ஒரு புதிய துவக்கம் - 'Yourstory University' அறிமுகம்!

By YS TEAM TAMIL
January 16, 2023, Updated on : Mon Jan 16 2023 12:00:40 GMT+0000
ஒரு புதிய துவக்கம் - 'Yourstory University' அறிமுகம்!
இந்த தேசிய ஸ்டார்ட் அப் தினத்தில், எங்கள் இத்தனை ஆண்டு கால கற்றல்களை எங்கள் நிறுவனர்கள் சமூகமாகிய உங்களிடம் கொண்டு வர விரும்புகிறோம். யுவர்ஸ்டோரி பல்கலைக்கழகத்தை துவக்குகிறோம். இங்கு, பெரும் ஈடுபாடு உணர்வுடன், தயாரிப்பு கைகோர்க்கிறது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இதை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றால், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ஸ்டார்ட் அப் புதுமையாக்கம் மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கான முக்கிய இடமாகி இருக்கிறது என்பதில் என்னுடன் உடன்படுவீர்கள்.


மேலும், கடந்த 14 ஆண்டுகளில் யுவர்ஸ்டோரியில் நாங்கள், இவற்றில் தாக்கம் உள்ள பல பயணங்களை பதிவு செய்வது மற்றும் கிரியாவூக்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.

கற்றல்

எல்லா பயணங்களைப் போலவே, இதிலும் கற்றல்கள் உண்டு. இதோ எனது தனிப்பட்ட கற்றல்கள் சில-


முதல் விஷயம், தொழில்முனைவு என்பது ஒற்றை வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதில்லை. நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களுக்காக தொழில்முனைவை தேர்வு செய்யலாம். நாம் இலக்காகக் கொண்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு உத்திகளை பின்பற்றலாம்.


மேலும், ஸ்டார்ட் அப் உருவாக்கத்தில் வெற்றிக்கான அளவுகோளாக நமக்கான சொந்த வரையறையையும் கொண்டிருக்கலாம்.

எனவே, தொழில்முனைவு தொடர்பான வரையறை மேலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் மற்றும் கற்றல்கள், ஒவ்வொருவர் ஆளுமை மற்றும் அவர்கள் இலக்குகளை பிரதிபலிக்க வேண்டும்.


இரண்டாவதாக, வளர்ச்சி மற்றும் புகழுக்கான வேட்கையில் நாம் பெரும்பாலும் தவறவிடும் பல திருப்பங்கள் மற்றும் இடை நிறுத்தங்கள் இந்த பயணத்தில் உள்ளன. எங்கள் தரவுகள், ஊக்கம் மிகு நிறுவனர்களுடனான நேர்காணல்கள், எங்கள் கதைகள், எங்கள் நிகழ்ச்சிகள் வாயிலாக 14 ஆண்டுகளுக்கான கற்றல்கள் எங்களிடம் உள்ளன.


கடந்த 14 ஆண்டுகளில், ஸ்டார்ட் அப்’களை கவனிப்பது, பின் தொடர்வது என ஒவ்வொரு நாளும் ஸ்டார்ட் அப்களுடன் இருந்து வருகிறோம். பல தோல்விகள், பல வெற்றிகளை அருகாமையில் பார்த்திருக்கிறோம். அதோடு, எங்கள் சொந்த தவறுகள் மற்றும் எதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பதையும் நெருக்கமாக கவனித்திருக்கிறோம்.


இந்த தேசிய ஸ்டார்ட் அப் தினத்தில், எங்கள் நிறுவனர் சமூகமாகிய உங்களுக்கு இவை அனைத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். அதனால்தான், ‘யுவர்ஸ்டோரி பல்கலைக்கழகம்’ ’YourStory University' துவக்குகிறோம்.


இங்கு, பெரும் ஈடுபாட்டு உணர்வுடன், தயாரிப்பு கைகோர்க்கிறது. 1.2 லட்சம் கதைகளை நெருக்கமாகக் கவனித்து, பதிவு செய்துள்ளதன் மூலம் கிடைத்த கள கற்றல்களை, உங்களது பயணத்தில் நீங்கள் விரும்பிய வகையில் பயன்படுத்திக்கொள்வதற்காக நடைமுறை கற்றல்களின் வடிவில் இங்கு வழங்குகிறோம்.

வெற்றிகளுக்கு மற்றும் பலமுறை சவால்களுக்கும், தோல்விகளுக்கும் வித்திட்டுள்ள மையத் திறன்கள் எவை? உங்கள் பயணத்தை மேற்கொள்ளும் போது, இவற்றை நீங்கள் கற்றுக்கொள்வதும், தயாராவதும் எப்படி? உங்கள் ஸ்டார்ட் அப் பயணத்தின் போது, நீங்கள் மீண்டும் மீண்டும் அணுகக் கூடிய, திரும்பிச்செல்லக் கூடிய கற்றல்கள் இவை.

மேலும், யுவர்ஸ்டோரி பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவுப் பயணத்தை எதிர்கொள்வதை சிறிது எளிதாக்க, பயன்பாடு சார்ந்த பாடத்திட்டங்களை வழங்குகிறோம். இந்தப் பயிற்சி திட்டத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் துவக்குகிறோம். படிப்படியாக மற்ற மொழிகளில் கற்றல்களை வழங்குவோம். இவற்றோடு, இந்திய தொழில்முனைவோர் பயணக் கதைகளை வேராகக் கொண்ட, ஒப்பிடுவதற்கான அறிக்கைகள், வளர்ச்சி வரைவுகள், உதாரண ஆய்வுகள் ஆகியவற்றை வழங்க உள்ளோம்.


முதல் பாடத்திட்டத்தை இந்த ஜனவரி மாதம் துவக்குகிறோம். ’தொழில்முனைவின் பஞ்சதந்திரம்’ என இதை அழக்கிறோம். ஒவ்வொரு தொழில்முனைவோரும் அவர்கள் ஈடுபட உள்ள துறை அல்லது நிலையை பொருட்படுத்தாமல், பெற்றிருக்க வேண்டிய ஐந்து அடிப்படை திறன்களாக இவற்றை கருதுகிறோம்.

கற்றல்

இந்த மூன்று மாத பாடத்திட்டம் மூலம், உங்கள் கதையை உருவாக்கிக் கொள்வதற்கான சாதனங்களை வழங்குவதோடு, அவற்றின் உள்ளார்ந்த கற்றல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சக்கூடிய தொழில்முனைவு ஆளுமைகளை கொண்டு வருகிறோம்.


இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், இந்தியா 5 லட்சம் கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருளாதாரமாக உருவாக வேண்டும் என்றால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நம்மைப்போன்ற ஒவ்வொரு தொழில்முனைவோரும் முக்கியப் பங்கு ஆற்றுவதாக, ஆற்ற வேண்டும் என நம்புகிறோம்.

நாடு முழுவதும் மேலும் 5 மில்லியன் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதில் ஆழமாக ஈடுபாடு கொண்டுள்ளோம். இதை நாங்கள் வாழ்ந்து வருவதோடு அழமாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். எங்களின் இந்த முயற்சியில் இணையுங்கள்.

எங்கள் யுவர்ஸ்டோரி பல்கலைக்கழகத்தில் இன்றே இணையுங்கள். ஏனெனில், கற்றல் என்பது என்றென்றும் தொழில்முனைவோருக்கான பயணம் என்பதில் என்னோடு உடன்படுவீர்கள்.


கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா


Edited by Induja Raghunathan