டிசம்பர் 31 தான் கடைசி- இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது: முழு விவரம் இதோ!
டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். நட்பு, பொருளாதாரம், வணிகம், வேடிக்கை, குடும்பம், பகிர்தல் என்று பயனர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னணி வகிக்கிறது வாட்ஸ் அப். இந்தியாவில் மற்ற சமூக வலைதளங்களைவிட வாட்ஸ் அப்பின் பயன்பாடும் பரிமாணமும் அதிகம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் மட்டும் 390 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பிற சோசியல் மீடியாக்களை விட வாட்ஸ் அப் மிகவும் பாதுகாப்பான செய்தி பரிமாறும் தளமாக உள்ளது. காரணம் என்கிரிப்டட் வடிவில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதை அனுப்பியவரும் பெற்றவருமே மட்டுமே பார்க்க முடியும்; வாட்ஸ் அப் நிறுவனமேகூட பார்க்க முடியாது.
குறிப்பாக அதன் தாய் நிறுவனமான மெட்டா, வாட்ஸ்அப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ் அப் பொதுவாக சில பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆதரவளிப்பதை படிப்படியாக நிறுத்தி வருகிறது. டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு மேலும் 49 மொபைல்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, புத்தாண்டு முதல் இந்த மொபைல்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய், எல்ஜி மற்றும் வேறு சில நிறுவனங்களின் போன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் மிகவும் பழைய மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தற்போது யாரும் பயன்படுத்துவது கிடையாது. மேலும், இதில் சில மொபைல்கள் இந்தியாவிலேயே புழக்கத்தில் கிடையாது என்பதால், பெரும்பாலான பயனர்களுக்கு பாதிப்பு கிடையாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31க்குப் பிறகு WhatsApp சேவைகள் நிறுத்தப்படும் ஸ்மார்ட்போன்களின் முழுமையான பட்டியல் இங்கே பாருங்கள்...
- ஆப்பிள் ஐபோன் 5
- ஆப்பிள் ஐபோன் 5 சி
- சாம்சங் கேலக்ஸி Ace 2
- சாம்சங் கேலக்ஸி கோர்
- சாம்சங் கேலக்ஸி S2
- சாம்சங் கேலக்ஸி S3 மினி
- சாம்சங் கேலக்ஸி Trend II
- சாம்சங் கேலக்ஸி Trend Lite
- சாம்சங் கேலக்ஸி Xcover 2
- சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
- சோனி எக்ஸ்பீரியா மிரோ
- சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
- விகோ சின்க் ஃபைவ்
- LG Enact
- எல்ஜி லூசிட் 2
- எல்ஜி ஆப்டிமஸ் 4X HD
- எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
- எல்ஜி ஆப்டிமஸ் F3Q
- எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
- எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
- எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
- எல்ஜி ஆப்டிமஸ் L2 II
- எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
- எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
- எல்ஜி ஆப்டிமஸ் L4 II
- எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
- எல்ஜி ஆப்டிமஸ் எல்5
- எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
- எல்ஜி ஆப்டிமஸ் L5 II
- எல்ஜி ஆப்டிமஸ் எல்7
- எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
- எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
- எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
- ஹூவெய் அசன்டு டி (Huawei Ascend)
- ஹூவெய் அசன்டு டி-1 (Huawei Ascend D1)
- ஹூவெய் அசன்டு டி -2 (Huawei Ascend D2)
- ஹூவெய் அசன்டு ஜி740 (Huawei Ascend G740)
- ஹூவெய் அசன்டு மேட் (Huawei Ascend Mate)
- ஹூவெய் அசன்டு பி1 (Huawei Ascend P1)
- HTC Desire 500
- மெமோ ZTE V956 (ZTE Memo V956)
- ZTE Grand X Quad V987
- க்யூட் எக்ஸ்எல் (Quad XL)
- லெனோவா ஏ820 (Lenovo A820)
- ஆர்கோஸ் 53 பிளாட்டினம்
- கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE 9ZTE Grand S Flex)
- Grand X Quad V987 ZTE
- விகோ ஜிங் பைவ் (Wiko Cink Five)
- விகோ டார்க் நைட் ஜிடி (Wiko Darknight ZT)
இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் இயங்காது என்றும், இந்த பழைய மாடல் ஸ்மார்ட் போன்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்காது என்பதால் பயனர்களின் பர்சனல் தகவல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விரைவில் அறிமுகம்!