Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

கமல் ஹாசனின் அரசியல் ஸ்டார்ட்-அப் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி தோல்வியை தழுவியது ஏன்?

மிகவும் எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது ஏன்? என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

கமல் ஹாசனின் அரசியல் ஸ்டார்ட்-அப் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி தோல்வியை தழுவியது ஏன்?

Sunday May 09, 2021 , 3 min Read

வர்த்தக நிறுவனங்களை மட்டும் அல்லாது, வர்த்தக உலகிற்கு வெளியேவும் ஆய்வு செய்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பாடங்களை கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோல்வி ஸ்டார்ட் அப் நோக்கில் ஆய்வு செய்ய பொருத்தமானதாக விளங்குகிறது.

kamal

இதற்கான காரணங்களை பார்க்கலாம்:

* மிகவும் பிரபலமான நாயகன், தேர்ச்சி மிக்க வர்த்தக அதிகாரி தொழில்முனைவோராக அறிமுகம் ஆவது போல, அரசியல் தலைவராக அறிமுகம் ஆகி கவனத்தை ஈர்க்கிறார்.


* மாநிலப் பிரச்சனைகளும் தெளிவானவை: அரசியல் தலைமையில் வெற்றிடம் இருப்பதாக கருதப்பட்டு, ஒரு அரசியல் ஸ்டார்ட் அப் அதற்கு மாற்றாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.


* இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் சூழலும் இருந்தது. வெகுமக்கள் அறிமுகம் உள்ள ஒரு தலைவராக கமல் ஹாசன் இதற்கு முயற்சி செய்தார்.


ஆனால், முடிவு வேறுவிதமாக இருந்தது. கமல் ஹாசன் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி உண்டாக்கிய எதிர்பார்ப்பை மீறி, தேர்தல் முடிவு மோசமான பலனை அளித்தது ஏன்?


மக்கள் நீதி மய்யம் கட்சி சில முக்கிய உத்திகளில் பெரும் தவறுகளை செய்தது. இவை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பாடங்களாக அமைகின்றன.


முதல் விஷயம், முதலீட்டு தேவையை ஒரு போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது மற்றும், உங்கள் கனவை செயலாக்கம் பெறுவதற்குத் தேவையான முதலீட்டை செய்யாமல் இருப்பதாகும்.


ஒவ்வொரு ஐடியாவுக்கும் ஒரு பட்ஜெட் உண்டு. பட்ஜெட் கைவசம் இருந்தால் மட்டுமே, ஐடியாவை நிறைவேற்றலாம். சுயமாக நிதி திரட்டுவது நல்லது தான் என்றாலும் அதில் சிக்கல் இல்லாமல் இல்லை.


நூறு கோடி கனவை ஒரு போதும் சுயநிதியால் உருவாக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் சுயநிதி என்பது ஐடியா, நிறுவனம் இரண்டுக்குமே சுமையாக மாறிவிடலாம்.  


ஸ்ரீதர் வேம்பு, சுயநிதியல் ஜோஹோவை யூனிகார்ன் நிறுவனமாக உருவாக்கினாலும், அவர் இந்த ஸ்டார் அப்பை உருவாக்கிய காலமும், சூழலும் வேறானது. இதை பொதுமைப்படுத்த முடியாது. உங்கள் ஸ்டார்ட் அப்பிற்கு போதிய நிதி இல்லை எனில் அது தவறாகிவிடும். கனவுடன் பணமும் சேரும் போது தான் வெற்றி சாத்தியம்.

kamal

சந்தையிடம் நீங்கள் கொண்டு செல்லும் கருத்து மிக முக்கியம். இதில் தவறு செய்யக்கூடாது.

போட்டியாளர்களுக்கு மாற்றை வழங்குவது தான் உங்கள் கருத்தாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டார்ட் அப் அளிக்கூடிய மதிப்பு என்ன என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக விளங்குவது என்பது மட்டுமே போதுமானதல்ல. ஆனால் அதுவே மைய இலக்காக அமைந்தது.

மய்யம் கட்சியின் நோக்கம் என்ன என்பது தெளிவாக வெளிப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு உங்கள் மைய நோக்கத்தை தெளிவாக உணர்த்த வேண்டும். அவர் அதைத் தான் தேர்வு செய்வாரேத் தவிர, நீங்கள் சரி என முன்வைப்பதை அல்ல.


