முன்னறிவிப்பின்றி கிரிப்டோ யூடியூப் சேனல்களுக்கு தடை: மன்னிப்பு கோரிய யூடியூப்!

By Durga
யூடியூப் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல கிரிப்டோ கல்வி சேனல்களை தடை செய்து அறிவித்திருக்கிறது.
0 CLAPS
0

யூடியூப் நிறுவனம் முன்னறிவிப்பு மற்றும் எந்தவித எச்சரிக்கையின்றி பல கிரிப்டோ கல்வி சேனல்களை தடை செய்து அறிவித்திருக்கிறது. இதில் சுமார் 1,50,000 சந்தாதாரர்களைக் கொண்ட ’Bankless' என்ற யூடியூப் சேனலும் முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிரிப்டோகரன்சி அடிப்படையிலான கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்தக் கூடிய பல சேனல்களை யூடியூப் தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமாக அவுட்லெட் பேங்க்லெஸ் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல கிரிப்டோ கல்வி சேனல்களை தடை செய்து அறிவித்திருக்கிறது. 1,50,000 சந்தாதாரர்களைக் கொண்ட 'பேங்க்லெஸ்' யூடியூப் சேனலானது, Ethereum-ஐ மையாகக் கொண்ட பல்வேறு உள்ளடக்கத்தை வழங்கியது. முன்னறவிப்பின்றி பேங்க்லெஸ் தடை செய்யப்பட்டிருப்பதையடுத்து, பேங்க்லெஸ் 187,000+ பின்தொடர்பவர்களை கொண்ட தனது டுவிட்டர் கணக்கில் ஒரு டுவிட்டை பதிவிட்டிருந்தது. அதில்,

"பேங்க்லெஸ் யூடியூப் கணக்கு நிறுத்தப்பட்டது, எச்சரிக்கை இல்லை, அறிவிப்பு இல்லை, எந்த நியாயமும் இல்லை. 150,000 பின்தொடர்பவர்கள், 10,000+ மணிநேர உள்ளடக்கம்," என பதிவிடப்பட்டிருந்தது.

பேங்க்லெஸ் பதிவிட்ட டுவிட்டை தொடர்ந்து, யூடியூப்பில் செல்வாக்கு செலுத்தும் கேப்ரியல் ஹெயின்ஸின் சேனல் மற்றும் ஆப்டிமிசம் பிளாக்செயின் சேனல்கள் போன்ற கணக்குகளும் தடை செய்யப்பட்டது என தெரியவந்தது. பேங்க்லெஸ் டுவிட்டுக்கு யூடியூப்பின் வாடிக்கையாளர்கள் சேவை குழு பதிலளித்துள்ளது.

அதில், பேங்க்லெஸ் யூடியூப் சேனல் மீட்டமைக்கப்படும் எனவும் தவறுக்கு மன்னிக்கவும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல், தடை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பிற சேனல்கள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஹெய்ன்ஸின் யூடியூப் சேனல் இன்னும் மீட்டமைக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழில்: துர்கா

Latest

Updates from around the world