'Tamil Nadu Story’ - யுவர்ஸ்டோரி நடத்தும் சிறந்த தொழில் தலைவர்கள் மாநாடு!
'சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் தொழிலில்’ வெற்றிக் காண்வதற்கு என்னத் தேவை? என தொழில் சார்ந்த கேள்விகளை விருந்தினர்களாக வருகை தரவுள்ள தமிழகத்தின் தொழில் முனைவு சூப்பர் ஸ்டார்களிடம் நீங்கள் கேட்டறிய உடனே பதிவு செய்யுங்கள்!
நாட்டில் வணிக முதலீடுகளுக்கு மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்பதனை சுலபமாகச் சொல்லிவிடலாம். சுற்றளவின் அடிப்படையில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பெற்றிருப்பதோ இரண்டாம் இடம்.
கடந்த சில தசாப்தங்களில், பல உற்சாகமான தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகள் யுவர்ஸ்டோரி ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப இயக்கப்பட்ட சேவை (IT and ITES) துறைகளில் சாதித்தோரின் வெற்றிப் பயணங்களை பகிர்ந்துள்ளோம்.
தமிழகத்தில் தொடங்கப்பட்டு சர்வதேச அளவில் வெற்றி கண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் Freshdesk முதல் Indix, Zoho என யுவர்ஸ்டோரி பெருமைப்படுத்தி வெற்றிக்கண்ட தொழில் முனைவோர்கள் எக்கச்சக்கம்.
தமிழக தொழில் முனைவர்களைக் கொண்டாடும் ‘சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை’ மையப்படுத்திய யுவர்ஸ்டோரியின் பிரம்மாண்ட விழா ’தமிழ்நாடு ஸ்டோரி’ (Tamil Nadu Story) சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அதன் முதன் பதிப்பை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பிற ஊர்களின் தொழில் முனைவர்களை சந்தித்து அவர்களின் கதைகளையும் வெளியே கொண்டு வரும் வகையில், கோவை மற்றும் மதுரையில், ‘தமிழ்நாடு ஸ்டோரி’ விழாவை நடத்தினோம்.
மீண்டும் இந்த ஆண்டின் ‘தமிழ்நாடு ஸ்டோரி’ 2ம் பதிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. இம்முறை ’Tamil Nadu as a leading state for Entrepreneurship, Investment and Industrial Growth' (தமிழ்நாடு; தொழில்முனைவு, முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உகந்த முதன்மை இடம்’) என்ற தலைப்பில் இவ்விழாவை வடிவமைத்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் உள்ளார்ந்து ஆராய்ந்து கண்டறியும் நோக்கில் ஒரே மேடையில், முக்கிய வர்த்தகத் தலைவர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள், முதலீட்டார்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை ஒன்று சேர்த்துள்ளோம்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழக தொழிற்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் மற்றும் தமிழக அரசின் தொழிற்துறை முதன்மை செயலாளர் திரு.எம்.முருகானந்தம் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று ’கருத்து பரிமாற்ற மேடைகள்’ இடம்பெறுகிறது. அதில் ஒவ்வொரு குழுவிலும் அந்தந்த துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.
- Key to entrepreneurship success in Tamil Nadu - இதில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்’கள் மற்றும் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளனர்.
- Success secrets of No 2 industrial growth state - தமிழகம் தொழில் வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பதற்கான வெற்றி ரகசியங்கள் என்ன என்பது பற்றி சிறு, மற்றும் மத்திய நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்முனைவர்கள் மற்றும் அரசின் எஸ் எம் இ துறை வல்லுனர்கள் விவாதிப்பார்கள்.
- Invest in TN - Why Tamil Nadu is a favorite investment destination? How can we improve? - முதலீடுகளுக்கு ஏன் தமிழ்நாடு சிறந்த இடம் என விவாதிக்கப்படும். மேலும் முதலீடுகளை பெருக்க என்னென்ன செய்ய முடியும் என்றும் பேசப்படும்.
