மே7-8 கோவையில் பெண் தொழில் முனைவோர் வர்த்தகக் கண்காட்சி: Womentrepreneurs India முயற்சி!

தொழில்முனைவோர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் வகையில் கோவையில் பிரம்மாண்ட வர்த்தக கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
1 CLAP
0

வர்தா புயல், கஜா, சென்னை வெள்ளைம் போன்ற நெருக்கடி காலங்களின் போது தீவிரமாக செயல்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்யத் தொடங்கப்பட்டதே @Connect என்ற தன்னார்வலக் குழு.

ஒரு ஃபேஸ்புக் குழுவாகத் தொடங்கி, பின்னர் பல தளங்களில் உறுப்பினர்களைப் பெற்று, கோவிட் பெருந்தொற்று பரவிய காலத்தில், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துப் பல உயிர்களைக் காத்தது @Connect.

@Connect Food, @Connect Bed, @Connect Oxygen, @Connect Blood, @Connect Ambulance மற்றும் #Connect Social awareness போன்ற பல கிளைகளாகப் பிரிந்து, நேர்த்தியுடனும் துரிதமாகவும் செயல்பட்டு உயிர்காக்கும் சேவைகளை வழங்க உறுப்பினர்கள் உதவினர்.

சேவைகளுடன் நின்றுவிடாமல் சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் இளைய சமூகத்தையும் கவனத்தில் கொண்டு, @Connect Job மற்றும் Pursue@ Connect உருவானது. அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் Coding, C, C++, Python, HTML போன்ற Coding வகுப்புகள், Life Skill, Personality Development, Spoken English மற்றும் சிலம்பம் போன்ற பல விஷயங்களைத் தொடர்ந்து அளித்துக் கொண்டு வருகிறது.

இந்த பயிற்சிகள் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க உதவுகிறது. ’அட்கனக்ட் ஜாப்ஸ்’ நான்கு கன்சல்டன்சிகளுடன் இணைந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு பின் பலருடன் கைகோர்த்து இணையத்தில் வேலை வாய்ப்புத் தகவல்களை பகிர்கிறது. மேலும் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் இடையே இவ்வமைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது.

தொழில்முனைவர்களுக்கான AtConnect-ன் அடுத்த முயற்சி

பெருந்தொற்று காலத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் முயற்சியாக, அடுத்து என்ன? என்ற சமூகப் பார்வையில் சிந்தித்த போது உயிர் பெற்றதே ’Womentrepreneurs India’ (WEI). இது அனைத்து சிறு, குறு பெண் தொழில்முனைவோர்களுக்கான தளம் ஆகும். தங்கள் தொழிலை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தத் தேவையான அனைத்து உதவிகளையும் WEI தொடர்ந்து செய்கிறது.

தொடக்கத்தில் 'Connect and Commit' எனும் நிகழ்வின் மூலமாக பல தொழில்முனைவோர்களை இணைத்தும் வாய்ப்புகளை பிணைத்துக் கொடுத்தது WEI. மேலும், 'Biz Over Breakfast',” என்ற ஊக்கமளிக்கும் நிகழ்வின் மூலமாக “Razorpay” உதவியுடன் 11 வினாடிகளுக்குள் பொருட்களை விற்கவும் வாங்கவும் செயல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ’Digital Sandhai’ என்ற விற்பனைக் களமும் WEI மூலம் நடத்தப்படுகிறது. Multidimensional E-Commerce Portal மூலமாக அனைவரும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளை இணையத்தில் உருவாக்கியுள்ளது.

“இதன் மூலம் நேரடி ஆன்லைன் சந்தை வாய்ப்புகளைப் பெருக்கி கோடிக்கணக்கில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய பல தொழில்முனைவோர்களுக்கு திருப்புமுனையாகவும் விடிவெள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது,” என்று அட்கனெக்ட் குழுவினர் தெரிவித்தனர்.

தொழில் செய்யத் தேவைப்படும் அனைத்து சட்ட ஆவணங்களைப் பெறவும் வெளிநாட்டு வியாபாரம் பற்றியும் அரசு மானியங்கள் தொடர்பாகவும் மேலும் தொழில் சார்ந்து தேவைப்படும் அனைத்து தகவல்களையும் பல்வேறு Webinar-கள் மூலமாக அனைவருக்கும் அளித்து வருகிறது.

இவை அனைத்தும் எந்தவித சிறு கட்டணமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. அதாவது பயனர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட பெறுவதில்லை என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றனர் குழுவினர்.

கோவையில் வர்த்தக கண்காட்சி

இனி தொழில்முனைவோர்கள் தங்கள் வட்டத்தைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு முன்னேறத் தேவையான சந்தை களத்தை உருவாக்கும் எண்ணத்தோடு, கோவையில் ‘வர்த்தகக் கண்காட்சி’ நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலைரங்கம் எனும் இடத்தில் மே7 மற்றும் மே8ம் தேதி இந்த கண்காட்சி நடைபெறும்.

தொழில்முனைவோர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட வர்த்தக கண்காட்சியை திட்டமிட்டுள்ளது அட்கனெக்ட்.

இதன் முலம், சிறு தொழில்முனைவோர்கள் பல நன்மைகளை பெறமுடியும்.

  • ஆயிரக்கணக்கான மக்களிடம், பல நகரங்களில் அவரவர் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தலாம்,
  • புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்,
  • Business to Business சந்திப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது,
  • ஏற்றுமதி/இறக்குமதி பற்றிய வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறது.
  • தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

@Connect குழுவினரை பாராட்டும் விதத்திலும், வெற்றிகண்ட தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த கண்காட்சியில் சில விருதுகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு முக்கிய பேச்சாளர்கள்கும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னேற்றம் என்பது எந்தச் சூழலிலும் தேங்கி நில்லாது தடைகளை தகர்த்து வெற்றியை நோக்கி நகர்வதே தங்களது இந்தப் பயணத்தின் நோக்கம் என AtConnect குழுவினர் கூறுகின்றனர்.

தொடர்புக்கு: 09480557984

Latest

Updates from around the world