6000 மாதச் சம்பளத்தில் இருந்து ஃபிளிப்கார்ட்டில் பல கோடி ரூபாய் மதிப்பு விற்பனையாளரான இளைஞர்!

பிளிப்கார்ட் மூலம் ஆன்லைன் விற்பனையில் தடம் பதித்து சொந்த பிராண்டை உருவாக்கியுள்ள இளைஞரின் வெற்றிக்கதை
1 CLAP
0

முப்பது வயதான, இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரான ஹரீஷ் தரம்தசானி, ஃபிளிப்கார்ட்டில் வெற்றிகரமான காலணி வர்த்தகத்தை நடத்தி வருகிறார். அவரது பிராண்டான ‘லயசா’ (Layasa) இந்த இ-காமர்ஸ் மேடையில் மாதம் மூன்று கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாகம் நிச்சயமற்றத்தன்மையை எதிர்கொள்ளும் மற்ற தொழில்கள் போல அல்லாமல், இந்த பண்டிகை காலத்தில் நல்ல விற்பனையை எதிர்கொள்ள முடியும் என ஹரீஷ் நம்புகிறார். 

“பொதுமுடக்கம் துவங்கியது முதல், எங்கள் வாடிக்கையாளர் பரப்பு அதிகரித்திருப்பதை பார்க்கிறேன். எனவே இந்த பண்டிகை காலத்திலும் நல்ல விற்பனையை எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் ஹரீஷ். இதற்கான தயாரிப்பை ஆறு மாதங்களுக்கு முன் துவக்கினார்.

“தயாரிப்புகளை ஸ்டாக் செய்திருப்பதுடன், இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கான சிறப்பு விற்பனை பட்டியலையும் தயாரித்துள்ளோம். வாடிக்கையாளர் விருப்பம் மற்றும் போக்குகளுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது. அதிகரிக்கும் தேவைக்கு ஈடுகொடுக்க மேலும் ஊழியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் ஹரீஷ்.

பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக தயாராக காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு அதிகரித்தத் தேவையை எதிர்பார்க்காமல் போதிய கையிருப்பு இல்லாமல் போனது தான்.

“இந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் வேர்ஹவுசில் ஏற்கனவே ஸ்டாக் செய்திருக்கிறோம்.”

ஃபிளிப்கார்ட் மையங்களை அவர் பயன்படுத்திக்கொள்வது இது முதல் முறை அல்ல. தேசிய பொதுமுடக்கத்தின் போது அவர் 70 சதவீத சரக்கை ஃபிளிப்கார்ட் மையங்களுக்கு அனுப்பி வைத்தார்.

“குறைந்தபட்ச ஊழியர்களுடன் பணியாற்றி வருகிறோம். ஆனால் இது விற்பனையை பாதிப்பதை விரும்பவில்லை. ஆனால், இது நல்ல முடிவாகவே தோன்றுகிறது. என்னால் வர்த்தகத்தை எளிதாகவே நடத்த முடிகிறது. ஃபிளிப்கார்ட் பொருட்களை திரும்பி அனுப்புவதையும் சேர்த்து கவனித்துக்கொள்கிறது,” என்கிறார் ஹரீஷ்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்திற்காக ஆதரவு அதிகரித்து வந்தாலும், பெருந்தொற்று இதற்கான கூடுதல் உந்துதலாக அமைந்துள்ளது என்கிறார் ஹரீஷ். ஆப்லைன் கடைகளில் புதிய பொருட்களைக் கொண்டு வருவது இப்போது சவாலாக இருப்பதாலும் பலரும் ஆன்லைன் வர்த்தகத்தை விரும்புகின்றனர் என்கிறார்.

ஆன்லைன் விற்பனை

ஹரீஷின் வர்த்தகம் கடந்த ஆண்டுகளில் சீராக வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த இடத்திற்கு வர அவருக்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டது. அவரது தந்தை ராஜஸ்தானின் காலணி வர்த்தகம் செய்து வந்தார். எனினும் அவரது திடீர் மரணம் குடும்பம் மற்றும் வர்த்தகத்தை பாதித்தது.

“என் தந்தைக்குப் பிறகு அவரது வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த விரும்பினேன். ஆனால் விற்பனை சரியாக இல்லை. எனவே ஆப்லைன் கடையை மூடிவிட்டு ஆக்ராவில் மொத்த விற்பனை கடையில் பணியாற்றத்துவங்கினேன்”.