வெற்றிகரமான நிறுவனங்கள் தங்களுக்கான மைய செய்தியை தேர்வு செய்து வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்கின்றன. அதோடு, வாடிக்கையாளர் புரிதல், கருத்துகள் மற்றும் எதிர்வினையை கேட்டறிவதை விட சிறந்தவை வேறில்லை.

வர்த்தகத்தை துவக்கும் போது, துவக்கிய பின் மற்றும் தோல்வியிலும் ஒரு போதும் வாடிக்கையாளார் சொல்வதை கேட்காமல் இருக்க்கூடாது. கமல் கட்சி, வாக்களிக்கும் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளத்தவறிவிட்டது. உங்களுக்கான தகவல் தொடர்பை நீங்கள் தேர்வு செய்யலாம், ஆனால் காது கொடுத்து கேட்டால் மட்டுமே உரையாடல் வலுவாக அமையும். கமல் கட்சி இதை செய்யத்தவறிவிட்டது.

வாடிக்கையாளர்கள் மனநிலையை அறிந்து செயல்படுவதாலேயே மகத்தான பிராண்ட்கள் வெற்றிபெறுகின்றன.


ஸ்டார்ட் அப் பயணத்தில், பங்குதாரர்கள் மற்றும் கூட்டு மிகவும் முக்கியம்

கமல் கட்சிக்கு கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பிருந்தாலும், அவ்வாறு செய்யத் தவறியது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனராக அதை வளர்த்தெடுப்பது உங்கள் பொறுப்பு. கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டு முன்னேற வேண்டும்.


வர்த்தகத்திலும் சரி, அரசியலிலும் சரி, நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை. உங்கள் முக்கியக் குழு, உங்கள் வர்த்தகம், நிதி மற்றும் வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.


கமல் கட்சியில், பலரும் விலகி வருவது, அங்கு, புரிதலோ, ஒத்துழைப்போ இல்லை என்பதை உணர்த்துகிறது. இதே தவறை ஸ்டார்ட் அப் பயணத்தில் செய்யக்கூடாது. உங்களுடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் எதற்காக செயல்பட வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் முக்கியக் குழு, உங்களுடன் இணைந்திருக்க வேண்டும். உங்கள் நிறுவன அமைப்பையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். வளர்ச்சிக்கான வழிகளை கண்டறிய வேண்டும். உங்களுக்காக போராடக்கூடிய ஒரு குழுவை உருவாக்காமல், உங்களால் வெற்றி பெற முடியாது.

ஏன் எனும் கேள்விகான பதிலும் முக்கியம்.

எல்லா வலுவான நிறுவனங்களும் ஒரு வலுவான நோக்கம் கொண்டுள்ளன. ஏன் எனும் கேள்வியுடன் துவங்குங்குகள் என்கிறார் சைமன் சினேக். பெரிய இயக்கங்களை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மைய எண்ணத்துடன் ஏன் எனும் கேள்விக்கான பதிலை கொண்டுள்ளனர்.

“மக்கள் நீங்கள் வாங்குவதை வாங்குவதில்லை, ஆனால் நீங்கள் ஏன் வாங்குகிறீர்கள் என்பதை வாங்குகின்றனர்,” என்கிறார் சைமன். ஏன்? எதற்கு? எப்படி எனும் கேள்விகளிள், ஏன் எனும் கேள்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கமல் கட்சி தனது இருப்பிற்கான ஏன் எனும் காரணத்தில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால், ஒன்று கமல் ஹாசனின் அரசியல் பயணத்தின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதோடு, அரசியல் ஸ்டார்ட் அப் உலகில் குதித்த அவரது தொழில்முனைவு தன்மையையும் பாராட்ட வேண்டும்.


வெற்றியோ, தோல்வியோ, முயற்சியை பாராட்ட வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியை பாராட்டலாம். இந்தியாவுக்கு மேலும் இத்தகைய முயற்சிகள் தேவை. ஆனால் அதற்கேற்ற நிதி மற்றும் உத்திகள் அவசியம்.


ஆங்கில கட்டுரையாளர்: பாலசந்தர்.ஆர் | தமிழில்: சைபர்சிம்மன்