18 வயதில் 3.3 பில்லியன் டாலர் சொத்து: யார் இந்த கெவின் டேவிட் லெஹ்மன்?

By YS TEAM TAMIL|9th Apr 2021
உலகின் இளம் வயது பணக்காரர் ஆனது எப்படி?!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கெவின் டேவிட் லெஹ்மன். 18 வயதே ஆகும் இவர் தான் தற்போதைய உலகின் இளம் வயது கொண்ட பணக்காரர்.


ஜெர்மனியைச் சேர்ந்த இவர் தான் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் 35வது ஆண்டு பில்லியனர்கள் பட்டியலின்படி உலகின் இளம் வயது பில்லியனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். தற்போது கெவின் பெயரில் 3.3 பில்லியன் டாலர் மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன.

18 வயதில் இது எப்படி சாத்தியமானது?

கெவினின் தந்தை குந்தர் லெஹ்மான். இவர் தான் டி.எம்-ட்ரோஜெரி மார்க்கெட் (dm-drogerie markt) நிறுவனத்தின் ஓனர். dm-drogerie markt நிறுவனம் என்பது ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூவை தலைமையிடமாகக் கொண்ட சில்லறை மருந்து விற்பனைக் கடைகளாகும். இந்த நிறுவனம் மருந்து பொருட்களுடன் அழகுசாதனப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதார உணவை விற்பனை செய்கிறது.

kevin

கெவின் டேவிட் லெஹ்மன்

தற்போதையை நிலவரப்படி, ஜெர்மனியின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான சில்லறை மருந்து விற்பனையாளர் என்றால் அது dm-drogerie markt நிறுவனம் தான். 1974ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், ஜெர்மனி முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட கடைகளும் 41,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைk கொண்டும் செயல்படுகிறது.

இந்த நிலையில் குந்தர் லெஹ்மான் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை கெவினின் பெயருக்கு மாற்றியதால் இவ்வளவு சொத்துக்களுக்கு அதிபதி ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2020ல் 18 வயதை எட்டியபோது லெஹ்மன் தந்தையின் நிறுவனத்தில் பங்குகளை பெற்றார்.

2வது இளம்வயது பில்லியனர்!

2021 ஆம் ஆண்டில் உலகின் இளைய பில்லியனர்களில் 2வது இடத்தைப் பிடித்தவர் சீனாவின் 24 வயதான வாங் ஜெலாங், 1.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். சீனாவைச் சேர்ந்த வாங் ஜெலாங், ஷென்ஜென் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் ஒரு நிறமி உற்பத்தி நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறார்.

kevin

பூச்சுகள், பிளாஸ்டிக், மை மற்றும் பிற பொருட்களில் பயன்படுத்தக்கூடிய வெள்ளை நிறமியான டைட்டானியம் டை ஆக்சைடு நிறமியை நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் நார்வே சகோதரிகள் அலெக்ஸாண்ட்ரா மற்றும் கதரினா ஆண்ட்ரெசன் ஆகியோர் உள்ளனர். 


தகவல் உதவி: பிசினஸ் இன்சைடர் | தொகுப்பு: மலையரசு