வேலை பார்க்கத்துவங்கிய போது மாதம் 6,000 கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகள் அவர் கடினமாக உழைத்தார்.

“மாதம் 30,0000 சம்பாதித்தேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. சொந்தமாக ஏதாவது செய்ய விரும்பினேன், என்பவர் 2014ல் ஆன்லைன் வர்த்தகம் நல்ல வாய்ப்பாக உருவாவதைக் கவனித்தார்.”

“ஆன்லைன் வர்த்தகத்தை முதலில் நான் நம்பவில்லை. ஆன்லைனில் விற்று எப்படி லாபம் பார்க்க முடியும் என நினைத்தேன். நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருந்தன. ஆனால் ஆன்லைனில் விற்பவர்களுக்கு 30,000- 40,0000 ஆர்டர்கள் வருவதை பார்த்த போது நானும் முயற்சிக்க தீர்மானித்தேன்”.

ஹரீஷ் ஆண்களுக்கான காலணி பிராண்டான லயசாவை 2015ல் துவக்கி ஃபிளிப்கார்ட்டில் விற்கத்துவங்கினார்.

“பதிவு செய்து கொண்டவுடன், எனக்கென ஒதுக்கப்பட்ட கணக்கு மேலாளர், ஆன்லைன் விற்பனை எனக்கு புதியது என்பதால் முழு செயல்முறை அடிப்படைகளையும் விளக்கினார். பட்டியலிடுவது மற்றும் விற்பனை தொடர்பான முழு வடிகாட்டுதல் கிடைத்தது,” என்கிறார்,

முதல் நாளில் இருந்தே ஆர்டர் வரத்துவங்கியது. ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் போகப்போக சீராகியது.

”2015ல் நான் விற்பனையை துவக்கிய போது, மனைவி மட்டும் தான் உதவியாக இருந்ததால் 1,000 சதுர அடி பரப்பில் இருந்து செயல்பட்டோம். 5 ஆண்டுகளில் 30 பேர் அணியாக வளர்ந்திருக்கிறோம் மற்றும் மூன்று வேர்ஹவுஸ்கள் உள்ளன,” என்கிறார் ஹரீஷ்.

இப்போது, ஹரீஷ் குழந்தைகள் காலணியையும் சேர்த்திருக்கிறார். பெண்கள் காலணியையும் அறிமுகம் செய்ய இருக்கிறார். வேகமாக வளரும் வர்த்தகத்தில் சில நேரங்களில் தரம் பிரச்சனையாகலாம். இங்கு தான் வாடிக்கையாளர்கள் கருத்தில் கவனம் செலுத்த வேண்டும்,.

“நியாயமான விலையில் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். வாடிக்கையாளர்கள் கருத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அவர்கள் கருத்துகள் பொருட்களின் தரத்தை மேம்படுத்த உதவியிருக்கிறது.”

இந்த நிலையை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ஹரீஷ். இப்போதும் கூட, அவர் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். ஆனால் வளர்ச்சியில் ஃபிளிப்கார்ட் முக்கியப் பங்கு வகித்தது என்கிறார்.

“வளர்ச்சிக்கான பாதையில் தேவையான ஆதரவை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது. முதல் முறை தொழில்முனைவோர் என்ற முறையில் துவக்கத்தில் வழிகாட்டுவது முதல் பல கோடி வர்த்தகத்தை அடைவது வரை வழிகாட்டுகிறது,” என்கிறார்.

இப்போது திரும்பிப் பார்க்கையில், தொழில்முனைவோராக என் பயணத்தை ஃபிளிப்கார்ட்டில் துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

பிராண்ட் மதிப்பு

ஃபிளிப்கார்ட்டில் வர்த்தகம் செய்யத்துவங்கியது தன் வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது என்கிறார்.

“இன்று நான் உருவாக்கியுள்ள வர்த்தகம் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. ஆக்ராவில் இருந்து சிறந்த விற்பனையாளர் விருதை ஃபிளிப்கார்ட்டிடம் இருந்து பெற்றுள்ளேன். எனினும், என்னுடைய மிகப்பெரிய மைல்கல் லயாசா பிராண்டாகும். என் பெயர் தெரியாதவர்கள் கூட இந்த பிராண்டை அறிந்திருப்பார்கள். ஒரு பிராண்டை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம். ஃபிளிபார்ட்டில் ஐந்தாண்டுகளில் பிராண்டை உருவாக்கியுள்ளேன். இது மகத்தானது என நினைக்கிறேன்.”

ஆங்கிலத்தில்: டீம் யுவர்ஸ்டோரி | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world