Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

10 நிறுவனங்கள், 7ஆயிரம் ஊழியர்கள்: இளம் வயதில் நிர்வகிக்கும் பெண்!

18 வயதில் படித்துக்கொண்டே குடும்ப வணிகத்தில் பொறுப்பேற்று, இன்று 26 வயதில் மற்ற நிறுவனங்களோடு தன் விருப்பத்திற்காக இரண்டு கஃபேக்களையும் ஒரு நடன அகாடமியையும் நடத்தி வருகிறார் தேஜல்.

10 நிறுவனங்கள், 7ஆயிரம் ஊழியர்கள்: இளம் வயதில் நிர்வகிக்கும் பெண்!

Wednesday September 25, 2019 , 3 min Read

தேஜல் பிம்ப்ளே குடும்பம் வணிகப் பின்னணி கொண்டது. புத்தகத்தின் மீதிருந்து இவரது ஆர்வம் மெல்ல தொழில்முனைவை நோக்கித் திரும்பும் என இவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

1

தேஜல் தனது தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கியபோது அவரது வயது 20. இவர் CISB என்கிற முன்னணி செக்யூரிட்டி மற்றும் ஃபெசிலிட்டி மேலாண்மை தீர்வுகள் வழங்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். மேலும் க்ரீன் எகோ என்விரான்மெண்ட் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட், முத்ரா பவர் அண்ட் கேபிள்ஸ் லிமிடெட், ரெயின் கெமிக்கல்ஸ் & ஆக்ரோ பிராடக்ட்ஸ், ஸ்ரீ சமர்த் கேட்டரர்ஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார்.


இவர் வெளிநாடுகளிலும் வணிகங்களை அமைத்துள்ளார். Metime Café என்கிற கஃபே, Penthouzz என்கிற ரூஃப்டாப் லவுஞ்ச் ஆகியவற்றை நிறுவியுள்ளார். அத்துடன் மும்பையில் BYou என்கிற சொந்த நடன அகாடமியும் நடத்தி வருகிறார். மொத்தத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் தேஜல் தலைமையில் பணியாற்றி வருகிறார்.


தேஜல் நிதிப் பிரிவில் எம்பிஏ முடித்த பிறகு தனது குடும்ப வணிகத்தில் முழு நேரமாக இணைந்து கொண்டார்.

”எனக்கு 18 வயதிருக்கையில் படித்துக்கொண்டே என்னுடைய குடும்ப வணிகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டேன். என்னுடைய குடும்பத்தில் இளம் தொழில்முனைவராக உருவாகவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். என்னுடைய அப்பா கடுமையாக உழைப்பதைப் பார்த்திருக்கிறேன். அவரைப் போன்றே நானும் என் இலக்கை நோக்கி பயணிக்க விரும்பினேன். அவருடன் இணைந்துகொள்வது வசதியான ஒரு தேர்வாக நான் கருதவில்லை. எனக்கும் என்னைச் சுற்றியுள்ள உலகிற்கும் என்னுடைய திறனை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே நான் கருதினேன்,” என்றார்.

தேஜல் பதின்ம வயதிருக்கையில் அவரது அப்பா நிறுவிய CIS Bureaus Facility Services நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கினார். ஆறு மாதங்களில் நிதி நிர்வாகி ஆனார். நிறுவனத்தின் நிதி தொடர்பான அன்றாட நடவடிக்கைகளை சுமார் ஓராண்டு கையாண்டார். அதன் பிறகு நிதி மேலாளராக பதவி உயர்வு பெற்று நிறுவனத்தின் முழுமையான நிதி விவகாரங்களை நிர்வகிக்கத் தொடங்கினார். இறுதியாக இயக்குநர் ஆனார்.

அவர் மேலும் கூறும்போது, “2018-ம் ஆண்டு உணவு மற்றும் பானங்கள் பிரிவில் கவனம் செலுத்தினேன். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் Penthouzz என்கிற முதல் ரூஃப்டாப் லவுஞ்சை கண்டிவலி பகுதியில் அறிமுகப்படுத்தினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெர்சோவா பகுதியில் என்னுடைய முதல் துரித உணவக கஃபேவை அறிமுகப்படுத்தினேன்.


