக அனுபவத்தைப் பெறவும் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுடன் இணைந்திருக்கும் அதேசமயம் புதிய பிராண்டுகளைக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் இந்தப் புதிய அம்சம் வழங்கும்.

Find, Message, Buy - வாட்ஸ் அப் மூலமே இனி நீங்கள் ப்ரான்டுகளைக் கண்டறிந்து, வாங்கும் வசதி அறிமுகம்!

Friday November 18, 2022 , 3 min Read

பிரேசிலில் முதல் முறையாக நடைபெற்ற வாட்ஸ் அப் உச்சிமாநாட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பது பற்றி மார்க் ஜுக்கெர்பெர்க் பகிர்ந்துகொண்டார். இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் பயனர்கள் வாட்ஸ் அப் மூலமாகவே வணிகங்களைக் கண்டறிந்து, மெசேஜ் அனுப்பி வாங்கிக்கொள்ளலாம்.

பயனர்கள் முழுமையான, சிறப்பான வணிக அனுபவத்தைப் பெறவும் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுடன் இணைந்திருக்கும் அதேசமயம் புதிய பிராண்டுகளைக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் இந்த அம்சம் வழங்கும்.

whatsapp-1

WhatsApp மூலம் வணிகம் செய்யும் வழிகள்

கீழே குறிப்பிட்டுள்ள மூன்று வழிகளில் நீங்கள் வாட்ஸ் அப் மூலம் பிராண்டுகளை அடையாளம் கண்டு பொருட்கள் வாங்கலாம்.

வணிகத்தைக் கண்டறிய (Find)

பிசினஸ் சர்ச் (Find a Business) – ஏபிஐ மூலம் பெரிய பிராண்டை வாட்ஸ் அப்பில் கண்டறியலாம் (பிரேசில், யூகே, இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா என குறிப்பிட்ட நாடுகளில் மட்டும்)

டைரக்டரி (Directory) – வாட்ஸ் அப்’பில் உள்ளூர் வணிகத்தைக் கண்டறியலாம் (பிரேசிலில் மட்டும்; Sao Paulo பகுதியில் சோதனை முடிந்த பிறகு நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்)

வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே இணைந்துள்ள லட்சக்கணக்கான சிறு வணிகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பிராண்டுகளுடன் எளிமையான முறையில் விரைவாக தொடர்பில் இருக்க மக்கள் விரும்புகிறார்கள்.

எனவே, தற்போது வணிகத்தை வாட்ஸ் அப் மூலமாகவே கண்டறியும் எளிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மக்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் வகையில் இந்த தேடல் முறை கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களது தேடல் உங்கள் கணக்குடன் இணைக்கப்படாத வகையில் பிராசஸ் செய்யப்படுகிறது.

மெசேஜ் (Message)

ஏராளமான வணிகங்கள் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துவதால், மக்கள் தங்களது உரையாடல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் வகையில் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களும் வணிகங்களும் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே வாட்ஸ் அப் இதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கும் வணிகங்கள் மக்கள் வங்கிக் கணக்கு தொடங்கவும் மெட்ரோ டிக்கெட் வாங்கவும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யவும் உதவுகிறது.

வாங்க (Buy)

P2M உள்ளூர் வணிகருக்கு வாட்ஸ் அப் மூலமாகவே கட்டணம் செலுத்திவிடலாம் (தற்சமயம் பிரேசிலில் சோதனை முயற்சி நடந்துகொண்டிருக்கிறது; மற்ற சந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது).

மக்கள் பாதுகாப்பான முறையில் சாட் மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் கொண்டு கட்டணம் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது பிரேசிலில் வெவ்வேறு பேமெண்ட் பார்ட்னர்களுடன் இணைந்து சோதனை முயற்சி நடக்கிறது.

புதியாக அறிமுகப்படுத்தப்படும் பிசினஸ் சர்ச் அம்சம் பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ, யூகே ஆகிய பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கும்.

பொதுவாக வணிகங்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்குவதற்கு போன் நம்பரைத் தேடுவது, இமெயில் அனுப்புவது, வலைதளத்தில் தேடுவது என மக்கள் சிக்கலான செயல்முறையைக் கடந்து செல்லவேண்டியிருக்கிறது. எனவே எளிமையான வழிமுறையை மக்கள் தேடுகின்றனர். இதை உணர்ந்து வாட்ஸ் அப்பில் இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி பயணம், பேங்கிங் என மக்கள் அந்தந்த பிரிவுகளில் பிரவுஸ் செய்துகொள்ளலாம்.

மக்கள் தாங்கள் தொடர்புகொள்ள விரும்பும் வணிகத்தைக் கண்டறிந்ததும் அவர்கள் பிராடக்ட் பற்றிய கேள்விகளைக் கேட்டறியலாம். அவர்களது பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றிய கேட்டலாக் பிரவுஸ் செய்யலாம். தேவையான பொருட்களை கார்ட்டில் சேர்க்கும்போது அவர்கள் வாங்க விரும்பும் பொருட்களின் விவரங்கள் வணிகங்களுக்குத் தெரியவரும். அதைத் தொடர்ந்து கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

whatsapp-2
இந்தப் புதிய அம்சத்தினால் வலைதளம், செயலிகள் போன்றவற்றை அணுகாமல் வாட்ஸ் அப் மூலமாகவே மக்களும் வணிகங்களும் பலனடைந்து சிறப்பான அனுபவத்தைப் பெறலாம்.

வருங்காலத்தில் மேலும் பல நாடுகளில் இந்த அனுபவம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

“உலகம் முழுக்க மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பிரேசிலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்க, கார் வாங்க, டின்னர் ஆர்டர் செய்ய என அனைத்திற்கும் மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும், எளிதாக்க விரும்புகிறோம். எனவே, பயனர்கள் வாட்ஸ் அப் சாட் மூலமாகவே வணிகங்களைக் கண்டறிந்து, வாங்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறோம்,” என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

இனி மக்கள் ஒரு பிராண்டையோ சிறு வணிகத்தையோ வாட்ஸ் அப்பிலேயே தேடலாம். இதற்காக வாட்ஸ் அப் அதன் டைரக்டரி அம்சத்தை பிரேசில் முழுவதும் விரிவாக்கம் செய்து வருகிறது. பிரேசிலிலும் மற்ற சில நாடுகளிலும், வாட்ஸ் அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தி பெரிய நிறுவனங்களும் இணைக்கப்படுகின்றன.

மக்கள் தங்களுக்கு விருப்பமான வணிகங்களுடன் சிறப்பாக இணைந்திருக்க வாட்ஸ் அப் இந்தப் புதிய அனுபவத்தை வழங்குகிறது.