Whatsapp Edit: இனி வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை எடிட் செய்யலாம் - எப்படி தெரியுமா?

Whatsapp Edit: இனி வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை எடிட் செய்யலாம் - எப்படி தெரியுமா?

Whatsapp Edit: இனி வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை எடிட் செய்யலாம் - எப்படி தெரியுமா?

Tuesday May 23, 2023,

2 min Read

வாட்ஸ்அப் யூஸர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சம் குறித்த சர்ப்ரைஸ் அறிவிப்பை தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மெசெஞ்சர் ஆப் ஆக வாட்ஸ்அப் உள்ளது. சாட்டிங் மட்டுமின்றி போட்டோஸ், வீடியோ, டாக்குமென்ட், ஆடியோ, வீடியோ - ஆடியோ கால், குரூப் சாட் போன்ற பல பயனுள்ள விஷயங்கள் இருப்பதால் வாட்ஸ்அப் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் அதன் பயனர்களை திருப்திபடுத்துவதற்காக விதவிதமான அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வாட்ஸ் அப் பயனர்கள் மிகவும் காத்திருந்த எடிட் ஆப்ஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Edit :

வாட்ஸ்அப்பில் மெசெஜை அவசர அவசரமாக தட்டச்சு செய்யும் போது, அதில் ஏதாவது எழுத்து பிழை ஏற்பட்டால் மொத்த மெசெஜ்ஜையும் டெலீட் செய்துவிட்டு மீண்டும் புதிய செய்தியை அனுப்புவது வழக்கமாக உள்ளது.

Whatsapp

அதுமட்டுமின்றி வாட்ஸ்அப்பில் இருந்து அனுப்பப்படும் செய்திகளில் ஏதேனும் சிறிய எழுத்துபிழை இருந்தாலும், அந்த செய்தியின் அர்த்தம் முற்றிலும் மாற வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஒற்றை எழுத்துப் பிழை இருந்தாலும்... அதை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இனி அப்படி தவறாக அனுப்பப்படும் மெசெஜ்களை டெலீட் செய்யாமல் எடிட் செய்யக்கூடிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவு மூலம் விளக்கியுள்ளார்.

செய்தியை அனுப்பிய பிறகும், அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை மீண்டும் திருத்தவோ, மாற்றவோ எளிதான வழி எனக்குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வாட்ஸ்அப் எடிட் அம்சம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Whatsapp

எடிட் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் எந்த மெசேஜ் அனுப்பினாலும் அதை செலக்ட் செய்தால் காப்பி, ஃபார்வேர்டு போன்ற ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். தற்போது எடிட் என்ற ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. அனுப்பிய செய்தியில் உள்ள பிழைகள் மற்றும் எழுத்துப்பிழைகளை சரிசெய்ய அதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால், இந்த எடிட் ஆப்ஷனை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போதைய அப்டேட்டின் படி வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆப்ஷனை பயன்படுத்த முடியும். ஆனால், செய்தியை அனுப்பிய 15 நிமிடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.