முயற்சியை மேலும் விரிவடையச் செய்யவேண்டும் என்கிற உந்துதலுடன் என்னுடைய சிறு வயது கனவான நடன ஸ்டுடியோ அமைக்கும் கனவை நனவாக்கிக் கொண்டேன்.

”2019-ம் ஆண்டு ஜூலை மாதம் B You என்கிற சொந்த நடன ஸ்டுடியோவை தொடங்கினேன். தற்சமயம் நிறுவனம், லவுஞ்ச், கஃபே, நடன ஸ்டுடியோ என மும்முரமாக செயல்பட்டு வருகிறேன்,” என்றார்.

சிறந்த மாற்றம்

2

தேஜல் குடும்பத்துடன் விடுமுறைக்காக ஆப்ரிக்கா சென்றிருந்தபோது உயர்தர பயிர்கள் வளர்க்கும் விவசாய சமூகத்தினருக்கு அதிக விளைச்சல் கிடைக்க உதவி தேவைப்படுவதைத் தெரிந்துகொண்டார். காய்கறிகளின் கலப்பு விதைகள், நிலத்தில் விளையும் பயிர்கள், ஆர்கானிக் பூச்சிக்கொல்லிகள், விவசாய இயந்திரங்கள் போன்றவற்றை விநியோகிக்கத் தொடங்கினார்.

”எங்களது செக்யூரிட்டி வணிகம் குறித்து மேலும் ஆராய்ந்தபோது இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஊழியர்களில் பலர் பல்வேறு சவால்களை சந்திப்பதை உணர்ந்தேன். நிறுவனத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஊழியரும் வங்கிக் கணக்கு தொடங்க உதவினேன். பணம் சரியான வங்கிக் கணக்கில் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. தற்சமயம் BYou உடன் இணைந்துள்ள வளர்ந்து வரும் இளம் நடன ஆர்வலர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தவும் நடனம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் மேலும் வளர்ச்சியடையவும் ஊக்குவிக்கிறேன்,” என்றார் தேஜல்.

வெற்றிப் பாதையில் சந்தித்த சவால்கள்

3

இவர் பயணித்த பாதை எளிதாக இருந்துவிடவில்லை. தேஜல் கூறும்போது, “அப்பா உருவாக்கிய வணிகத்தைத் தொடர்ந்து நிர்வகிப்பது மிகப்பெரிய செயல். மாற்றத்தைக் கையாள்வது எப்போதும் கடினம். மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. ஊழியர்கள், விற்பனையாளர், வாடிக்கையாளர்கள் என அனைவரும் என்னை ஒரு முதலாளியாகப் பார்க்கவில்லை. வசதி படைத்த நபராகவே என்னை கருதினர்,” என்றார்.

”என்னுடைய அப்பாவுடன் இணைந்து பணிபுரிந்ததால் வணிகத்திற்கும் குடும்பத்திற்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கமுடியாமல் போனது. பணியிடத்தில் நடக்கும் சச்சரவுகள் வீட்டிலும் தொடரும். வணிகத்தை நடத்துவது எப்போதும் எளிதான செயலாக இருக்கவில்லை. மேலோட்டமாக பார்க்கும்போது ஆடம்பரமாகத் தோன்றினாலும் அது கடினமானதே,” என்றார்.

தேஜல் Penthouzz, MeTime, BYou உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் சுமார் 80 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.


தேஜல் தனது தொழில்முனைவு பயணத்தின் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் இன்னமும் நெடும் தூரம் பயணிக்கவேண்டியிருப்பதாகவும் கருதுகிறார். ”பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்துள்ளேன். இனியும் சந்திக்க உள்ளேன். எனினும் மிகப்பெரிய அளவில் போட்டி இருந்தபோதும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வென்றதை நான் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். அதேபோல் சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ஒரு சிறந்த வணிக வாய்ப்பைத் தவறவிட்டத்தை மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கிறேன்,” என்றார்.


வருங்காலத்தில் இந்தியா மற்றும் ஆப்ரிக்காவில் வணிக முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்பட திட்டமிட்டுள்ளார்.

“தொழில்துறைக்கு ஆதரவளிக்கவேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். தனித்துவமான தரமான பொருட்கள் மற்றும் சேவையைக் குறைந்த விலையில் வழங்கவேண்டும். இதுவே எனது நோக்கம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா