ஜூலை 6 முதல் எதற்கு எல்லாம் இ-பாஸ் தேவை?

ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், எங்கெல்லாம் செல்ல இ-பாஸ் தேவை என தெரிந்து கொள்ளுங்கள்.

5th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காக பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழும்‌ ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, தளர்வுகளுடனும்‌ தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும்‌ மேலும்‌ நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இ-பாஸ்

பட உதவி: தினத்தந்தி

முழு ஊரடங்கு:


இதைத் தவிர ஜூலையில் வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும், தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும்‌ 26.7-2020 ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ எந்தவிதமான தளாவுகளும்‌ இன்றி தமிழ்நாடு முழுவதும்‌ முழு ஊரடங்கு அமல்‌ படுத்தப்படும்‌.

பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியமில்லை. இந்நிலையில், கடந்த 19-ந்தேதிக்கு முன்னர் மாவட்ட கலெக்டர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இடையே சென்று வருவதற்கான ‘இ-பாஸ்’ மற்றும் இதர பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிப்பு வந்துள்ளது.


திருமண நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்‌:


  • திருமண நிகழ்ச்சிகளில்‌ 50 நபர்களுக்கு மேல்‌ பங்கேற்கக்‌ கூடாது.


  • இறுதி ஊர்வலங்கள்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த சடங்குகளில்‌ 50 நபர்களுக்கு மேல்‌ பங்கேற்கக்‌ கூடாது.


பொது பேருந்து போக்குவரத்து :

மாநிலத்தில்‌ மாவட்டங்களுக்குள்‌ தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார்‌ மற்றும்‌ அரசு பொதுப் பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல்‌ 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
e-pass

இ-பாஸ்‌ முறை :


  • அந்தந்த மாவட்டத்திறகுள்‌ இ-பாஸ்‌ இல்லாமல்‌ செல்ல அனுமதி அளிக்கப்படும்‌.


  • வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவும்‌, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள்‌ வரவும்‌, மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும்‌, இ-பாஸ்‌ முறை தொடர்ந்து நடைமுறையில்‌ இருக்கும்‌.


  • முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்‌ இடங்களில்‌ 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ்‌ 5.7.2020 வரை செல்லும்‌. இதற்கு மீண்டும்‌ புதிய இ-பாஸ்‌ பெறத்‌ தேவை இல்லை.


  • ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப்‌ பணிகளுக்கான ஒப்பந்தங்களில்‌ பங்கேற்க விரும்பும்‌ ஒப்பந்ததாரர்களுக்கும்‌, அப்பணியை மேற்பார்வை செய்யும்‌ ஒப்பந்ததாரா்களுக்கும்‌ மற்றும்‌ இப்பணிகள்‌ சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும்‌ ஒப்பந்ததாரா்களுக்கும்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால்‌ இ-பாஸ்‌ வழங்கப்படும்‌.


இ-பாஸ் விண்ணப்பிக்கும் தளம்: https://tnepass.tnega.org/

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India