கருத்தரங்குகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ‘ஸ்டார்ட்-அப் அரினா’ என்ற புதிய நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு/சேவையை காட்சிப்படுத்தும் நிகழ்வும் மற்றொரு ஹாலில் நடைப்பெறும்.
அதுமட்டுமின்றி, யுவர்ஸ்டோரியின், ‘தமிழ்நாடு ஸ்டோரி’ நிகழ்ச்சியின் முதன்மை ஸ்பான்சரான ‘ஜோஹோ’ நிறுவனம், நடத்தும் ’Adopting Technology as you set up, start off and scale up your business - Why When and how?’ என்ற தலைப்பில் ஸ்டார்ட்-அப் நிறுவனர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறை நடத்த உள்ளனர். இதில் தொடக்க நிறுவனங்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
’தமிழ்நாடு ஸ்டோரி’ நிகழ்ச்சியில் பல முன்னணி நிறுவனத்தின் நிறுவனர்கள், வல்லுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர். Bank Bazaar இணை நிறுவனர் ரதி ஷெட்டி, அடையார் ஆனந்த பவன், நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசா ராஜா, Zoho corp, இஞ்சினியரிங் இயக்குனர் ராஜேந்திர தண்டபாணி, Peepul capital இயக்குனர் வி.ஸ்ரீனி, Blackboard இயக்குனர் எம்.எஸ்.பாலா, Zoho ஸ்டார்ட்-அப் சர்வதேச தலைவர் குப்புலஷ்மி, நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே.குமாரவேல், அமேசான் கிண்டில் இயக்குனர், மணிகண்டன், Park institutions சிஇஒ அனுஷா ரவி, நேட்டிவ் லீட் நிறுவனர் சிவராஜா ராமனாதன், edi (TN) கூடுதல் இயக்குனர் ஷஜீவனா உள்ளிட்ட பலரும் யுவர்ஸ்டோரி-ன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தமிழகத்தில் கோலோச்சி வெற்றிக் கண்ட சிறந்த ப்ராண்ட் தலைவர்களை கெளரவிக்கும் விருது வழங்கும் விழாவும் நடைப்பெறுகிறது.
தமிழகத்தில் ‘சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் தொழிலில்’ வெற்றிக் காண்வதற்கு என்னத் தேவை? என்பது தொடங்கி உங்களுக்குள் இருக்கும் பல தொழில் சார்ந்த கேள்விகளை விருந்தினர்களாக வருகை தரவுள்ள தமிழகத்தின் தொழில் முனைவு சூப்பர் ஸ்டார்களிடம் நீங்கள் கேட்டறியலாம்.
எங்கு..? எப்போது..?
தேதி : செப்டம்பர் 26ம் தேதி
இடம் : க்ரவுன் பிளாசா (அடையார் கேட்), டிடிகே ரோடு, சென்னை.
நேரம் : மதியம் 3.30 மணி முதல்...
எனவே, சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களே, வளர்ந்துவரும் ஸ்டார்அப் நிறுவனர்களே, முதலீட்டாளர்களே மற்றும் சூழல் பயனாளர்களே அனைவரையும் எங்கள் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்.
தமிழ்நாடு ஸ்டோரி நிகழ்ச்சியில் பங்கபெற விரும்புவோர் இங்கே பதிவு செய்யுங்கள்
மேலும் தகவல்கள், மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு: events.yourstory.com
ஸ்டார்ட்-அப் அரினா, மற்றும் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்பும் ஸ்டார்ட்-அப்’கள் உங்கள் விவரங்களை [email protected] என்ற மெயிலுக்கு அனுப்பிடுங்கள்.
இந்த அற்புதமான நிகழ்வை நீங்கள் ஏன் மிஸ் பண்ணக்கூடாது? என்பதற்கு நிறைய காரணங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம் என நம்புகிறோம். மிஸ் பண்ணீராதீங்க... அப்பறம் வருத்தப்படுவீக...!