பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட குழந்தைக்கு பாலூட்டிய பெண் கான்ஸ்டபிள்!

10th Jan 2019
Add to
Shares
72
Comments
Share This
Add to
Shares
72
Comments
Share

ஹைதராபாத்தின் பேகம்பட் பகுதியில் இருக்கும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் விடுமுறையில் இருந்தபோதும் அப்சல்கஞ் காவல் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட இரண்டு மாத பச்சிளம் குழந்தைக்கு பாலுட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

மொஹமத் இர்ஃபான் என்பவரிடம் ஒரு பெண் இந்தக் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சற்று நேரத்தில் வருவதாகக் கூறிச்சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அந்தப் பெண்மணி திரும்பி வராததால் ஒஸ்மானியா மருத்துவமனை அருகில் இருந்த இர்ஃபான் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சி செய்தும் பலனில்லை.

அவர் தனது நண்பர்களிடமும் உறவினர்களிடம் இது குறித்துத் தெரிவித்தார். அதன் பிறகு குழந்தை அப்சல்கஞ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை அழுவதைக் கண்டு அப்போது பணியிலிருந்த கான்ஸ்டபிள் எம் ரவீந்தர் அவரது மனைவி பிரியங்காவிற்குத் தகவலளித்தார். பிரியங்காவும் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். மகப்பேறு விடுப்பில் இருந்த அவர் குழந்தைக்காக காவல் நிலையத்திற்கு வந்ததாக என்டிடிவி தெரிவிக்கிறது.

”எனக்கு அழைப்பு வந்ததும் நான் உடனடியாக கார் புக் செய்து அப்சல்கஞ் காவல் நிலையத்திற்கு விரைந்தேன். எனக்கும் சின்னக் குழந்தை உள்ளது. எனவே அந்தக் குழந்தை பசியால்தான் அழுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் உடனே அந்தக் குழந்தைக்கு பாலூட்டினேன்,” என்று அவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் பெட்லாபர்க் பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. அதன் பிறகு போலீஸார் அந்தக் குழந்தையின் அம்மாவை கண்டுபிடித்தனர். அவரது பெயர் ஷபானா பேகம். அவர் சாலையில் குப்பை சேகரித்து வருபவர். அவர் தனது குழந்தையை இர்ஃபானிடம் ஒப்படைத்தபோது மது அருந்தியிருந்துள்ளார். இர்ஃபான் இருந்த இடத்தை திரும்ப சென்றடைய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

டிசிபி எம் மகேஷ் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்,

“அவர் தனது குழந்தை காணாமல் போனதாகக் கூறி அழுதார். போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் குழந்தையை அடையாளம் காட்டினார். அதன் பிறகு அம்மாவும் குழந்தையும் ஒன்று சேர்ந்தனர் என ’தி நியூஸ் மினிட்’ தெரிவித்தது.

இந்த சம்பவத்தை அடுத்து ஹைதராபாத் காவல் ஆணையர் இந்தத் தம்பதியின் செயலுக்காக வெகுவாகப் பாராட்டினார்.

காவலரின் செயல்பாடு பாராட்டு பெறுவது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கானாவின் மஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள மூசாபெட் காவல் நிலையத்தின் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் SCTPC தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பெண்ணுக்காக அவரது குழந்தையை வெளியே வைத்துக்கொண்டு காத்திருந்தார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
72
Comments
Share This
Add to
Shares
72
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக