Women's Reservation Bill - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்; கடந்து வந்த பாதை முதல் முக்கிய தகவல்கள் வரை!

சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Women's Reservation Bill - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்; கடந்து வந்த பாதை முதல் முக்கிய தகவல்கள் வரை!

Tuesday September 19, 2023,

3 min Read

சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

Women

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் மற்றும் ஜல் சக்தி பிரஹலாத் படேல் ட்னது எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

"மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் தார்மீக தைரியம் மோடி அரசுக்கு மட்டுமே உள்ளது. இது அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஜி மற்றும் மோடி அரசுக்கு வாழ்த்துகள்," எனப் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு (நூற்று எட்டாவது திருத்தம்) மசோதா, 2008 என்றும் அழைக்கப்படும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் அளித்தது. நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மக்களவை மற்றும் மாநிலங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் சட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

NCP தலைவர் சுப்ரியா சுலே, நேற்று பேசுகையில்,

“முதல் பெண் பிரதமரும் ஜனாதிபதியும் காங்கிரஸிலிருந்து வந்தவர்கள் என்றும், ஆனால் போதுமான எண்ணிக்கை இல்லாததால் காங்கிரஸால் நிறைவேற்ற முடியாவில்லை,” என்றும் கூறினார்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று, பாஜகவின் கூட்டணி கட்சியும், என்சிபி தலைவருமான பிரபுல் படேலும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருத்தார்.

நாடாளுமன்ற மசோதா:

இன்றுமுதல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தின் போது மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் சமர்பிக்கப்பட்டவுள்ளது. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாவ் தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Women

திங்கள்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று தொடங்கும் கூட்டத் தொடரில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

பெண்கள் இடஒதுக்கீடு குறித்து அறிந்து கொள்ள வேண்டியது:

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது.

  • இந்த மசோதாவின்படி, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படலாம்.

  • பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான படியாக இருந்தாலும், இந்த மசோதா நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. 2010ல் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று வரை நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

மசோதா கடந்து வந்த பாதை:

சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரி நீண்ட போராட்டம் நடைபெற்றது. இந்த மசோதா முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு எச்டி தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கூட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் அங்கீகரிக்கப்படவில்லை.

Women

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இறுதியாக 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா மக்களவையில் நிலுவையில் இருந்தது. 2014ல், மக்களவை கலைக்கப்பட்ட பின், மசோதா முடங்கியது. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எந்த கட்சியில் எத்தனை பெண் எம்.பி.க்கள் உள்ளனர்?

2019 மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்களவையில் 25 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து 103 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். இன்றுவரை பெண் எம்.பி.க்கள் பங்கேற்ற அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். தற்போது பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

Women

மக்களவையில் 14.36 சதவீத பெண்களும், மாநிலங்களவையில் 10 சதவீதத்துக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களும் உள்ளனர். 1951 முதல் 2019 வரை, மக்களவையில் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி 42 பெண் எம்பிக்களைக் கொண்டுள்ளது. 2019 தேர்தலில் சோனியா காந்தி மட்டும் காங்கிரஸிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2019 தேர்தலில் காங்கிரஸ் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.

இதற்கிடையில், பாஜக தனது கட்சியைச் சேர்ந்த 53 பெண்களை வேட்பாளராக நிறுத்தியது. பிஎஸ்பி 24 பெண் வேட்பாளர்களும், டிஎம்சி 23, சிபிஎம் 10, சிபிஐ 4 மற்றும் என்சிபி ஒரு பெண் வேட்பாளர்களையும் களமிறங்கின.